பெண்களின் உச்சகட்டம்

Spread the love

ஆரம்ப காலத்தில், செக்ஸ் என்பது குழந்தை பெறுவதற்கான செயல்பாடாகத்தான் கருதப்பட்டது. பிறகுதான், செக்ஸ் செயல்பாடுகள் பிரித்து அறியப்பட்டன. அவற்றில் முதலாவது, செக்ஸ் ஆர்வம். அடுத்தது, செக்ஸ் செயல்பாடு. மூன்றாவது, உச்சகட்டமான விந்து வெளியேற்றம்.

செக்ஸ் ஆசை தோன்றியதும், ஆண்-பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள்.

ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகளைப் பார்ப்போம்.. ஆண்-பெண் உறுப்புகள் மூலம் செயல்படும் இயல்பான கலவி. வாய்வழிப் புணர்ச்சி. சுய இன்பம். செக்ஸ் படங்கள், காட்சிகள் பார்ப்பது போன்றவற்றின் மூலமும் ஆண்கள் உச்சகட்டம் அடைய முடிகிறது. இந்த செக்ஸ் செயல்பாடுகளின் கடைசிக் கட்டமாக விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதுவே ஆண்களுக்கு உச்சகட்டமாகும்.

பெண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகளை பார்ப்போம்

ஆண்களைவிட பெண்கள் பல்வேறு வழிமுறைகளில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடிகிறது. இயல்பான பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைக்கும் கலவி. சுய இன்பம். பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி இன்பம் காணுதல். கை, கால், வாய் போன்றவற்றின் மூலம் புற விளையாட்டுகளால் பெண் உச்சகட்டத்தை அடையலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை விரைவாக உச்சகட்டத்தை அடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சகட்டத்தை அடைய தாமதமாகும். அவர்களை உசுப்பேற்றிவிடும் வேலையை ஆண்தான் செய்ய வேண்டும். ஆண் படுக்கையறையில் நுழைந்தவுடன் படுத்தோமா.. வேலையை முடித்தோமா.. எழுந்தோமா என்று இருந்தால் பெண்ணால் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியாது. பெண்கள் உச்சகட்டத்தை அடைய ஆண்கள் அவர்களை தூண்ட வேண்டும். இதற்கு முன் விளையாட்டுகள் அவசியம். உறுப்புகளை வருடுதல், தடவுதல், முத்தமிடுதல், மார்பகங்களை லேசாக அழுத்துதல் போன்ற முன்விளையாட்டுகளில் ஆண்கள் ஈடுபட வேண்டும். 


சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பங்கேற்ற பெண்களில் 52 சதவீதம் பேர், பொய்யாக உச்சகட்டத்தை அடைந்தது போல் நடிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 17 சதவீத பெண்கள் மட்டுமே உடலுறவின்போது உண்மையில் உச்சகட்டம் அடைந்துள்ளனர்.

ஆண் – பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும், பல்வேறு புறச்சூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றைத் தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

உறவுக்குத் தயார் இல்லாத நிலையில், வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன், உடலுறவு அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை ஏற்படாத நிலையில் கலவிக்கு அழைக்கவோ, அனுபவிக்கவோ கூடாது.

உடல் அசதி, மன அழுத்தம், மாதவிலக்கு, உடல் நலமின்மை, தம்பதிகளுக்குள் சண்டை, அதிக போதை, தொடர்ந்து ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை உள்ளிட்ட காரணங்களால் செக்ஸ் உறவை தவிர்க்க நினைக்கலாம். தம்பதியரில் யார், செக்ஸ் உறவை தவிர்க்க நினைத்தாலும், விலகி இருப்பதே நல்லது. ஆசை இல்லாதபோது, கட்டாயப்படுத்தி கலவியில் ஈடுபட்டால் அது குளவியாக கொட்டி எரிச்சலைத்தான் ஏற்படுத்தும்.

அதற்கு பதிலாக, ஆணோ/பெண்ணோ தன்னுடைய இணையை சந்தோஷப்படுத்தி, அவரை(ளை), தானாகவே இணங்கச் செய்வதன் மூலம் செக்ஸ் உறவை அனுபவிக்கலாம். இதற்கு 2 தரப்பிலுமே மிகுந்த கவனமும், பொறுமையும் தேவை. செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் இதில் முக்கியக் அம்சமாக இருக்க வேண்டும்.

ஆண், உச்சகட்டத்தை அடைந்தவுடன் அவனது உறுப்பு தளர்ந்து விடுகிறது. ஆனால், பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க பெண் உறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் பெண்ணின் கிளைட்டோரிஸிலும் உண்டு.

உச்சகட்டத்தின்போது, ரத்தம் பாய்ந்து இந்த கிளிட்டோரிஸ் அதிக விறைப்பும், கெட்டித்தன்மையும் அடைகிறது. இந்த விறைப்புத்தன்மை உச்சகட்டம் முடிந்த பிறகு, ஆண் உறுப்பைப்போல் உடனடியாகத் தளர்ந்துவிடுவதில்லை. அதனால்தான், பெண்களால் தொடர்ந்து பலமுறை உச்சகட்டத்தை அடைய முடிகிறது.

உச்சகட்டத்தின்போது ஆணை பெண் இறுக்கமாகக் கட்டிக்கொள்வதும், உறுப்பை வெளியேற்ற விடாமல் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நினைப்பதும், தன்னை மறந்து பல்வேறு வகையான ஒலி எழுப்புவதும் நிகழ்கிறது. ஆண்கள், இந்தப் பரவச நிலையில் அரை நிமிடங்கள் வரை இருக்கிறார்கள். பெண்கள், இந்த பரவச நிலையை ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை அனுபவிக்க இயலும்.


Spread the love