குளிர்கால உயிர்கொல்லி பயம்

Spread the love

பருவ காலங்களில் ஒன்று குளிர்காலம். இந்த குளிர்காலத்தில் உடல் நடு நடுங்கி போர்வை எங்கே என்று தேடும். லேசாக வியர்த்தாலே மின்விசிறி போட்டு பழகிய நமக்கு, குளிர்காலத்தில் மட்டும்தான் மின்விசிறிக்கு விடுமுறை அளிக்கின்றோம். இந்த குளிர்காலம் ஆனந்தமாகவும் இருக்கும்:ஒரு வகையில் ஆபத்தாகவும் இருக்கின்றது. குளிர்காலத்தில் தான் குளிர்ஜூரம், ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப்பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கின்றது.

மேலும், குளிர்காலங்களில் மாரடைப்பு மற்றும் திடீர் மரணங்கள் அதிகமாக ஏற்படுகிறதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்காலங்களில் மட்டும் ஏன் இத்தனை மரணங்கள் நிகழ்கின்றன என்பதை தெளிவுபடுத்துவதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும். ஐரோப்பியா கண்டத்தில் குறிப்பாக வட ஐரோப்பியாவில் உள்ள நாடுகளில், ஒரு வருடத்திற்கு ஆறு மாதே்கள், கடுங்குளிர் வாட்டி எடுக்கும். அதற்கு எதிர்மாறாக நம் நாட்டில்,  அநேக மாதங்கள் மண்டையை பிளக்கும் வெயில் தான். இந்த வெயிலில் இருந்து பழகியவர்கள் ,குளிப்பிரதேசங்களுக்கு செல்லும் போது, பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.வெயிலில் இருந்தவர்கள் குளிர் பிரதேசங்களில் செல்லும் போது, பல்வேறு உடல்நலம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் குறித்து காணலாம்.

காரணங்கள்:

குளிர்காலத்தில் மனிதர்களுடைய ரத்தக்குழாய்கள், இயல்பான அளவில் இருந்து சுருங்கி விடுகின்றன.இவ்வாறு ரத்தக்குழாய்கள் சுருங்குவதால்,  இதயமானது, தன் இயல்புக்கு அதிகப்படியான அளவில், வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

குளிர் மிகுந்த பகுதிகள் மற்றும் மலை பிரதேச பகுதிகளில், சுவாசித்தலுக்கு பெரிதும் பயன்படும் வாயுவான ஆக்சிஜன்   வாயுவானது மிகவும் குறைவாக இருக்கும். இதன்காரணமாக, ரத்தத்தில் இருக்கின்ற ரத்த சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள் போன்றவை அதிகரிக்கின்றது. இதுமட்டுமல்லாது, கொழுப்பும் அதிகரிக்கிறது.ஆகவே,உடலில் உள்ள  ரத்தத்தில் அதிகளவிலான ரத்தம் உறைந்து விடுகின்றது. இதனால், உடலின் மிக முக்கிய பாகங்களான இதயம், மூளை ஆகிய பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் ரத்தம் குறைந்து விடுகின்றது.அதேவேளையில் ரத்தக்குழாய்கள் சுருங்கி விடுவதாலும், இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. மிகக் குறைந்த வயதினருக்கு திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கும், குளிர்பிரதேசங்களில் மூச்சடைப்பு, இதய பாதிப்பால் மரணமடைவதற்கு இது தான் காரணம்.

அமெரிக்க நாட்டில் வசிப்பவர்களும்,  கனடா,மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கும், குளிர்க் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் அபாயமானது, 50 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றதாம். நம்முடைய நாட்டில், குளிர்பிரதேசங்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

குளிர்காலங்களில் உடல் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும், ஆரோக்கி பற்றாக்குறை இருப்பவர்களுக்கு மார்பில் லேசாக அழுத்தம் ஏற்படும். இதை சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று விட வேண்டும். அப்படி செய்யாமல் இருந்து விட்டால், இதயத்துடிப்பு இரட்டிப்பாக அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படலாம்.

மலைப்பிரதேசங்கள் மற்றும் குளிர்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இதயத்துடிப்பை சீர்செய்வதற்கான கருவியை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

குடும்பத்துடன் மலைப்பிரதேசங்கள் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். உஷ்ணம் குறைந்திருப்பதால் முதியவர்களால், குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய நேரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அலட்சியமாக இருந்து விட்டால், மாரடைப்பு,மயக்கம், சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம்.ஆகவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் முதியவர்களே.

குளிர்பிரதேசங்களில் செல்கின்றோம் என்றாலே, தலையில் அணிவதற்கு குல்லாவும், கை, கால்களை குளிரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, கம்பளியால் ஆன உறைகளையும் அணிந்து செல்வது நல்லது. மதுப்பிரியர்களாக இருந்தால் குளிர்பிரதேசங்களில் ஏனோ தானோவென்று இருந்து விடக்கூடாது. குளிர்பிரதேசங்களில் மதுவை அதிகமாக அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்த்திட  வேண்டும். ஏனெனில், அதிகளவில் மது அருந்திய காரணத்தால், ரத்தக் குழாய்கள் விரிவடைகின்றது. இதனால் உடல் உஷ்ணமாகும். பின்னர், உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து ஆபத்தில் போய் முடியும்.

சம வெளிகளில் கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும்.

ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், ‘சார்பிட்ரேட்‘ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும்.

அது போல், ‘ஏசி‘ அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு.வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்

வெயில் காலங்களில் வாழ்வதற்கு என்னென்ன விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிந்து பயன்படுத்துகிறீர்களோ, அதே போல, குளிர்காலங்களிலும் பாதுகாப்பாக இருப்பதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதுதான் உங்களை குளிரில் இருந்து காக்கும்.


Spread the love
error: Content is protected !!