சராசரியாக ஒரு மனிதனால் தூங்காமல் இருக்க முடியாது. வாழ்வின் நிகழ்வுகளுள் முக்கியமான ஒன்று தூக்கம். ஆனால், தூக்கம் என்பது எதனால் வருகிறது என்பதை அறிவியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும், உழைக்கத் தயாராவதற்கும் இயற்கை அளித்த கொடை நல்ல தூக்கம் ஒன்றே.
நாம் தூக்கம் வருவதால் தூங்குகிறோம். ஆனால், நாம் தூங்கும்போதும், மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலையைச் செய்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் என்கிற வேதிப்பொருள் இரத்தத்தில் அதிகமாகும் போது தூக்கக் கலக்கம் வருவதாகவும்,தூக்கத்தில் இந்த வேதிப் பொருள் முற்றிலும் குறைக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தூக்கத்தின் இரண்டு வகைகள்
தூக்கத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை விரைவு கண்ணசைவுத் தூக்கம் மற்றும் கண் அசையா தூக்கம். இது மட்டுமல்லாமல், ஐந்து கட்டங்களும் உள்ளன.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
தூக்கம் தூங்குபவரின் வயதைப் பொறுத்து மாறுபடும். பிறந்த குழந்தைகளுக்கு 16&20 மணி நேரமும் வளரும் குழந்தைகளுக்கு 10&12 மணி நேரமும், ஆண்கள் 6 மணி நேரமும், பெண்கள் 7 மணி நேரமும் முட்டாள்கள் 8 மணி நேரமும், தூக்கம் தேவை என்பர் அறிவியலறிஞர்கள். கருத்தரித்த பெண்கள் முதல் 3 மாதங்களில் சற்று அதிகம் தூங்குவார்கள். ஒருவருக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதை அடுத்த நாள் பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாகத் தூங்கி உடல் சரி செய்கிறது. அது முடியாதபோது நமது மற்ற வேலைகள் பாதிக்கப்படுகிறது. வயது ஆக ஆக தூக்கம் குறைகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. இதற்கு வயது ஒரு காரணம், வயதான காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் இதய நோய் போன்ற உடல் உபாதையும் ஒரு காரணம்.
படுத்தவுடன் ஐந்து நிமிடங்களில் தூங்கி விட்டால் நீங்கள் தூக்கம் கெட்டிருப்பீர்கள் என்று அர்த்தம். பகலில் உட்கார்ந்தபோது தூங்கிவிடுவதும், கிடைத்த சிறுசிறு இடைவேளை எல்லாம் தூங்குவதும், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்பதன் அறிகுறிகள்.
தூக்கம் கெட்டு வண்டியை ஓட்டுபவர்கள் குடித்துவிட்டு வண்டியை ஓட்டுபவர்களைவிட தாறுமாறாக வண்டியை ஓட்டுவதும், அவர்களுக்கு கண்ணும், கையும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான விபத்துகளும், உயிரிழிப்புகளும் தூக்கம் கெட்ட ஓட்டுநர்களால் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுநர் தங்கள் நேரான, சீரான ஒரே பாதையில், சீரான வேகத்தில் செல்லும் போதும் அடைய வேண்டிய இலக்கை அடைய சிறிது தூரமே இருக்கும்போதும், இரவு 3&4 மணியளவில் ஏற்படும் தூக்கக் கலக்கத்தில் மெல்லிய காற்று முகத்தில் வீசும் கண்கள் சொக்கும்போது விபத்துகள் நேர்வதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலக தூக்க கழகம் சொல்வது போல கண்களை ரோட்டில் குவிப்பது சிரமமாக இருந்தால் கொட்டாவி வருவதை நிறுத்த முடியாமல் இருந்தால், வண்டி எந்த இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியாமல் இருந்தால் நீங்கள் வண்டி ஓட்ட இயலாத அளவிற்கு தூக்கம் கெட்டிருப்பீர்கள். தூங்காமல் இருந்தால் உங்கள் உயிருக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி உள்ள உயிர்களுக்கும் ஆபத்து என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆராய்ச்சி சாலைகளில் எலிகள் இரண்டில் இருந்து மூன்று வருடம் உயிருடன் இருக்கும், கண்ணசைவுத் தூக்கம் கெட்ட எலிகள் ஐந்து வாரத்திலும் தூக்கம் முழுவதும் கெட்ட எலிகள் மூன்று வாரத்திலும் இறந்தன.
தூக்கம் கெட்ட எலிகள் வாலிலும், காலிலும் புண்கள் வந்தும் உடலின் வெப்பநிலை குறைந்தும் காணப்பட்டன. கால் மற்றும் வாலில் ஏற்படும் புண்ணுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மூளையும், நரம்புகளும் சரியாக வேலை செய்ய போதுமான தூக்கம் அவசியம். வேலையில் கவனமும் ஞாபக மறதியும், கணக்கு வழக்குகளில் குறைபாடும், மன உளைச்சலும் தூக்கம் குறைவதால் ஏற்படும். ஆழ்ந்த தூக்கத்தில் தான் குழந்தைகள் வளர்ச்சிக்கான வளர்ச்சி ஹார்மோன் வெளியாகிறது என்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளன. உடலில் புரத உற்பத்தியும் தூக்கத்தில் தான் அதிகரிக்கும். எனவே, வளர்ச்சியும் தூக்கத்தில் தான் நிகழும்.
வெயிலும், மழையும், மன அழுத்தமும், உடலிலும் மற்றும் சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆழ்ந்த தூக்கத்தின்போது தான் உடல் சரிசெய்யும். எனவே, தூக்கம் நம்மை அழகாக்குகிறது.
வேலை செய்யும்போது ஷிப்ட் முறை மாற்றத்தினால் வேலை பல்வேறு விதமான மாறுபாடும், மனித தவறுகளால் விபத்துகளும் நிகழ்ந்திருக்கின்றன. இரவு நீண்ட நேரம் மருத்துவமனைகளில் கண்விழித்து பணிபுரியும் மருத்துவரும், ஊழியர்களும் சரியாக மருத்துவ ஆவணங்களை ஊன்றிக் கவனித்து கிரகித்து வைத்தியம் செய்ய இயலாத நிலை எற்படுவதால் நோயாளிகளுக்கும் பாதிப்பு வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இடை இடையே தூங்க அனுமதிப்பதும் அடிக்கடி ஷிப்ட் மாற்றம் இருப்பதும் வேலை செய்யும் இடத்தில் பிரகாசமான விளக்குகளை எரிய விடுவதும் இவற்றைத் தவிர்க்கும். தூக்க மருத்துவம் 85 வகையான தூக்க நோய்கள் இருப்பதாக சொல்கிறது.
தூக்கம் கெடுவதால் எற்படும் பாதிப்புகள்
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரித்தல், மன அழுத்தம், குழப்பம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.
ஷிப்ட் முறையில் வேலை செய்வோர்
உடலின் தூக்க விழிப்பு சக்கரமும், உலகின் பகல் இரவு சக்கரத்துடன் ஒன்றாமல் போவதால் எற்படும் பாதிப்புகள் அடிக்கடி பகல் & இரவு வேலை மாறுவதால் உடல் பசி முதல் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல், மன அழுத்தம், மன இறுக்கம் நோய்கள் உருவாக் காரணமாகிறது.
இவற்றிலிருந்து விடுபட சிகரெட் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாதல், குடிப்பழக்கம், தவறான உறவுகள் என வாழ்க்கை பாதிப்பு, தன் உடலைக் கெடுப்பதுடன் சமுதாயத்தையும் பாதிக்கிறது.
தூக்கம் என்பதை முறையாக கடைபிடிப்பது பல நோய்களிலிருந்து விடுபடுவதற்கான முதல்வழி. ஆகவே, எந்த சூழ்நிலையிலும் தூக்கம் கெட்டு செயல்படாதீர்கள். அப்படி செய்தீர்களேயானால் ஆபத்தில் தான் முடியும்
ஆயுர்வேதம்.காம்