பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள்:-

Spread the love

  1. யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் (Vaginal candidiasis) கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், உடலுறவின் போது வலி, இவை அறிகுறிகள் ஆகும். பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் Candida Albicans எனும் காளானால் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான் Vaginal candidiasis
  • பேக்டீரியா வாஜினோஸிஸ் (Bacterial Vaginosis) – நாற்றமுடைய, நீர்த்த, மஞ்சள் அல்லது வெள்ளைநிற திரவம் வெளியேறுதல், உடலுறவின் பின் நாற்றம் அதிகரித்து, அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.
  • சாலமைடியல் தொற்று (Chlamydial Infection) – இது ‘சாலமைடியல்’ என்ற பேக்டீரியாவால் வரும் தொற்றுநோய். இந்த பாக்டீரியா, வைரஸ் போலவே சிறியது. Gram – Negative வகையை சேர்ந்தது. இதன் அறிகுறிகள் – மஞ்சள் நிற, சளி போன்ற திரவம் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, அசாதாரணமான இரத்தப் போக்கு இவைகளாகும்.
  • டிரைகோமனியாசிஸ் வாஜினாலின் – (Trichomanasis Vaginalis) அரிப்பு, சிறுநீர் கழிக்கையில் வலி, அதிகமாக பச்சை மஞ்சள் நிற, நுரையுடன் கூடிய, மீன் நாற்றமுடைய திரவப்போக்கு இவை அறிகுறிகள். இந்த நோய்களில் மிகவும் அதிகமாக காணப்படுவது (Vaginal candidiasis).

வெள்ளைபடுதல் (Leucorrhoea)

இந்த யோனியிலிருந்து வெளியேறும் ஒரு திரவம். இது யோனி காய்ந்து விட்டால் ஈரத்துடன் இருக்க உதவும், தவிர இன்பெக்ஷனிலிருந்து பாதுகாக்கும். வெளியேறும் திரவம், வெள்ளை நிறத்திலும், துர்வாடை வீசாமலிருந்தாலும் எல்லாம் முறைப்படி சரியாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் இந்த திரவம் துர்வாடை வீசினால், கெட்டியாக இருந்தால் மஞ்சள் நிறமாகவோ அல்லது கருப்பாக இருந்தால், அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் இன்ஃபெக்ஷன் (Infection) ஏற்பட்டிருக்கலாம். சோகையான, மெலிந்த பலவீனமான பெண்களுக்கு இது அடிக்கடி நேரிடலாம். சுகாதார குறைவும் ஒரு காரணம்.

இந்த Infection ஐ குணப்படுத்தலாம். ஆனால் உடனடி சிகிச்சையின்றி கவனிக்காமல் விட்டால் பின்னால் பலசிக்கல்கள் ஏற்படும். எனவே, இந்த இன்ஃபெக்ஷனாக இருந்தால் உடனே டாக்டரிடம் செல்லவும்.

அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல்:-

பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் ‘கான்டிடா அல்பிகான்ஸ்’ (Candida Albicans) எனும் காளானின் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான் (Vaginal candidiasis).

இது எதனால் ஏற்படுகிறது?

குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.

இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் Anti – Biotic மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.

கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

நீரிழிவு வியாதி, உடல் பருமன்.

இந்த Candida Albicans காளான்கள் சாதாரணமாக குடலிலும் (Intestine) தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.

இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.

இந்த நோயின் அறிகுறிகள்:-

பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்

யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு

புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்

எரிச்சல்/ சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

உடலுறவின் போது வலி.

சிகிச்சை முறைகள்

  1. தனக்குதவி

             நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது   தேய்க்கவோ செய்யாதீர்கள் மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம் குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள். உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

  •  ஆயுர்வேத மருந்துகள்

அசோகரிஷ்டம், திராக்ஷாதி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.

  •  இதர குறிப்புகள்

உணவு முறைகள்

            வெள்ளைப்படுதல், நோய் (Lencorrhoea) மற்றும் PMS – கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் Pre – menstrual – syndrome உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு (Vagina candidiasis).

வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்கான இதர பொருட்களை உபயோகிக்காதீர்கள்.

மன உளைச்சலை குறைக்கவும்.

உடற்பயிற்சி உதவும்

இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால் Vaginal candidiasis அதிகரிக்கவும். கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.


Spread the love
error: Content is protected !!