சர்க்கரை சங்கதி
சர்க்கரை என்பது பொதுவாக ‘சுக்ரோஸ்’ (Sucrose), ‘க்ளூக்கோஸ் மற்றும் ‘ஃப்ரூக்டோஸ்’ (Fructose) அடங்கிய படிமம் . சர்க்கரை அடிப்படையாக தண்ணீரில் கரையும் கார்போ ஹைட்ரேட்(Carbo hydrate) . சர்க்கரை அறிவியல் ரீதியாக இருவகைப்படும். ‘மோனோசாச்சரைட்ஸ்’ (Monosaccharides) மற்றும் ‘டைசாச்சரைட்ஸ்’ (Diaaccharides). கார்பன் (கரி) அணுக்கள் 3ல் இருந்து 6 வரை இருக்கும் மோனோசாச்சரைட்ஸ் பிரிவில் இருப்பது குளூக்கோஸ். டைசாச்சரைட்ஸ் (2 மோனோசாச்சரைட்ஸ் அணுக்கள் உள்ளது) பிரிவில் சுக்ரோஸ், லாக்டோஸ் மற்றும் (Maltose) உள்ளன.
நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் சர்க்கரை (100%) சுக்ரோஸ் தான். இதுதான் கரும்பிலும், பீட்ரூட்டிலும் உள்ள முக்கிய வேதிப்பொருள். சுக்ரோஸ் மிக இனிய சுவை கொண்டது. சுக்ரோஸில் உள்ளவை க்ளூக்கோஸம், ஃப்ருக்டோஸம். சுக்ரோஸை தவிர வேறு ஊட்டச்சத்து சர்க்கரையில் இல்லை.
உணவுகளில் சர்க்கரை
எந்த வகை உணவுகளிலும் இனிப்பை சேர்ப்பது சர்க்கரை. உடலுக்கு சக்தியை தரும். ரொட்டி, கேக்குகள், குளிர்பானங்கள் இவற்றின் அடிப்படை பொருள் சர்க்கரை தயாரிப்பின்போது வெண்மை யான நிறம் வர மிருகங்களின் எலும்பு உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த எலும்புகள் சர்க்கரையுடன் சேர்க்கப்படுவதில்லை. எல்லா தயாரிப்பாளர்களும் எலும்புகளை பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக ‘ஆக்டிவேட்டட் கார்பனை’ (Activated Carbon) பயன்படுத்துகின்றனர்.
ஆனால், உணவில் பரவலாக பயன்படும் சர்க்கரை அதிகமானால் பல கோளாறுகளை உண்டாக்கும்.
அவற்றில் முக்கியமான சில:
1. பற்சிதைவு:சர்க்கரை பலவகைகளில் பற்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பல அமிலங்களை உருவாக்குகின்றன. இந்த அமிலங்கள் பற்களின் வெளிப்பூச்சை (Enamel) கரைத்து, பல் நோய்களை உண்டாக்குகின்றன. சர்க்கரை பற்களை பொறுத்தவரை சாத்தான்.
2. நீரிழிவு: சர்க்கரையால் நீரிழிவு உண்டாகிறது என்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் இல்லாவிட்டாலும், நீரிழிவு நோய் வந்த பின்பு, சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தில் முடியும். ரத்தத்தில் சர்க்கரை அதிகமானால், நீரிழிவு மட்டுமல்ல.. கண்கள், சிறுநீரகம், நரம்புகள் பாதிக்கப்படலாம்.
3. உடல் பருமன் (Obesity) : அதிக அளவு இனிப்புகள் உண்பது உடல் பருமன் உண்டாக முக்கிய காரணம்.
உலக சுகாதார அமைப்பு (WHO), நாம் உண்ணும் உணவில் இனிப்பு 10 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது என்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். அளவான சர்க்கரையுடன் நோய்நொடியின்றி வளமாக வாழ்வோம்.