கண்ணைக் காக்கும் சூப்பர் ‘யோகா’

Spread the love

உடலில் உள்ள உறுப்புகளில், இந்த உலகைக் காண உதவும் ஸ்பெஷல் உறுப்புதான் ‘கண்’. பொதுவாக ‘யோகா’ என்றாலே உடலை வளைத்து, கால், கைகளை நீட்டி மடக்கி செய்வது மட்டும்தான் என்று எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டும். ஆமாங்க. கண்களுக்கும் யோகா இருக்கிறது.

என்னென்ன பார்ப்போம்

பால்மிங் நாற்காலியிலோ அல்லது சம்மணமிட்டு உட்கார்ந்தோ இந்த பால்மிங் பயிற்சி பண்ணலாம். திண்டு அல்லது தலையணையை மடியில் வைத்து அதன் மீது முழங்கைகளை அழுத்திக் கொள்ள வேண்டும். இனி உள்ளங்கைகளை வைத்து கண்களை மூடிக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விட்டுக் கொண்டு பத்து நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சியைத் தொடரலாம். இப்படிச் செய்யும்போது மனதில் இயற்கைக் காட்சகளையோ அல்லது மனதுக்குப் பிடித்த விஷயங்களையோ நினைத்து மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சார்ட் ரீடிங்

நாற்காலியில், நேராக அமர்ந்து, பெரியதும் சிறியதுமாய் ஆங்கில எழுத்துக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட சார்ட்டை கண்ணுக்கு அரையடியில் இருந்து ஒரு அடி தூரத்துக்குள் பிடித்துக் கொள்ள வேண்டும். அடுத்தது நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து ஆறு அடி தூரத்தில் சுவரில் இன்னொரு சார்ட்டை மாட்டி விட வேண்டும். இப்போது கண்ணுக்கு அருகில் இருக்கும் சார்ட்டில் உள்ள பெரிய எழுத்தை வாய்விட்டுப் படிக்க வேண்டும். படித்து முடித்த உடனே கண் சிமிட்டிவிட்டு சுவரில் உள்ள சார்ட்டில் இருக்கும் எழுத்துக்களை படிக்க வேண்டும். படித்து முடித்து இங்கேயும் கண் சிமிட்ட வேண்டும். இப்படியே மாற்றி மாற்றி மொத்த எழுத்துக்களையும் படித்து முடிக்க வேண்டும். இப்படிப் படிப்பதன் மூலம் கான்சன்ட்ரேஷன் பவர் அதிகரிக்கும். பார்வையும் கூர்மையடையும்.

கேண்டில் லைட் பயிற்சி

இருட்டறையில் அமர்ந்து கொண்டு ஒரு மெழுகுவர்த்தயை ஏற்றிக்கொள்ள வேண்டும். இப்போது கண் பார்வையை மெழுகுவர்த்தயின் வெளிச்சத்தின் மீது செலுத்தி ஒன்று முதல் பத்துவரை எண்ண வேண்டும். எண்ணி முடித்து கண் சிமிட்ட வேண்டும். அடுத்தடுத்தும் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக்கொண்டு கண்ணைச் சிமிட்ட வேண்டும். இதேபோல் மனதை ஒரு நிலைப்படுத்தி 10 நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சியில் ஈடுபடலாம்.

இந்தப் பயிற்சியை ஏழு வயது தாண்டியவர்கள்தான் செய்ய வேண்டும். இருட்டறையில் செய்வதால் சிறியவர்களைத் தனியாகச் செய்ய அனுமதிக்காமல் பெற்றோர் அல்லது பெரியவர்கள் உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஃபைன் பிரிண்ட் ரீடிங்

பத்துப் பதினைந்து வரிகளில் மிகச் சிறிய சைஸில் அச்சடிக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில வாசகங்கள் அடங்கிய பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ஒரு வரியை இடமிருந்து வலமாகப் படித்து முடித்து அடுத்த வரிக்குப் போகும்போது கண் சிமிட்ட வேண்டும். இப்படியே எல்லா வரிகளையும் படித்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு வரியைப் படித்து முடிக்கும்போது கண் சிமிட்ட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

ஓம் சார்ட்

ஒரு பேப்பரில் ‘ஓம்’ படத்தினை வரைந்து கொள்ளவும். பிறகு அந்த ஓம் சார்ட் வட்டத்தின் மேலுள்ள அம்புக் குறியின் ஒரு புள்ளியில் பார்வையச் செலுத்தி அப்படியே நகர்த்தி இன்னொரு முனையில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு அம்புக் குறிகளின் முடிவிலும் இப்படி கண் சிமிட்ட வேண்டும். கடைசி வரை அந்தக் கோடுளை விட்டு கண்கள் நகராமல் பார்வையைச் செலுத்திக் கொண்டு போய் தொடங்கிய இடத்திலேயே முடிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் கண்களில் உள்ள தசைகள் வலுவாகும். நுணுக்மாகப் பார்வையைச் செலுத்துவதால் பார்வைத் திறனும் கூடும்.

ஆயுர்வேதம்.காம்

Buy Our Herb products >>>


Spread the love