மஞ்சள் நிறத்தை பொதுவாக மங்களகரமான நிறம் என்று தான் சொல்வோம். அதே மகிமைதான் மஞ்சள் நிற பழங்களிலும் உள்ளது. அதில் முதலில் இருப்பது வாழைப்பழம். இதில் விட்டமின் A, C, D மற்றும் B-12, B6, கலோரிஸ் அதிசிறந்த மினரல்ஸ் அடங்கியுள்ளது. இதில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதினால் இதயத்தை காக்கும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடிய ஆண்டி-ஆக்சிடண்ட் நமக்கு கிடைக்கும். இந்த எளிமையான பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
அடுத்து மாம்பழம், இதன் சுவையை ஈடுகட்ட எந்த பழத்தாலும் முடியாது. மாம்பழத்தில் விட்டமின் A, C, D, B-12, மற்றும் கால்சியம், மினரல்ஸ் என எண்ணற்ற ஊட்டசத்துகள் அடங்கியுள்ளது. இதில் இருக்கும் பாலிபெனால்ஸ் ஆண்டி-ஆக்சிடண்ட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. சருமத்திற்கு பொலிவை தரும். உடல் எடையை கூட்டும். அடுத்து சத்துமிக்க அண்ணாச்சி, வலிமை இழந்த உடலிற்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கண்பார்வையை கூர்மையாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.
இதன் நியூட்ரியேஷன் Facts, விட்டமின் A, C மற்றும் இரும்புசத்து, புரோட்டீன் கால்சியம், நார்சத்து, பொட்டாசியம், சோடியம் மற்றும் அதிகபடியான கலோரிகளும் அடங்கியுள்ளது. அடுத்து விட்டமின் C நிறைந்த எலுமிச்சை பழம், இது தலைமுடியில் இருந்து விரல் நுனி வரை அனைத்து பிரட்சனைக்கும் சிறந்த மருந்தாக இருக்கின்றது. செரிமான கோளாறு, தோல் பிரட்சனை, வறண்ட சருமம் மற்றும் சிறுநீரக கற்கள் வரைக்கும் வராமல் தடுக்கும். அடுத்தது பப்பாளி, உடலில் இருக்கும் கேட்ட கொழுப்புகளை குறைத்து, இதயத்தை பாதுகாப்பதோடு, சர்க்கரை வியாதி வரைக்கும் சிந்த பயனளிக்க கூடிய பழமாக உள்ளது. பெண்கள் சமாளிக்க கூடிய ஆற்றலையும் பப்பாளி வழங்குகிறது.