அமெரிக்காவில் யோகா

Spread the love

நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய யோகா, இன்று அமெரிக்க கலாசாரத்தில் ஒர் அங்கமாக ஆகிவிட்டது. யோகா பயில்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.

டென்ஷன் நிறைந்த வேலைகளினால் அமெரிக்கர்கள் மன அமைதிக்கு யோகாவை நாடுகின்றனர்.

15 மில்லியன் அமெரிக்கர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பயிற்சிகளில் ஏதாவது ஒரு யோகாப்யாசத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள தேகப்பயிற்சி சாலைகளில், 75%, யோகாவையும் ஒரு பயிற்சியாக கற்றுத் தருகின்றனர்.

அமெரிக்கர்களுக்கு யோகா மீது இத்தகைய மோகம் ஏற்பட காரணம் புகழ் பெற்ற பாப்பிசை (Pop) கலைஞர்களான பீட்டில்ஸ், பிரபல ஹாலிவுட் நடிகை மியாஃபாரோவும், 1968 ல் இந்தியா வந்து, மகரிஷி மகேஷ் யோகியை அணுகி, யோகாவில் ஈடுபட்டது தான். யோகாவின் புகழை பெருக்கியவர்கள் பிரபல அமெரிக்க நடிகர், நடிகைகளும் ஆவர்.

நியூ-யார்க்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் இதய நோய்களின் நிபுணரான டாக்டர் ஒருவர் கூறியது – உடற்பயிற்சிகள் நிணநீர் (Lymph) தங்கு தடையின்றி உடலெங்கும் பரவுவதை ஊக்குவிக்கிறது. ஆனால் யோகாசனங்கள் நிணநீர் சுரப்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் அவை உடலெங்கும் பரவிய பின், வெளியே வடிகால்களாகவும் உதவுகின்றது.

மற்றொரு அமெரிக்க நிபுணர் கூறுவது – யோகா அமைதிப்படுத்துகிறது. அதனால் நோய்களை குணப்படுத்துகிறது. பிராணாயாமம் மற்றும் யோகாசனங்கள் செய்யும் போது தசைகள் விரிந்து, சுருங்கி பயிற்சி பெறுவதால் தசைகள் சீராகின்றன. இதயத்துடிப்பு குறைகிறது, சுவாசம் குறைகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது, இதனால் உடல் குணமடைகின்றது.

யோகாவை இதர உடற்பயிற்சிகளைப் போல், உடல் வருந்த, மெய்வருந்த செய்ய தேவையில்லை. உடலை துன்புறுத்தாமல் நிதானமாக யோகாசனங்களை செய்யலாம்.

பல நோய்களின் காரணம் மனஅழுத்தம், மருந்துகளும் பதில் யோகாவே சிறந்தது. உடலுக்கு வலிமையை உண்டாக்கி மனச்சாந்தியை தரும் யோகா ஒரு இயற்கை சிகிச்சை முறை. யோகாவை எளிமையாக செலவின்றி வீட்டிலேயே செய்யலாம். எனவே யோகா ஒரு வரப்பிரசாதம். இதை சொல்லியிருப்பவர் டாக்டர் டிமோதி மெக்கால் (Dr. Timothy Mccall). இவர் பாஸ்டனில் உள்ள ஙி.ரி.ஷி. ஐயங்காரின் யோகப் பள்ளியில் யோகாவை கற்பிக்கிறார்.

யோகாசனங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. உயர் ரத்த

அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வரும் பாதிப்புகளை குறைத்து ரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. யோகாசனங்கள் மாதவிடாய் நிரந்தரமாக நின்று விட்ட பெண்மணிகளுக்கு உகந்தவை. அமெரிக்காவின் பாஸ்டனில் “மனம் – உடல் மன்றம் (Mind Body Institute) ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் முன் குனிந்து செய்யும் பல யோகாசனங்களை “மெனோ – பாஸ்” ஆன பெண்களுக்கு கற்றுத்தருகிறது. இந்த ஆசனங்கள், நாளமில்லா சுரப்பிகள் அடங்கியுள்ள உடல் பாகங்களை மிருதுவாக அழுத்தி மசாஜ்செய்யும் – ஹார்மோன் மருந்துடன் சேர்த்து இந்த ஆசனங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆன்மீகம் (குண்டலினி)

அறிவும் ஆரோக்கியமும் மேம்பட பிராண சக்திதங்கு தடையின்றி உடலுள் பரவ வேண்டும்.

எட்டு சக்கரங்களில் 7 சக்கரங்கள் சமநிலையில் சீராக இருக்க வேண்டும்.

ஐந்து மேற்புர சக்கரங்கள் ஆன்மீக சிந்தனை பகுதிகள் கீழ் மூன்று சக்கரங்கள் சரீர சம்மந்த தேவைகளை கவனிக்கின்றன.

விஞ்ஞானம்

மூச்சுப்பயிற்சிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை குறைக்கின்றன.

உடலை “நீட்டுவிக்கும்” ஆசனங்கள் நிணநீர் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.

யோகாசனங்கள் தசைகளை ஆரோக்கியமாக வைக்க, உடல் மூட்டுக்கள் பாதிக்கப்படாமல் வலிவுற உதவுகின்றன.


Spread the love