கோதுமை ரவை சமையல்

Spread the love

கோதுமை ரவை புலாவ்

கோதுமை ரவை – 1 கப்
பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
குடமிளகாய் – 1
கேரட் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 சிறு துண்டு
நெய் (அ) எண்ணெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:-


வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் முதலியவற்றை ஒரே அளவுள்ள சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி அதில் பட்டை போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, கேரட், பட்டாணி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்டையும் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக கோதுமை ரவையையும் போட்டு வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு சத்தம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

கோதுமை ரவை இட்லி :-

தேவையான பொருட்கள்


கோதுமை ரவை – 4 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1/4 டீஸ்பூன்

செய்முறை :-


பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர் எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love