ரெட் ஒயின், வெள்ளை ஒயின், ரோஸ் ஒயின், பழ ஒயின், தேன் ஒயின் என பல வகைகள் உள்ளன. தொடக்கத்தில் திராச்சையில் இருந்து மட்டும் தான் தயாரிக்கபட்டது.
ஒயினின் சுவை
ஒயினின் சுவையை மாற்ற கூடியதே அதில் அதிகமாக சேரும் ஆக்சிஜன் தான். ஒயின் பாட்டிலை நேராக வைக்கும் போது அவற்றில் ஆக்சிஜன் அளவு சேர கூடும்.
இதனால் அசிட்டிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வினிகர் சுவை! ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் போது அவை வினிகரில் சுவையை தந்து விடும்.
இதற்கு காரணம் அசிட்டிக் அமிலம் தான். மேலும், இதன் மணத்தையும் சுவையையும் முழுமையாக மாற்றி விடும். இதை தடுக்க ஒரு வழியும் உண்டு.
பொதுவாக ஒயினை காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தால் அல்லது சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வைத்தாலோ ஒயினில் வேதி வினை நடக்கும். ஆக்சிஜன் ஒயினில் முழு சுவையையும் மாற்றி விடும் தன்மையை கொண்டது.
தீர்வு
ஓயினின் சுவை அப்படியே இருக்க வேண்டுமானால் ஒயின் பாட்டிலை நேராக வைக்க கூடாது. அதன் பாட்டிலில் ஒயின் படும் படி சாய்த்து வைக்க வேண்டும். இதன் மூலம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
காரணம் ஒயினை சாய்வாக வைப்பதன் மூலம் பாட்டிலின் மூடி ஈரமாகி உள்ளே வரக் கூடிய ஆக்சிஜனை வெளியேற்ற உதவும்.
மேலும் தெரிந்து கொள்ள…
https://www.youtube.com/channel/UCrvVInhBDyitV7cNOeL83SQ/videos