கேள்வி: டாக்டர் அவர்களுக்கு, எனது வயது 40. விவசாய வேலை செய்து வருகிறேன். உடல் அடிக்கடி அசதியாகவும், கிறுகிறுப்பாகவும் உள்ளது. சளி, காய்ச்சல், இருமல் என்று எவ்வித நோயும் இல்லை. கெட்ட பழக்கங்களான பீடி, சிகரெட், மது அருந்தும் பழக்கம் ஏதும் கிடையாது. ஆங்கில மருத்துவரிடம் சென்று செக்அப் செய்தேன். எனக்கு சுகர் சற்று உள்ளதாக கூறுகிறார். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சுகர் வந்தது இல்லை. கடுமையாக உழைக்கும் குடும்பம் எங்கள் குடும்பம். எனக்கு சர்க்கரை சத்து கொஞ்சம் கூடுதலாக உள்ளது என்பதை நம்பமுடியவில்லை. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்: சர்க்கரை ஒரு மனிதனுக்கு இவ்வளவு அளவு தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவன் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை (உடல் உழைப்பு), மனநிலை, உணவு, சுற்றுச் சூழல், நீர், செரிமான மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளைப் பொறுத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும்.
உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும் இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்து உலக மக்களை முட்டாளாக்கி அவர்களின் செல்வம், ஆரோக்கியத்தை சுரண்டுகிறார்கள.
உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம் என்னவெனில் இயற்கை விதி மீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவது தான். கழிவு தேக்கம் நீர் உருவாக காரணமாகிறது. உடல் சரியாக கெட்ட சர்க்கரையைக் கண்டறிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை, நாம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு, செல்களுக்குள்ளேயே செலுத்துவதை நாம் அறியாமல் செய்கிறோம்.
சாக்கடைக்குச் செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை நாம் செல்களுக்கு உள்ளேயே செலுத்துவதால், கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிப்பு அடைகிறது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் போது அந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது. உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சீராக செய்ய இயலாது. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோய் பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. ஆனால் இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது. சாதாரணமாக உள்ள செரிமானப் பிரச்சனையை சரி செய்தாலே அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகி விடும். சர்க்கரை நோய் ஏற்பட முதல் 3 முக்கிய காரணங்களாக கருதப்படுவது..
1. அதிக கவலை
2. அவசரமாக சாப்பிடுவது
3. அதிக உடல் வெப்பம்
இவற்றை நாம் முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளில் பலவிதமான மருந்துகள் கூறப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்பு அவற்றை உபயோகப்படுத்துவது கூடுதல் பலன் தரும்.
· நாவல் பட்டைச் சூரணம் 2 கிராம் அளவு எடுத்து நீருடன் கலந்து காலை, மாலை அருந்தி வரலாம். அல்லது நாவல் பட்டையின் குடிநீர் 100 மிலி அளவு தினசரி காலை, மாலை அருந்தி வரலாம்.
· பாகல் இலைச்சாறு 100 மி.லி. வீதம் வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.
· நெல்லிக்காய் சாறு 25மி.லி. எலுமிச்சைச் சாறு 15 மி.லி. தேன் 15 மிலி கலந்து காலை மட்டும் அருந்தி வர சர்க்கரையின் அளவு குறையும்.
· பச்சைக் கோவைக்காய் இரண்டை தினமும் சாப்பிட்டு வரலாம்.
· புங்கம் பூ வினை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் (96 நாட்கள் முதல் 144 நாட்கள் வரை) தேனில் கலந்து சாப்பிட்டு வர மது மேக ரணங்கள் தீரும். புகை, மாதர் போகம், மீன், கருவாடு உணவில் தவிர்க்க வேண்டும்.
· வெந்தயப் பொடி காலை, மாலை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.
· இலுப்பை பட்டை 50 கிராம் அளவு எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் கலந்து கால் லிட்டர் அளவு வரும் வரை காய்ச்சி காலை, மாலை அருந்தி வரலாம்.
· நெல்லிக்காய் சாறு 15 மி.கி எடுத்துக் கொண்டு சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர நீரிழிவு குணமாகும்.
· ஆலம் விழுது, நாவல் பட்டை, மருதம் பட்டை ஒவ்வொன்றும் தலா 50 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் இட்டுக்காய்ச்சி கால் லிட்டராக வந்தவுடன் வடிகட்டி காலை, மாலை என தினசரி இருவேளையாக 50 முதல் 100 நாட்கள் வரை அருந்திவர நீரிழிவு தீரும்.