தைராய்டு என்பது நம் கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு நாளமில்லாச் சுரப்பி ஆகும். இது ‘டிரை அயோடா தைரோனின்’ (T3) மற்றும் தைராக்சின் (T4) என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது.
இச்சுரப்பி, பரிவு நரம்பு மண்டலம், துணைப் பகுதி நரம்பு மண்டலம் மற்றும் நுரையீரல் இரைப்பை, இதயம், கழுத்து ஆகிய பகுதிகளைக் கட்டுப்படுத்தும் பத்தாவது கபால நரம்பு ஆகியவற்றை இயக்கும் பணியினைச் செய்கிறது. தைராக்சின் (T4) என்ற ஹார்மோன் சுரப்புக்கு ‘அயோடின்’ சத்து அதிகம் அவசியமாகும்.
தைராய்டு சுரப்பி சுரக்கும் ட்டீ 3 மற்றும் ட்டீ4 ஆகிய ஹார்மோன் சுரப்புகளை, மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் ‘தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்’ கட்டுப்படுத்துகிறது.
தைராய்டு சுரக்கும் ட்டீ3 மற்றும் ட்டீ4 ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும் நிலைக்கு ‘ஹைப்பர் தைராய்டிசம்’ என்று பெயர்.
தைராக்சின் வேலை
தைராக்சின் (T4) என்ற ஹார்மோன் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் பிராண வாயுவை கட்டுப்படுத்துகிறது.
பசியுணர்வு, உடல் எடை போன்றவற்றையும் இதுதான் கட்டுப்படுத்துகிறது.
முக்கியமாக இயங்கு தசைகளிலுள்ள புரதச் சத்து சிதைக்கப்படுவது, எலும்புகளில் சுண்ணாம்புச் சத்து படிவது போன்றவற்றையும் இதுதான் கட்டுப்படுத்துகிறது.
உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவையும் இதுதான் கட்டுப்படுத்துகிறது.
உடல் மற்றும் மனவளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக விளங்குகிறது.
இதயத்தில் நேரடியாக செயல்புரிந்து, இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
பால் இன உறுப்புகளின் வளர்ச்சியையும் இதுதான் தீர்மானிக்கிறது.
இந்த தைராக்சின் ஹார்மோன் சுரப்பின் அளவு உடலில் அதிகரிப்பதால், பலவித வகைப்பாடுகளும் மற்றும் குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
இதே நிலை தொடர்ந்து இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடித்தால் இந்நோயினால் பாதிக்கப்பட போவது, 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் உள்ள நமது எதிர்கால சந்ததியினர்தான்.
நோய்க்கான சிகிச்சை
இந்நோயின் ஆரம்ப நிலைக்கு ஹோமியோ மருத்துவ சிகிச்சையே போதும். ஆனால், முற்றிய நிலையில் ‘அறுவை சிகிச்சை’ ஒன்றுதான் தீர்வு. அத்துடன், அறுவை சிகிச்சைக்குப் பின்னர்,அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். மேலும், இந்நோய் ‘புற்றுநோயாக’ உருமாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.
ஆயுர்வேதம்.காம்