யோகா, உடற்பயிற்சி

Spread the love

சர்க்கரை வியாதிகளின் பாதிப்புகள் குறைய யோகா அவசியம். இதன் பலன்கள்:-

    1.        யோகாசனங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அதுவும் பிராணாயமம் டைப் – 1, டைப் – 2 நோயாளிகளில் சர்க்கரை அளவை சீராக்குகிறது.

    2.        நீரிழிவுடன் இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு யோகா அமைதியை உண்டாக்கி, இயற்கையாக உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆனால் ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் ‘சர்வாங்காசனம்’ மட்டும் செய்ய வேண்டாம்.

    3.        உடல் பருமன் குறையும். எல்.டி.எல். குறைந்து எச்.டி.எல். அதிகமாகும். இவை கவனிக்கப்பட்ட, கணிக்கப்பட்ட ஆய்வுகள்.

    4.        யோகா இன்சுலின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் ரிசெப்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன.

    5.        யோகா பயிற்சியில் 2 வாரங்களிலேயே ஒரு அமைதி, ஆரோக்கியம் இவற்றை உணர முடியும்.

    6.        யோகாவை முறைப்படி குருவிடம் கற்றுக் கொள்ளவும். உங்கள் டாக்டரின் அனுமதியும் தேவை. எந்தெந்த ஆசனங்கள் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

மாதிரி ஆசனம்:

                சர்க்கரை நோய் அல்லது கணையம் தன் செயல்பாட்டை இழப்பதால் இதற்கு வயிற்றுப் பகுதியை சீர்படுத்தும் அனைத்து யோகாசனங்களுமே நல்ல பலனைத் தரும் குறிப்பாக மகராசனம் போன்றவை வயிறு இடுப்பு போன்ற பகுதிகளை சீராக இயங்கச் செய்வதால் நல்ல பலன் தரக் கூடியது.

நன்மைகள்:

                மகராசனம் செய்வதால் சுரப்பிகள் சீராக இயங்கும், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மற்றும் வெப்ப ஓட்டம் சீராக அமையும். சர்க்கரை நோய் கட்டுப்படும். ஊளைச் சதை குறையும். உடல் உறுதியாகும். வயிற்றுப்பகுதி முதுகுப் பகுதி இறுகும் கால் வயிறு இடுப்பு, முதுகு போன்றவை பலம் பெறும் பெண்களுக்கு சுரப்பிக் கோளாறுகள் சீராகும். மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். மகப்பேறு எளிதாகும். ஆண் / பெண் மலட்டுத்தன்மை நீங்கும். உடல் சோர்வு நீங்க உடல் புத்துணர்ச்சியும் உத்வேகமும் பெறும்.

முகம் மேல் நோக்கியவாறு மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படம் வி – 1 இல் உள்ளபடி கைகளை உடலுக்கு 45 டிகிரி கோணத்தில் வைத்துக் கொண்டு உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு வைத்துக் கொள்ளவும். பெரு விரலும் ஆட்காட்டி விரலும் சேர்த்தவாறு (சின் முத்திரையில்) வைத்துக் கொள்ளவும். மகராசனத்தின் இந்த முதற் பகுதியைச் செய்யும் வரை சின் முத்திரையிலேயே கையானது தொடர்ந்து இருக்க வேண்டும். உடல் முழுவதும் நல்ல தெய்வீக ஆற்றல் பாய்ந்து நிரம்பிச் சக்தி அளிப்பதாக எண்ணிக் கொள்ளவும்.

நிலை: 1 கால்கள் இரண்டையும் படம் வி – 1 இல் இருப்பது போல, குதிகால்களும் பெருவிரல்களும் ஒட்டி இருக்குமாறு, வைத்துக் கொள்ளவும் (பயிற்சி முடியும் வரை பாதங்கள் இணைந்த படம் வி – 2, வி – 3, வி – 4, வி – 5, வி – 6, படி இப்படியே இருக்க வேண்டும்) பிறகு தலையை வலது புறமாகவும், இடுப்பையும் கால்களையும் இடதுபுறமாகவும் படம் வி – 2, இல் உள்ள படித் திருப்ப வேண்டும். (தோள்பட்டைகள் தரையில் இருந்து உயராதபடி, கவனமாகவும் நிதானமாகவும், இப்பயிற்சிகளைச் செய்யவும்). பிறகு சாதாரணமாக படுத்திருக்கும் நிலைக்கு வரவும். இப்போது தலையை இடது புறத்திலும் இடுப்பை வலது புறத்திலும் வி – 3, இல் உள்ளபடித் திருப்பவும், இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை மாறி மாறிச் செய்யவும். (தலையை வலதுபுறம் திருப்பினால் உடலை இடது புறமும் தலையை இடது புறம் திருப்பினால் உடலை வலது புறமும் திருப்ப வேண்டும். இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்). மகராசனத்தில் மற்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன் இவ்வாறு உடலை முறுக்கும் இந்தப் பயிற்சியில் முழுத்திறமை பெற்றுவிட வேண்டும்.

நிலை: 2 படம் வி – 4 இல் உள்ளபடி முழங்கால்களை உயர்த்தி கால்களை மடக்கிக் கொள்ளவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குத் தொடைகளோடு குதிகால்களை அனைத்து வைத்துக் கொள்ளவும். படம் வி – 4 இல் காட்டியபடியே ழுழங்கால்களும் பாதங்களும் ஒட்டிச் சேர்ந்து இருக்க வேண்டும். இந்த நிலையில் படங்கள் வி – 2, வி – 3, இவற்றில் செய்தது போல ஒவ்வொரு பக்கமும் ஒரு தடவை படம் வி – 5, வி – 6, இல் உள்ளபடி உடலைத் திருப்பவும்.

நிலை: 3 கால்களை நீட்டி வலது பாதத்தை இடது பாதத்தில் கணுக்காலுக்குக் குறுக்கே படம் வி – 7 இல் உள்ளவாறு வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் படம் வி – 8 இல் காட்டியபடி முன் பயிற்சிகளில் செய்தவாறு ஒவ்வொரு பக்கமும் மூன்று தடவை உடலைத் திருப்பவும்.

நிலை: 4 இடது பாதத்தை வலது பாதத்தின் கணுக்காலுக்குக் குறுக்கே படம் வி – 9 இல் காட்டியபடி வைத்துக் கொள்ளவும். பின்னர் படம் வி – 10 இல் உள்ளவாறு முன் பயிற்சிகளில் செய்தவாறே ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை மாறி உடலைத் திருப்பவும்.

நிலை: 5 வலது குதிகாலை இடது கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் படம் வி – 11 இல் காட்டியபடி வைத்துக் கொள்ளவும். பின் படம் வி – 12 இல் காட்டிய படி முன் பயிற்சிகளில் செய்தவாறே ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை மாறி மாறி உடலைத் திருப்பவும்.

நிலை: 6 இடது குதிகாலை வலது கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் படம் வி – 13 இல் உள்ளபடி வைத்துக் கொள்ளவும். பின் படம் வி – 14 இல் உள்ளவாறு முன் பயிற்சிகளில் செய்தவாறே ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை மாறி மாறி உடலைத் திருப்பவும்.

நிலை: 7 படம் வி – 15 இல் உள்ளவாறு கை விரல்களை மடக்கி வைத்துக் கொள்ளவும். இரு கால்களையும் உயரத் தூக்கியவாறு வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரே சமயத்தில் வலது காலையும் வலது கையையும் முழுவதும் மடக்குவது – அதை மடக்கும் போது அடுத்த காலையும் கையையும் முழுவதும் நீட்டுவது – என்ற முறையில் கால்களையும் கைகளையும் முன்னும், பின்னும் முழுமையாக நீட்டவும், முழுவதும் மடக்கவும் செய்யவும். நீட்டி மடக்கும் போது கால்கள் தரைக்குச் சற்று மேலாகவே இருக்கட்டும், 5 தடவை இந்தப் பயிற்சியைச் செய்யவும். (குதிகால் தரையில் படக்கூடாது) தலை தரையிலேயே இருக்கட்டும்.

பின் படம் வி – 16 இல் உள்ளவாறு உடலைத் தளர்த்தி படுத்துக் கொண்டு, அந்நிலையில், சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும்.

குறிப்பு: கர்ப்பிணிகள் இவ்விரண்டு பயிற்சிகளையும் செய்ய வேண்டாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!