வேர் இஸ் த பார்ட்டி?

Spread the love

Where is the Party?     இன்றைய நவீன வாழ்க்கையில் பார்ட்டி (Party) என்பது ஒர் தவிர்க்க முடியாத சொல் ஆகிவிட்டது! பிறந்த நாள், முதல் சம்பளம், கல்யாண நாள், நிச்சயத்தார்த்த, பேச்சுவர், திருமண பார்ட்டி, குழந்தை பிறந்தவுடன், வேலை கிடைத்ததற்கு, சம்பளம் வாங்கியதற்கு என எதற்கெடுத்தாலும் பார்ட்டி எனும் நிலை ஏற்பட்டுவிட்டது.

சாதாரணமாக ஒரு டீ சாப்பிடுவதிலிருந்து சுமார் 6 மணி நேரம் ‘தண்ணீர்’ அடித்து விட்டு கும்மாளம் போட்டு ஆடும் வரை எல்லாமே பார்ட்டி தான். இன்னும், ஏன், பெரிய கம்பெனிகளில் “வீக் எண்ட் பார்ட்டி அலவுன்ஸ்” என்று கூட இதற்காகத் தனியான அலவுன்சு மற்றும் விசேஷ அனுமதி டிக்கெட்டுகள் கூட வழங்குகின்றனர்.

பார்ட்டி மது என்பதெல்லாம் ஒன்றும் புதிய சொற்களோ தீண்டத்தகாத சொற்களோ அல்ல! பண்டைக் காலங்களில் கூட மன்னர்கள் தங்களது விசேஷ விருந்துகளில் விருந்தினருக்கும் ‘சோம பானம்’ வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளனர். இந்த சோம பானம் அருந்துவதால் உடலும் மனமும் உற்சாகமூட்டப்படுவதாக அன்று முதல் இன்று வரை கருதப்பட்டு வருகின்றது. அளவோடு நிற்கும் பட்சத்தில் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சுதானே! ஏதோ மதுபானம் அருந்துவதற்கு ஏதோ சாக்குப்போக்கு சொல்வதாக கருதிவிடவேண்டாம். மது என்பது என்றுமே நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிப்பது தான் அதில் எந்த ஒரு, ஒரு சதவிகித சந்தேகமும் இல்லை.

மது, போதை, லாஹிரி வஸ்துகள் இன்று பல விதமாக உபயோகத்தில் இருந்து வருகின்றது. நவீன வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய நச்சுப் பொருட்களின் தாக்கம் போதாது என்று இந்த லாஹிரி வஸ்துகளின் பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது இளைஞர்களில் ஒரு பத்து சதவிகிதப் பேராவது மது அருந்தாமல் இருப்பார்களா? என்றால் சந்தேகம் தான். அதற்கு இன்று அவர்கள் சொல்லும் ஒரே காரணம் டென்ஷன், ரிலாக்ஸ்சேஷன்.

புகைப்பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டாலும் இன்றும் நடைமுறையில் பலர் சாலைகளில் சாலையோரங்களில் வீட்டு பால்கனிகளில் புகை பிடிப்பதை பார்க்கத்தானே செய்கிறோம். புகை முற்றிலும் மறைந்து விடவில்லை தானே? மது புகை போதாது என்று இன்று இன்னும் விதவிதமான பாக்கு வகையறாக்களும் விற்கத்தானே செய்கின்றது.

இவற்றையெல்லாம் ஒழிக்க முடியுமா? முடியாதா?

            “திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

             திருட்டை ஒழிக்க முடியாது”

என்று பழங்காலத்து தத்துவப் பாடலில் வரும் வரி போல மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், பாக்கு போடுபவர்கள் அவர்களாக பார்த்து நிறுத்தாவிட்டால் இவற்றை ஒழிக்கவே முடியாது.

இவற்றிலிருந்து அவர்களை மீட்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நம்மால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியும் கட்டாயப்படுத்த முடியும். ஆனால் அவர்கள் நம்முன்னே பயன்படுத்ததாமல், நமக்குத் தெரியாமல் பயன்படுத்தலாமே! அதற்கு என்ன செய்வது? அதற்கு ஒரே வழி, அவர்களது உடல் நலனில் நாம் அக்கரை எடுத்துக் கொள்வதேயாகும். அவர்கள் எத்தகைய போதைப் பொருள் (மது, புகை, பாக்கு போன்றவை) உபயோகித்தாலும் நாம் அவர்களது உடலைப் பேணிப்பாதுகாத்து வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். மது, புகை, பாக்கு போன்ற போதைகள் ஏற்படுத்தும் தீங்கினை எதிர்கொள்ள முடியும். அவை உடலை பாதிக்காதவாறு உடலை பேணி பாதுகாத்திட முடியும்.

உடலின் உள் நுழையும் எந்த ஒரு நச்சுப்பொருளும் முதலில் தாக்குவது, அல்லது உள்வந்துள்ள நச்சுப்பொருளை சமன் செய்வது உடலில் முக்கோணவடிவில் உள்ள கல்லீரல் வயிற்றின் இடப்புறமாக அமைந்துள்ளது. கல்லீரல் சுரக்கக்கூடிய சுரப்புதான் பைல் எனப்படுகின்றது. இந்த பைல் தான் கொழுப்புப் பொருட்களின் ஜீரணத்திற்கு பயன்படுகின்றது. கல்லீரல் சுரக்கக் கூடிய பைல் எனும் சுரப்பு பித்தம் என தமிழில் அழைக்கப்படுகின்றது. இந்த பித்தம், பித்தப்பையில் தேக்கி வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப வயிற்றின் உட்புறம் அனுப்பப்படுகின்றது. அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்ணும் பொழுது அதிகமான பித்தம் வயிற்றினுள் செலுத்தப்பட்டு கொழுப்பை ஜீரணிக்க பயன்படுத்தப்படுகின்றது.

கல்லீரலின் முக்கிய செயல்பாடுகள்:

வைட்மின் மற்றும் மினரல்களை சேமித்து வைப்பது.

உடலினுள் வரும் நச்சுப்பொருட்களை சமன் செய்வது

ஜீரண சக்தியை சீர்படுத்துவது.

சக்தியை சர்க்கரைவடிவில் தேக்கிவைக்கின்றது.

இரத்தத்தை உற்பத்தி செய்கின்றது.

புதிய புரதங்களை உற்பத்தி செய்கின்றது.

நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் உள்ள நச்சுக்களை, உடலுக்கு ஒவ்வாத எண்ணற்ற செயற்கைப்பொருட்கள் (போரைப்) வேதிப்பொருட்களை (கெமிக்கல்) உடலில் பிரித்து வெளியேற்றக்கூடியது.

கல்லீரல் தான் உடலின் லேபரட்டரி அதாவது இராசயன ஆராய்ச்சிக் கூடம் என அழைக்கப்படுகின்றது. ஏனெனில் கல்லீரல் ஒவ்வொரு பொருளாக சோதித்து உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே உடலை ஒத்துக்கொள்ளாத பொருளாக இருந்தால் அது தன்னைத்தானே அழித்துக்கொண்டும் கூட அப்பொருளை சமன்செய்திட முற்படும்.

உதாரணமாக தற்கொலை செய்து கொள்ள வயல் வெளிகளில் பூச்சி மருந்தைக் குடித்துவிடுவர். அத்தகையவர்களை பரிசோதித்துப்பார்த்தால் அவர்களது கல்லீரல் காணாமற்போயிருக்கும். அத்தகைய கொடூரமான நச்சுப்பொருட்களை சமன் செய்யும் போரில் கல்லீரல் தோற்றுப்போய் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிடும். எனவே தான் பூச்சி மருந்தைக் குடித்தவர்களுக்கு கல்லீரல் இருப்பதில்லை அல்லது அழிந்த நிலையில் இருக்கும்.

பூச்சி மருந்தைக் குடித்தவர்களின் நிலை இதுவென்றால் அன்றாடமோ அல்லது பார்ட்டிக்களிலோ மது, புகை, பாக்கு, புகையிலை, போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் நிலைதான் என்ன?

அவர்களின் நிலை சற்று மாறுபட்டு அவர்களுக்கு நச்சுப்பொருளின் தன்மை பூச்சி மருந்தின் தன்மையை விட குறைவாக இருப்பதால் அந்த சமன் செய்யும் போரில் கல்லீரல் வெற்றி கண்டு அந்த ஒவ்வாத நச்சுப்பொருளை அதன் தன்மையை செயல்இழக்கச் செய்து விடுகின்றது. நச்சுப்பொருள் சிறுநீர் மற்றும் மலம் மூலமாக வெளியேற்றப்படுகின்றது.

ஆனால் இந்த நிலை தினசரியோ அல்லது அடிக்கடியோ ஏற்படும் பொழுது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது நிலைகுலையச் செய்கிறது. கல்லீரல் தனது நூறு சதவிகித செயல்பாட்டை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடுகின்றது.

இதுவும் ஒரு வகையில் பூச்சி மருந்து போலத்தானே? பூச்சி மருந்து 1/2 மணி 1 மணி நேரத்தில் ஜெயித்து விடுகின்றது. ஆனால் போதைகள் 5, 10, 15 வருடங்களில் பூச்சி மருந்து செய்யும் வேலையைச் செய்கின்றது. காலம் தான் வேறுபடுகின்றதே தவிர செயல்பாடு சீரழிவு எல்லாம் ஒன்று தான்.

இவற்றிலிருந்து உடலைப்பாதுகாப்பது எப்படி?

போதைப் பொருட்கள் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகளை அறிந்து கொண்டுவிட்டீர்கள். தானே? இவற்றிலிருந்து விடுபடுவது போதையை விட்டொழிப்பதேயாகும். விட்டொழிக்க முடியாதவர்கள் தங்களது உடலைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஓர் உன்னத வழி கல்லீரலின் செயல்பாட்டைத் மூலிகைகளால் தூண்டுவது. கல்லீரலைத் தூண்டவோ ஆரோக்கியமாக செயல்படவோ செய்ய ஆங்கில மருந்துகள் மற்றும் பிற மருத்துவ முறைகளில் எந்த ஒரு வழியும் இல்லை. மூலிகைகளால் மட்டுமே தான் அது முடியும்.

கல்லீரலை வலுப்பெறச் செய்ய மூலிகைகள் ரசாயனம் உள்ளன அவற்றை போதைகள் உபயோகித்த மறுநாள் உணவில் சேர்த்துக் கொண்டால் அந்த போதைப் பொருட்கள் ஏற்படுத்திய தீங்குகளை சமன் செய்து கல்லீரலை வலுப்றெச்செய்து போதைகளை ஒழித்திட ஆயத்தமாக்கிட முடியும். கல்லீரல் செயல்பாட்டைத்தூண்டும்.


Spread the love