அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்கள். அவ்வளவு சிறப்பு மிக்க முகத்தில், மிகவும் முக்கியமான உறுப்பான பற்கள் உள்ளன. யாரைப்பார்த்து நீங்கள் சிரித்தாலும், முதலில் வெளியே தெரிவது பற்கள் தான். இவ்வாறு பிறர் காணக்கூடிய பற்கள், பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கின்றது. இதனால், காலையில் எழுந்து பற்களை துலக்குவதற்கு பயன்படும் பேஸ்ட் முதல், இரவில் துாங்கும் போது பற்களை கொப்பளிக்க பயன்படுத்தும் மவுத் வாஸ் வரையில், தொலைக்காட்சிகளில் விளம்பரங்களைப் பார்த்து, தெளிவு படுத்திக் கொள்கின்றனர்.இதுமட்டுமல்ல தற்போது பள்ளி படிக்கும் குழந்தைகள் கூட என்னோட டூத்பேஸ்டில் உப்பு இருக்கு உங்க டூத் பேஸ்டில் உப்பு இருக்கா என்று கிண்டலாகவும், விவரமாகவும் கேட்கின்றனர். பற்களை பராமரிப்பதில் அனைவரும் மிகுந்த அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்ளக்கூடிய காலமாக இது மாறி விட்டது.
பளிச் நிறம்…
பற்கள் பளிச்சென வெள்ளை வெளெரென தெரிய வேண்டும். இந்த பற்களைப் பார்த்து எதிர் இருப்பவர்கள், எப்படி பளிச்சென்று பற்கள் இருக்கின்ற என்று ஆச்சர்யமாக கேட்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் உள்ளது. நம் ஒவ்வொருவர் பற்களிலும், வெளியில் காணத் தெரிகிற பகுதியை மருத்துவ உலகம் ‘எனாமல்’ என்கின்றது. இதனை அடுத்து ‘டென்டின்’(Dentin) எனப்படும் பகுதி உள்ளது.இந்த டெண்டின் நிறத்தை வைத்து தான் பற்களின் நிறம் அமைகின்றது. டெண்டின் நிறம் வெள்ளையாக இருந்தால், உங்களது பற்கள் வெள்ளை வெளேரென பளிச்சிடும். உங்களது பற்களில் உள்ள டெண்டின் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பற்களின் வண்ணமும் அதுவாகத்தான் இருக்கும். இப்போது புரிகின்றதா, டெண்டின் என்பது எவ்வளவு முக்கியம் என்று.
உண்மையில், சொல்லப்போனால், அனைவரும் இயற்கையிலேயே ஒரு வண்ணத்தில் குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. சிலருக்கு வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். சிலருக்கு சந்தன நிறத்தில் இருக்கலாம். சில நேரங்களில் முத்துப் போன்ற பற்கள் சிலருக்கு வாய்க்கலாம். பற்கள் முளைக்கின்ற சிறுவயது குழந்தைகளை உற்று கவனித்தால் இந்த மாற்றங்கள் அடங்கிய உண்மை உங்களுக்கு புலப்படும்.
நிறமிழக்க காரணம்…
பற்கள் முளைக்கத் தொடங்கி விட்டால், அப்போதிருந்தே பராமரிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பற்கள் முளைக்கின்ற வயதில் இருக்கும் சிறுவர்கள், தங்களது பற்களை எப்படி பராமரிப்பு எதையெல்லாம் உண்ண வேண்டும். எவையெல்லாம் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை என்பது குறித்த எந்தவித அறிவும் அற்றவர்களாக குழந்தைகள் இருப்பார்கள். அவர்களுக்கு பற்களை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், எப்படியெல்லாம் பற்களை பராமரிக்க வேண்டும் என்கிற வழிமுறைகளையும் பெற்றோர் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். இந்த நிலையில்,
பற்கள் நிறமிழந்து போவதற்கு முக்கிய காரணமே, பற்களை சரியாக, கவனமாக பராமரிக்காமல் இருந்து விடுவதுதான். மேலும், மருத்து வரீதியான காரணம் கூற வேண்டுமென்றால், பற்களில் உள்ள நிறம் மாறுவதற்கு எனாமலிஸ் எனப்படும் பற்காரை படிவதை சொல்லலாம்.
பற்களின் நிறத்தை பாதுகாக்கு டிப்ஸ்...
பற்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், புகைப்பிடித்தல், வெற்றிலை போடுதல்,புகையிலையை பயன்படுத்துதல் உள்ளிட்ட எந்தவித செயலை நீங்கள் செய்யக்கூடாது.அப்படி நீங்கள் புகை பிடித்தாலோ, வெற்றிலை போட்டாலோ. பற்களின் இயற்கையான நிறம் மாறி, காவி நிறமாகி விடும்.
புகையிலையில் இருக்கின்ற நிக்கோடின் எனப்படும் ரசாயனமானது, பற்களில் நிறத்திற்கு உறுதுணையாக இருக்கின்ற டெண்டினை உறிஞ்சிக் கொள்கின்றது.இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதால், பற்கள் இயற்கையான நிறத்தில் இருந்து மாறி, வெளிர் மஞ்சள் நிறமாகவே, காரை படிந்த பற்களாகவோ மாறி விடுகின்றன.
இனிப்பு பண்டங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. உங்களது பற்களுக்கும் நல்லதல்ல. இனிப்பு பண்டங்களையும், கூல்ரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்களையும் பெரும்பாலானோர் அடிக்கடி விரும்பி உட்கொள்கின்றனர்.பற்களின் பாதுகாப்பு கருதி, இத்தகைய இனிப்பு பண்டங்களை உண்ணாமல் இருக்க வேண்டும். அதேபோல, காபி, தேநீர்,உள்ளிட்ட பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், காபி, தேநீர் அருந்துவதால் பற்கள் மிக விரைவில் நிறம் மாறி விடும் அபாயம் இருக்கின்றது.
நீங்கள் விரும்பி குடிக்கும் காபி மற்றும் தேநீரில் உள்ள டானின் எனப்படும் வேதிப்பொருளானது பற்களின் நிறமாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதேபோல, சிவப்பு ஒயினில் உள்ள பாலிபீனால் எனப்படும் ரசாயனப் பொருளும் பற்களை இயற்கையான நிறத்தில் இருந்து வேறு நிறமாற்றத்திற்கு காரணியாக இருக்கின்றது.
நாம் அன்றாடமும் தாகம் எடுத்தால் குடிக்க பயன்படுத்தும் தண்ணீராலும் கூட பற்களுக்கு ஆபத்துகள் வருகின்றன. தண்ணீர் மற்றும் பாலில் உள்ள ஃபுளோரைடு எனப்படும் வேதிப்பொருளின் அளவானது, அதிகமாக இருந்து விட்டால் பற்களில் சிதைவு மற்றும் நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் வரும். குறிப்பாக, தண்ணீர் மற்றும் பாலில் இருக்கும் வேதிப் பொருட்களால், உங்கள் பற்கள் வெளிர்மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்திலோ, காவி நிறத்திலோ இருக்கக் கூடும்.
இந்த பற்களில் நிறம் மாறுவதற்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுவது, பல்வேறு உடல்நலப்பிரச்னைகளின் போது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள்.குறிப்பாக, கருவுற்றிருக்கும் பெண்கள், மருத்துவர்களின் ஆலோசனையில்லாமல் வலிநிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, அந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த பக்கவிளைவுகளில் ஒன்றாக, பிறக்கு குழந்தைகளுக்கு பற்களின் நிறம் மாறுவது இருக்கின்றது.
இதேபோல ரத்த சோகை, இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு ரத்தசோகை நோய்க்கு இரும்புச் சத்து மாத்திரை மற்றும் டானிக்குகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குச் சாப்பிடும்போதும் பற்களின் நிறம் கறுப்பாக மாறும்
பற்கள் பளிச்சிடும் உதவும் பிரட்…
பற்களின் நிறம் வெள்ளையாகவும் இருந்தால் பிறருடன் பேசும் போது, வாய்விட்டு சிரித்து பேசுவோம்.ஆனால், பற்கள் நிறம் மாறி பார்ப்பதற்கே மிகவும் அசுத்தமாக காணப்பட்டால், மற்றவர்களிடம் வாய் விட்டு சிரிக்கவும் முடியாமல், பேசுவதையே மிகப்பெரிய சங்கடமாக எண்ணும் நிலை ஏற்படலாம்.
பற்களை பளிச்சிட செய்வதற்கு, பிரெட் கொண்டு செய்யும் ஆச்சர்ய டிப்ஸ் உள்ளது. இதோ அந்த டிப்ஸ்…
நீங்கள் முதலில், ஒரு பிரேட் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த மெல்லிசான பிரெட் துண்டை எடுத்து, அடுப்பில் வைத்து நன்கு ரோஸ்ட் செய்ய வேண்டும். ரோஸ்ட் செய்யும் போது, பிரெட்டின் மேல் பகுதியில், கருப்பாக கருகி விடும். நன்கு கருகிய நிலையில் உள்ள பிரட் ரோஸ்ட்டை எடுத்து இரண்டு துண்டுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், அந்த பிரட்டின் நடு பகுதியையும், கருகிய பகுதியையும், பற்களின் மீதுஅழுத்தி தேய்க்க வேண்டும். பற்கள் படிந்த பிரெட் ரோஸ்ட் கருகலை, மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரையில் அப்படியே, வைத்து விட வேண்டும். பிறகு,தண்ணீரில் பற்களை கழுவிட வேண்டும். இவ்வாறு செய்தால், பற்கள் பளபளப்பாகி விடும்.