நமது தமிழ் சமையலில் பலவிதமான பருப்புகளை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அவற்றில் சிறந்தது எது என்ற சந்தேகம் அனைவருக்குமே வரும் இது பொதுவான சந்தேகம் தான் இதோ கீழே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்புகளின் குணநலன்களை பார்க்கலாம்.
நம் வீட்டு சமையல் அறையில் பருப்பு இல்லாமல் சமையல் நடக்கவே நடக்காது. ஏனென்றால், வாரம் ஒரு முறையாவது நம் வீட்டில் சாம்பார் வைத்து விடுவார்கள். அதனால் எப்போதுமே நம் வீட்டில் பருப்பு இருந்து கொண்டே இருக்கும்.
துவரம் பருப்பு
இப்போது நமக்கு முதலில் நன்கு தெரிந்த பருப்பான துவரம் பருப்பை பற்றி பார்ப்போம். இந்த துவரம் பருப்பை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை என்ன என்பதை பார்ப்போம்.
உடல் எடை கூட
நம்மில் சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. அவர்களுக்கு தெரிந்தவர்கள், அவர்களின் உடல் நிலையை பார்த்து நலம் விசாரிப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு பெரிய மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இனி கவலை வேண்டாம் உங்களுக்கு, வாரம் ஒரு முறை துவரம் பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இரத்த அழுத்தம்
இப்பொழுதெல்லாம் சிறிய வயதில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அதிக பொட்டாசியம் சத்து உள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடிகிறது. எனவே, இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு ஆற்றல்
நம் உடலை எந்த நோயும் அணுக கூடாது, என்றால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். துவரை பருப்பில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கடலை பருப்பு
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் கடலை பருப்பும் ஒன்று. இந்த கடலை பருப்பை சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
சருமம்
கடலை பருப்பினை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோல் தொடர்பான எந்த நோயும் வராது. இதில் இருக்கும் எண்ணெய் சத்துக்கள் உடலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து, நம் தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களிடமிருந்தும் பாதுகாக்கும்.
இதயத்தை பாதுகாக்க
இப்போது நம்மில் பலருக்கு இதயம் சம்மந்தமான நோய் வர தொடங்கிவிட்டது. கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்சத்து, குறைந்த அளவு கொழுப்புசத்து இவற்றின் மூலம் இதயத்தை மேம்படுத்தலாம். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதில் உள்ள நார்சத்து கொழுப்பு சேர்வதை தடுத்து, நம் ஆயுளையும் அதிகரிக்கிறது.
நீரிழிவு
இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே நீரிழிவு நோய் வர தொடங்கி விட்டது. நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்து விட்டாலே அவரது எடை முதலில் குறைய தொடங்கும், பின்பு அவரது பலமும் குறைய தொடங்கி விடும். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடலை பருப்பால் செய்த உணவுகளை உண்டு வந்தாலே போதும். அவர்களுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடும்.
பாசிப்பருப்பு
நம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பருப்புகளில் ஒன்று தான் பாசிப்பருப்பு. இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை நாம் பார்ப்போம்.
காய்ச்சலை காணாமல் செய்யும்
சின்னமை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பருப்பினை ஊறவைத்து, அந்த தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். இது மட்டுமில்லாமல், காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பருப்பு சிறந்த மருந்தாகும்.
நினைவு திறன் கூடும்
தற்போதைய காலத்தில் நினைவு திறன் அனைவருக்குமே குறைந்து கொண்டே வருகிறது. அதனால், அது போன்று உள்ளவர்களுக்கு வாரம் ஒரு முறை பாசிப்பருப்பை மசியல் செய்து கொடுக்கலாம். அல்லது பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவு திறன் அதிகரிக்க தொடங்கும்.
அழகு சாதனம்
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு மாவை தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலை முடியில் பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்தால் பொடுகு குறைய தொடங்கும்.
இவற்றை வைத்து உங்களது தேவை எதுவோ அதற்கு ஏற்றார் போல ஒரு பருப்பை நீங்கள் தேர்வு செய்து கொள்வது நல்லது. பருப்புகள் என்று எடுத்தால் எல்லா உறுப்புகளுமே நல்ல பருப்புகள் தான் அவரவர் தேவைக்கு ஏற்ப பருப்புகளை தேர்ந்தெடுத்து வயதுக்கு ஏற்பவும் ஜீரண சக்திக்கு ஏற்பவும் பயன்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது.