மஞ்சப்பை எடுத்துவிட்டு சந்தைக்கு சென்ற அழகான காலம் போய், இப்போது இலவசமாக கிடைக்கின்ற WiFi வைத்து மீன் சந்தையில் இருந்து Share Market வரை WiFi, இலவச இணையதள வாழ்க்கை ஆகிவிட்டது. WiFi-யை எப்படி பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது நமக்கு ஓரளவு தெரிந்தும் அதன் நுணுக்கங்களை பற்றி நாம் இன்னும் தெரிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு நாம் அதிகமாக செல்லும் போது அங்கு WiFi, பயன்படுத்துவதற்காக முதல் தடவை Password போட்டு WiFi பயன்படுத்தியிருப்போம். மீண்டும் Forget Password என கேட்டால் நாம் கொடுப்பதில்லை. ஏனென்றால் அடிக்கடி பயன்படுத்துகின்ற நிலைமை வரும் அதனால் அப்படியே Auto Connection-லேயே விட்டுவிடுவோம்.அப்படி கவனக்குறைவாக இருக்காமல் இலவச WiFi பயன்படுத்தினதும் நமது History மற்றும் Cookies இவற்றை அழித்துவிட்டு Auto Connection-னை ரத்து செய்ய வேண்டும்.
இல்லையென்றால் WiFi பயன்படுத்தி நீங்கள் எவையெல்லாம் பார்த்தீர்கள், நீங்கள் Order செய்த மொபைல் Pouch-ல் இருந்து இணையதள Payment-க்கு பயன்படுத்திய வங்கி Password வரைக்கும்,
எளிதில் அந்த இணையதள சேவை மூலமாக Hack செய்ய முடியும்.இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. செய்தியை அறிந்து எவரும் இதை தாராளமாக செய்ய முடியும். சரி வீட்டில் மோடம் வாங்கி பயன்படுத்தலாம். இது நமக்கான WiFi இதை எவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்காதீர்கள், அதிலும் பிரட்சனை இருக்கின்றது. நம்முடைய மோடம் நமக்கு பாதுகாப்பு என்று அதிலும் உங்களுடைய Mobile, Tab, System இவையெல்லாவற்றிலும் Auto Connected இருக்கின்றது.
வீட்டிற்குள் நுழைந்ததும் அனைத்திலும் WiFi Connect ஆகிவிடும். ஒரு வேலை வீட்டு பக்கத்தில் இருக்கிறவர்கள் நமக்கு தெரியாமலேயே நம்முடைய இலவச WiFi பயன்படுத்தி வரலாம். சரி, அதில் என்ன இருக்கின்றது, என்னிடம் தான் ஒரு நாளைக்கு அத்தனை GB இருக்கின்றதே என நினைக்காதீர்கள் நமது நெட்வொர்க்கிள் ஒருவர் நுழைந்தால், அவர்களால் நமது Mobile, Tab, System என அனைத்தில் இருந்தும் நமது DATA-வை திருடவும் வாய்ப்பு உள்ளது. வருபவர் 1 GB-க்கு பாடலை Download செய்பவராக இருந்தால் பரவாயில்லை, உன்னை போல் ஒருவன், கமல் மாதிரி முழு Set-up ஓடு இருந்தால் என்ன பண்ணுவீர்கள், அதுமட்டுமின்றி பெற்றவர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட நம்மை பற்றிய Privacy,
நமது இணையதளத்தில் தான் தூங்குகிறது.
அதனால் Auto Save என்ற வார்த்தைக்கு இணையதளத்தில் இடம் கொடுக்கவே கொடுக்காதீர்கள். இலவச App என்ற விஷயம் தான் நமக்கு பெரியதாக ஒரு ஆப்பு வைக்க காத்துக் கொண்டிருக்கும். அதனால் எந்த Link-ம் கிளிக் செய்வதற்கு பின் Allow or Deny எதற்கு கேட்கின்றது என ஒரு இரண்டு நிமிடம் ஒதுக்கி படியுங்கள், குறிப்பாக வங்கி சேமிப்பு சம்மந்தமான எந்த One Time Password வந்தாலும், அதை Auto Save கொடுக்காதீர்கள்.ஏனென்றால் நம்மை பயன்படுத்துகின்ற மோடம் வரைக்கும், அன் என் கிரிப்டர் H.T.T.P என சொல்லகூடிய நேரடி தகவல் பரிமாற்றம் மற்றவர்களால் Hack செய்து எடுத்துக்கொள்ள முடியும். இதனால் நமது Network-ல் Connect ஆகியிருக்க மற்றொரு நபரால், நமது கம்பியூட்டரில் வேறு இடத்தில் இருந்து Browse செய்ய முடியும், சரி இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம்,
Private Browsing ஆக இருப்பதற்கு incognito Mode மூலமாக, நீங்கள் Browse செய்யலாம். இதற்கான சுலபமான வழி Ctrl+Shift+N, இதை அழுத்தினதும் தனியாக ஒரு Tab Open ஆகும். இதில் Browse செய்வது மூலமாக உங்களுடைய Password –ல் இருந்து நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
இதுவரைக்கு நீங்கள் பார்த்த History மற்றும் Cookies இவற்றை அழித்துவிடுங்கள். Internet Auto Connection-னை அழித்து விடுங்கள். உங்கள் Network உடன் Personal Fire Wall Access-யை Connect பன்னிகொள்ளுங்கள். WiFi மோடம் உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் சுவருக்கு அருகில் வைக்காமல் வெளிப்புற தொலைவில் குறைத்திடுங்கள்.
Password Secured ஆக இருக்கின்றதா என தெரிந்து கொண்டு வேறு Password-ஐ உடனே மாற்றுங்கள். நடக்கின்ற இடத்தில் முள் இல்லை என தெரிந்தும் நாம் செருப்பு போடுவது இல்லையா, அதே மாதிரி, நீங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு என நினைக்கிறீர்களோ, அந்த அளவிற்க்கு பிரட்சனை வரவும் வாய்ப்பு இருக்கின்றது.