யோகா என்பது நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஓர் ஒப்பற்ற பயிற்சியாகும்.
நம் நாட்டில் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரிஷிகளும், முனிவர்களும் தொடர்ந்து மேற்கொண்ட தவத்தில் கிடைத்த பொக்கிஷம் தான் யோகக் கலை. உலகம் முழுவதும் பரவி இன்று உலக மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள யோகாக் கலையின் பிறப்பிடம் நம் இந்தியா என்பதில் அனைத்து இந்தியர்களும் பெருமைப்படலாம்..
யோகாசானத்தின் உச்சநிலையை அடைந்தவுடன் எத்தனை முறை மூச்சை உள்வாங்கி வெளி விடுகிறோம் என்பது மட்டும் தான் முக்கியம். ஒவ்வொரு ஆசனத்தின் உச்சநிலையிலும் குறைந்தது 10 – 12 முறையாவது மூச்சை உள்வாங்கி வெளி விடுவது அவசியம். முன் புறம் குனிந்த நிலையில் உச்சநிலையில் ஒரிரு எண்ணிக்கைகளை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம்.
யோகாவின் சிறப்பு அம்சங்கள்
• யோகா செய்யும் முன் மருத்துவரையோ அல்லது யோகா நிபுணரையோ சந்தித்து ஆலோசனை பெற்று செய்வது அவசியம். இதர மருந்து முறைகளுடன் இணைந்து செய்யலாம். சில நோய்களுக்கு குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் யோகா சிகிச்சையும் மேற்கொண்டால் சிறந்த பலனைப் பெறலாம்.
• யோகா மனித வாழ்வின் ஐந்து “கவச உறைகளை” குறிப்பிடுகிறது.
அவை உடல் பிராணன் (நாடிகள் வழியே பெருகும் ஜீவசக்தி) மனம், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் உண்டாகுமிடம்.
• ஞானம், அறிவு ஆத்மா, பரமானந்த நிலை. முதல் மூன்று நிலைகள் பாதிக்கப்பட்டால் உடலின் சக்தி உடல் முழுவதும் சரிவர பரவாமல் நோய்கள் தோன்றும்.
• நோய் ஏதும் இல்லாத நிலையில் யோகாசனம் செய்வதால் நோய்களை தடுக்கலாம். 30 லிருந்து 40 வயதிற்குள் யோகாவை பயின்று செயல்படுத்துவது நல்லது.
அதீத உடல் பருமன், ஆஸ்துமா நோயாளிகளுக்கு யோகா ஒரு வரப்பிரசாதம்.
யோகப் பயிற்சியின் நோயை குணமாக்கும் தன்மை, யோகப் பயிற்சிகள் கீழ்க்கண்டனவற்றை அங்கமாக கொண்டுள்ளன.
நற்காரியங்கள் (சத்கிரியா) இதனால் உள்ளமும், உடலும் தூய்மை அடைகின்றன. இதன் விவரங்கள் “சத்கர்மங்கள்” என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன.
யோகாசனங்கள் – உடலின் உள்ளுறுப்புகள், தசைகள் இவற்றிற்கு வலிமை சேர்க்கின்றன. பிராணாயாமா – ‘பிராண’ சக்தியை உடலெங்கும் பரவ செய்யப்படும் ‘மூச்சுக்‘ கட்டுப்பாடு பயிற்சியாகும்.
தியானம் – தன்னைத் தானே அறிய உதவும் தியானம் மன அமைதியை தரும்.
யோக முத்திரைகள் யோகாவின் ஒரு பாகம். இந்த முத்திரைகள் உடலில் நாளமில்லா சுரப்பிகள் இருக்கும் இடத்திலேயே சுரூபமாக இருப்பவை. யோக முத்திரை பயிற்சிகள் இவற்றை ஊக்குவிக்கும்.
யோகத்தை பயின்று கடைப்பிடிக்க நம்பிக்கையும், மன உறுதியும் மிகவும் அவசியம். பயின்ற பின் கிடைக்கும் பலன்கள் உடல், உள்ளங்களின் முழு ஆரோக்கியம்.
ஆயுர்வேதம்.காம்