மழைக்காலம் எதை சாப்பிட்டா நல்லது?

Spread the love

சமஸ்கிருதத்தில் ருது என்று கூறப்படும் பருவகாலங்கள் மொத்தம் ஆறு வகைப்படும். தமிழில் வசந்த காலம், கோடைகாலம், காற்றுக்காலம், மழைக்காலம் குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் மட்டுமல்ல. ஒவ்வொரு பருவ காலத்திலும் நாம் உண்ணும் தவறான உணவும், வாழ்க்கை முறை மாற்றத்தையும் பொறுத்து தான் பலவித நோய்கள் நம்மைத் தாக்குகின்றன என்று மருத்துவ ஆசான்கள் முற்காலத்திலேயே தெளிவாக கூறி விட்டார்கள். அதற்குரிய பரிகாரங்களையும் விளக்கியுள்ளார்கள். நாம் உண்ணும் உணவு பருவ காலத்திற்கு ஏற்ப இயற்கையோடு இணைந்த சூழலுக்கும் ஒத்துப் போகவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நம்மை எவ்வித நோயும் தாக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள தவறி விட்டோம். மழைக் காலத்தில் நாம் எவ்வகையான உணவுகளை, வாழ்க்கை முறை மாற்றத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

மழைக்காலம் உத்திராயன காலத்தில் ஆரம்பிக்கிறது. மழைக் காலத்தில் பொதுவாக மனிதனின் உடல் வலிமையானது பலம் குன்றி விடுகிறது. அதிக அளவு செரிமானப் பிரச்சனைகள் அதிகளவு தோன்றுவதற்கு சந்தர்ப்பங்கள் மழைக் காலத்தில் இருப்பதால் ஒரு சில உணவுக் கட்டுப்பாடுகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியமாகிறது.

மழைக் காலத்தில் வாதம் அதிகரிக்கிறது. பித்தம் சேர்ந்து குவிகிறது என்று ஆயுர்வேதவியல் கூறுகிறது. இதன் காரணமாகத் தான் மழைக் காலத்தில் பலவித நோய்கள் தோன்றக் காரணமாகின்றன. அதனால் தான் நாம் உட்கொள்ளும் சாப்பாடு, வாழ்க்கைச் சூழலை சரியாக அமைத்துக் கொள்ளும் போது வாத, பித்த நிலையை சமநிலைப்படுத்த முடிகிறது.

மழைக்கால நோய்கள் என்னென்ன தோன்றலாம்?https://shop.annamsrecipes.com/product/amla-powder/

மழைக் காலத்தில் செரிமான சக்தி குறைதல், உடல் பலவீனம், இரத்தம் சார்ந்த வியாதிகள், வாயு தோஷம், மூட்டுக்களில் வலி, மூட்டு வீக்கம், சருமப் பிரச்சனைகள், குடலில் புழு, காய்ச்சல், மலேரியா மற்றும் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு.

உணவுக் கட்டுப்பாடு

1.மழைக் காலத்தில் நாம் புளிப்புச் சுவையுள்ள, உப்புச் சுவையுள்ள, எண்ணெய் பிசுக்குள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீர் அல்லது மூலிகைகள் கலந்த மருத்துவக் குணமுள்ள நீர் அருந்த வேண்டும்.

2.எளிதாக சீரணிக்கக் கூடிய எளிமையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

3.பழைய அரிசி, கோதுமை, பார்லி போன்ற தானிய வகை உணவுகளை சமைத்துச் சாப்பிடலாம்.

4.நெய் மற்றும் பால், உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

5.மோரில் ஊற வைக்கப்பட்ட சோளம், நவ தானியங்கள் சாப்பிட்டு வரலாம்.

6.பூசணிக்காய், கத்திரிக்காய், பாகற்காய், சுரைக்காய், இஞ்சி, சீரகம், வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நலம் தரும்.

7.பூண்டு, மிளகு, இஞ்சி, பெருங்காயம், சீரகப் பொடி, மஞ்சள், கொத்தமல்லி போன்றவை செரிமான சக்தியை தூண்டி நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்.

8.உங்களுக்கு ஏற்படும் பசியின் அளவைப் பொறுத்து சாப்பிடலாம்.

9.தானியங்கள், மட்டன் சூப், காய்கறி சூப், தயிரை நீர் கலந்து நீர்மமாக்கிய மோரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழ்க்கைச் சூழல்

மாற்றங்கள் என்ன?

வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். பகல் நேரத் தூக்கம் கூடாது. சூரிய கதிரில் படும்படியாக அதிக நேரம் வெயிலில் இருத்தல் கூடாது. குளியலுக்கு வென்னீர் பயன்படுத்தலாம். உடலில் எண்ணெய்யை அழுந்தத் தேய்த்துக் கொண்டு அதன் பின்பு குளிக்கலாம். மழையில் நனைவது, பகல் தூக்கம், உடற்பயிற்சி, கடுமையாக உடலை வருத்தி வேலை செய்தல், உடலுறவு கொள்ளுதல், காற்று, ஆற்றங்கரையோரம் தங்குதல் போன்றவை கூடாது. சகதியில், ஈரமணல், தரையில் இருத்தல் கூடாது.

என்ன செய்யக்கூடாது?

அரிசி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய் மற்றும் ஜீரணம் ஆவதை  தாமதப்படுத்தும் அல்லது சிரமம் தரும் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மழைக் கால உணவுகள்

மழைக் காலத்தில் நமது செரிமான சக்தி மிகவும் பலம் குறைந்து விடும். ஆகவே செரிமானச் சக்தியைத் அதிகரிக்கும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் மிளகு ரசமும், கோகும் சூப்பும் முக்கியமானவை.

குறிப்பு

புளிப்பு மற்றும் புளிப்பாக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குளிர்பதனப் பெட்டி மற்றும் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்ட உணவுகளை பயன்படுத்துவது கூடாது.

உலர்ந்து போன மற்றும் முளைவிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தயிர், கெட்டித் தயிர், மோர் போன்ற சீரணமாவதற்கு சிரமம் தரும் உணவுகளை தவிருங்கள்.

ஆறு, குளம், நீர் வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீரை அருந்தக் கூடாது.

சில உணவுகளை பசுமையாகவே சாப்பிடுவார்கள். அதைத் தவிர்த்து விட்டு, வறுக்கப்பட்ட காய்கறிகளை பயன்படுத்தலாம்.

சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக வயிற்று வலியை தோற்றுவிக்கும். ஆகையால் பானிபூரி போன்ற நாம் விரும்பும் உணவுகளை எல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை மழைக் காலம் முடியும் வரை கட்டுப்படுத்தவும். இதனால் உங்கள் உடல் நலம் மிகவும் சிறப்பாகவும் அமையும்.

மழைக் காலங்களில் அதிக நேரம் பணி செய்யக் கூடாது.

உங்கள் உடல் நலத்தில், கால், மற்றும் சருமத்தின் மேல் எச்சரிக்கை செய்யவும்.

இக்காலத்தில் அதிக பணிகள் செய்யக்கூடாது.

அடிக்கடி மழையில், நனைதல் கூடாது. தொற்றுக்களை உருவாக்கும். பழைய, மீந்து போன உணவுகள், தயிர், மாமிசம், மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மது வகைகளை தவிர்க்கவும்.

திறந்த வெளிப் பகுதிகளில் தங்கக் கூடாது.

உடற்பயிற்சிகள் மற்றும் சூரியக் குளியல் எடுப்பதை தவிர்க்கவும்.

அறிமுகம் இல்லாத புது இடங்களில் உள்ள குளம், ஆறுகளில் நீந்த முயற்சிக்காதீகள்.

உடலை அதிகம் வருத்தும்படியான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது.

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் மழைக்காலங்களில் நாம் நோய் நொடியால் பாதிப்பதை தடுக்கலாம். உடல் நலம் பேணலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love