மன அழுத்தம் என்றால் என்ன, ஏன் ஏற்படுகின்றது

Spread the love

மன அழுத்தம் எத்தனை வகைப்படும் மன அழுத்தம் எத்தகைய ஆரோக்கியக் கேடுகளையும் உடல் நிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது. அவற்றை எவ்வாறு நாம் கையாள வேண்டும் என்பனவற்றைப் பார்போம். தற்பொழுது உணவு முறைக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ள சம்பந்தத்தையும் அவற்றை எவ்வாறு சீராக்கலாம் என்பதனையும் பார்ப்போம்.

மன அழுத்தம்

மன அழுத்தம் என்பது ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ் (ஷிtக்ஷீமீss) என அழைக்கப்படுகின்றது. அழுத்தம் என்றும் கூறலாம். அல்லது இறுக்கம் எனவும் கூறலாம். இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தேவையற்ற எதிர்மறையான சிந்தனைகள் என்றும், கற்பனையான பயம் என்றும் நம்மால் முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வி என்றும் கூட கூறலாம்.

மன அழுத்தம் என்பது வயதிற்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடக் கூடியது. ஆனால் இதனை பொதுவாக மூன்று வகையாகப் வகைப்படுத்தலாம். குறுகிய கால மன அழுத்தம், இது குறுகிய காலமே இருக்கக் கூடியது. எனவே தான் இதனை குறுகிய கால மன அழுத்தம் என்கிறோம். இதற்கு தகுந்த உதாரணங்கள், பஸ்சைப் பிடிக்க வேண்டும், நேரமாகி விட்டது கிளம்ப முடியவில்லை, ஆபிஸிற்கு கிளம்புவது போன்றவை. இவை சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும்.

இடைக்கால மன அழுத்தம்

இது குறுகிய கால மன அழுத்தத்தை விட அதிக நேரம் நீடிக்கக் கூடியது. இதற்கு தகுந்த உதாரணங்கள் பரீட்சைக்கு படிப்பது, பரீட்சை ரிசல்டை எதிர்பார்ப்பது, அலுவலகத்தில் புதிய பாஸ் வருவது, பதவி உயர்வு கிடைப்பது போன்றவை. இந்த இடைக்கால மன அழுத்தம் குறுகிய கால மன அழுத்தத்தைப் போல ஆரம்பித்து போகப் போக அதுவே வாழ்க்கை என்ற நிலை ஏற்பட்டு விடும். இத்தகைய மன அழுத்தம் ஒரு சில மணி நேரம் முதல் ஒரு சில மாதங்கள் வரை நீடிக்கும்.

நீண்ட கால மன அழுத்தம்

இத்தகைய மன அழுத்தம் நீண்டு கொண்டே போகும் எத்தனை மாதங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து கொண்டே வரும். இதற்கு தகுந்த உதராணங்கள், பிடித்தமானவர்களின் இறப்பு, நோய்களில் பாதிக்கப்படுவது, நோய்களில் பிடித்தமானவர்கள் அவதிப்படுவது. இத்தகைய மன அழுத்தம் சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை தொடரும்.

மன அழுத்தம் ஏற்படுத்தும் மாற்றம்

மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியது பெரிதும் மாற்றக் கூடியது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முதலில் இது இரத்தக் குழாய்களையே பாதிக்கக் கூடியவை.

இரத்தக் குழாய் உடலுக்கும் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. அதுவே பாதிப்பு அடையும் பொழுது உடலின் அனைத்து செயல்களும் பாதிப்படையும். உடலுக்கு சத்துக்களை சப்ளை செய்வதிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவது வரை அனைத்து முக்கிய செயல்களையும் செய்யக் கூடியது. எனவே அதற்கு ஓரு பிரச்சனை என்றால் அது ஒட்டு மொத்த உடலையும் பாதிக்கும் இல்லையா? எனவே தான் கவனமாக இருக்க வேண்டும்.

மன அழுத்தம் ஏற்பட்டவுடன் இரத்த நாளங்கள் சுருங்கி விடுகின்றன. இதனால் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் கிடைப்பதில்லை. எனவே உடல் அதிக இரத்தத்தைப் பெறுவதற்காக இதயத்தை அதிகமாக இயக்குகின்றது. உடனடியாக இரத்த அழுத்தம் உயருகிறது.

உடலின் சீரான இயக்கத்திற்குத் தேவையான அளவு இரத்தம் கிடைக்காததால் உடல் அதிகமாக இதயத்தை இயக்குவதாலும் கை கால்கள் மெதுவாக நடுங்க ஆரம்பிக்கின்றன.

தேவையான அளவு இரத்தம் வயிற்றிற்கும் குடலுக்கும் செல்லாததால் ஜீரண சக்தி தடைபடுகின்றது.

ஜீரண சக்தி மற்றும் உடலின் பிற செயல்பாட்டிற்குத் தேவையான சுரப்புகளும் அமிலங்களும் சுரக்காமல் போகின்றன.

உடலுக்கு தேவையான அளவு சத்து கிடைக்காததாலும், ஜீரண சக்தி முழுமை அடையாததாலும் உடலால் உண்ணும் உணவிலிருந்து சக்தியை கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

சக்தி கிடைக்காததால் உடல் ஒரு விதமான தேவையற்ற பசியை தூண்டுகின்றது. இனிப்பு பொருட்கள் மாவுச்சத்து நிறைந்த உணவுப் பதார்த்தங்களை உடல் நாடி உண்ண ஆரம்பிக்கின்றது.

ஜீரணம் முழுமையடையாததால் வயிற்றில் தங்கியுள்ள ஜீரணமாகாத உணவுப் பொருட்கள் புளித்துப்போய் தேவையற்ற வாய்வை, வயிற்று உப்புசத்தை, அஜீரணத்தை, மலச்சிக்கலை, நெஞ்செரிச்சலை உண்டாக்குகின்றது.

மேற்சொன்ன அனைத்திற்கும் காரணம் ஸ்ட்ரெஸ், அதனால் ஏற்பட்ட இரத்தக் குழாய் குறுக்கம் அதிக இரத்த அழுத்தம் குறைவான இரத்த ஒட்டம். இவற்றை சீராக்கி நிலையை மாற்ற நாம் இரத்த நாளங்களை தளர்த்த வேண்டும். இரத்த நாளங்களின் மீள் திறன் நன்றாக அமைய வேண்டும். இரத்தம் சீராகப் பாய வேண்டும். இதனை இயற்கையாக நடைபெறச் செய்ய நாம் சில உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

சில உணவுகளை சேர்க்க வேண்டும். சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு நாம் உணவு முறை மாற்றத்தை மேற்கொள்ளும் பொழுது மன அழுத்தத்தால் ஏற்படும் மாறுதல்களை நாம் இயல்பாக சரி செய்ய முடியும். அவற்றின் பாதிப்பை குறைக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

சேர்க்க வேண்டியவை

பொட்டாஷியம் – ஒரு முக்கியமான தாதுப்பொருள் சத்து ஆகும். இது இரத்த நாளங்கள் மற்றும் தசைகளின் இறுக்கத்தைப் போக்கி இயல்பு நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே பொட்டாஷியம் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதிக பொட்டாஷியம் நிறைந்த உணவு ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம்.

புரதம் – மன அழுத்தத்தின் பொழுது உடலில் நைட்ரஜன் தேவை அதிகமாகின்றது. இந்த அதிக நைட்ரஜன் தேவையை அதிக புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். சுமார் பத்து சதவிகித அதிக புரதம் நிலைமையை மாற்றி அமைக்கும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இது இரத்த நாளங்கள் மற்றும் செல்களின் மீள் திறனை மேம்படுத்துகின்றது. இதனால் மன அழுத்தத்தால் குறுகிவுள்ள இரத்த நாளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிகிறது. வைட்டமின் சி நிறைந்தவை அனைத்து புளிப்பு உள்ள பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகும். இவற்றை பச்சையாக உண்ண நல்ல மாற்றம் தெரியும்.

வைட்டமின் பி உடலின் ஜீரண சக்திக்கும் உடலில் உணவை ஜீரணிக்கும் தன்மை மேம்படவும் இன்றியமையாதது. இது அதிகமாக இருந்தால் உடல் இயல்பாக செயல்படும். எனவே வைட்டமின் சி நிறைந்த தயிர், மோர் போன்றவற்றை சேர்க்கலாம்.

கால்ஷியம் உடலுக்கு மிகவும் முக்கியமானது இது சரிவிகிதத்தில் கிடைத்தால் தான் உடல் இயல்பாக செயல்பட்டு கழிவுகளை எளிதாக வெளியேற்ற முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே கால்ஷியம் நிறைந்த உணவுகளை பால், தயிர் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியம். எவ்வளவு தான் சத்தான உணவுகளை உண்டாலும் தேவையற்ற உணவுகளைத் தவிர்த்தாலும் நாளன்றிற்கு சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் உடலுக்கு தேவை. இது எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இன்னும் அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொட்டாஷியத்திற்கு நேர் எதிர்மாறான செயல்பாட்டைக் கொண்டது சோடியம் இதனை குறைப்பது மிக மிக அவசியம். சோடியம் இரத்த நாளங்களை குறுக்கக் கூடியது. இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடியது. இதயத்தை அதிகமாக செயல்பட வைக்கக் கூடியது. எனவே சோடியம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு உப்பை குறைக்க வேண்டுமா, கொழுப்பைக் குறைப்பது மிக மிக முக்கியம். கொழுப்பு அதிகரிப்பதால் ஜீரண சக்தி குறையும். மன அழுத்தத்தால் ஏற்கனவே ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் கொழுப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது.

மது, புகை, காபி, டீ போன்றவற்றை குறைப்பது நல்லது. இவற்றில் அதிகப்படியான உந்துதல் சக்தி இருப்பதாலும் நிகோடின் கஃபின் ஆல்கஹால் போன்றவை இருப்பதால் இவற்றை உபயோகித்தவுடன் மன இறுக்கம் தளர்ந்து நல்ல முன்னேற்றம் காட்டுவது போல முதலில் தோன்றி பின் மன அழுத்தத்தை ஏற்படுத்தி மேலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்து விடும். மேலும் இரத்த நாளங்கள் சிறிது நேரத்தில் குறுக்கி இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும்.

மன அழுத்தம் உள்ளவர்கள் 3 வேளை மூச்சுப்பிடிக்க உண்பதை விட 4 அல்லது 5 வேளைகள் அளவு கம்மியாக உண்ணலாம். இதனால் வயிறு முட்டிக் கொண்டு இதயத்தை அழுத்தும் மாறாக அதிகமாக உண்ணும் பொழுது வயிறு உப்பி இதயப் பகுதியை அழுத்தும். இதனால் இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். எனவே அரை வயிறு உணவு உண்பது நல்லது. மூன்று வேளைக்கு பதிலாக மாலை டிபன் இரவு உணவிற்கு பின்னர் சூடான பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் என்ன தான் உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தினாலும் நடைப்பயிற்சியைப் பழக்கமாக்கிக் கொள்வது இன்றியமையாதது. நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இரத்தம் சீராக உடலெங்கும் பாய்கின்றது. ஜீரண சக்தி முழுமையடைகின்றது. உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் உடல் வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறுகின்றது.

வயிறு மற்றும் உடல் குளுமை அடைகின்றது. இது மன அழுத்தத்தை போக்குவது மட்டுமல்லாது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. எனவே உணவுப் பழக்கத்தையும் கடைபிடியுங்கள் நடைப் பயிற்சியையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.


Spread the love