கலப்படங்கள் நிறைந்துள்ள இக்காலகட்டத்தில் அதன் விலை அதிகமாக இருப்பதால் பல வாறு கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூவும் கிடைக்கின்றது. நயமான பூக்கள் மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதாக கலப்படம் செய்யப்பட்ட பூவை அறிவது மிகவும் அவசியம். உண்மையான நயமான குங்குமப்பூ செயற்கையான கலப்படம் செய்தவற்றிலிருந்து மாறுபட்டது. இதனை தரம் பிரிக்க சிறிது குங்குமப்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் நயமான கலப்படமில்லாத பூ மெதுவாகக் கரைந்து மின்னக் கூடிய தங்க நிறம் கொண்டதாக தண்ணீர் மாறி நல்ல மணம் தரும். ஆனால் கலப்படம் செய்யப்பட்டது உடனே கரைந்து சிவப்பு நிறமானதாக தண்ணீரை மாற்றிவிடும். மணம் இருக்காது.
கர்ப்பிணி பெண்கள்
குங்குமப்பூவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. விசேஷ சக்தியைத் தூண்டி செயல் திறனை அதிகரிப்பதால் ஒரு வேளை பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கலாம் என்பது மட்டுமே உண்மை. குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் கட்டுப்பாட்டுடன் அளவோடு பயன்படுத்த வேண்டும். அது விசேஷ சக்தியைப் பெருக்குவதால் அதிக உபயோகம் கருவை கலைத்துவிடவும் கூடும்.