தூக்க மாத்திரை உள்ளிட்ட சில மாத்திரைகள், கண்களில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், கண்களை சுற்றியுள்ள திசுக்களில் ரத்த ஓட்டத்தை குறைத்து கண்களை சிவப்பாக மாற்றுகிறது.
குடிகாரர்களின் கண்கள் சிவப்பது சகஜம். அதிகமாக மது அருந்தும் போது, ரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனால் கண்களைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து கண்கள் சிவப்பாகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். சிகரெட்டை அடிக்கடி புகைப்பதால், அது கண்களைச் சுற்றியுள்ள நரம்புகள் இறுக்கம் அடையச் செய்து, கண்களை சிவப்பாக்குகிறது.
அதிக நேரம் தண்ணீரில் இருந்தாலும் கண்கள் சிவக்கும். குறிப்பாக நீச்சல் குளத்தில் கலக்கப்படும் குளோரின் கண்களின் செயல்படும் நல்ல பாக்டீரியக்களை அழிக்கிறது. இதனால் நாம் அதிக நேரம் நீச்சல் அடித்தால், கண்கள் சிவந்து வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்குகிறது.