சுகப்பிரசவம் என்றால் என்ன?

Spread the love

பெண்ணின் பிறப்புறுப்பு வழியே குழந்தை பிறப்பது தான் நார்மல் சுகப்பிரசவம். இந்த பிரசவத்தில், கர்ப்பமானதிலிருந்து 36 லிருந்து 39 வாரங்களுக்குள் குழந்தைகள் பிறக்கும். மூன்று நிலைகளில் பிரசவம் நிகழும்

விரிவடைதல் (Dilation)

வெளியேற்றுதல் (Expulsion))

தொப்புள் கொடி (Placenta)

கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதி (வாய்) 3 செ.மீ. விரிவடைவது முதல் நிலை. இந்த மாதிரி விரிவடைவது பிரசவ ஆரம்பத்தின் அறிகுறி. குழந்தையின் தலை வெளி வர ஏதுவாக, கர்பப்பையின் வாய் முழுமையாக 10 செ.மீ. வரை விரிவடையும். முதல் பிரசவமாக இருந்தால் பிரசவ வேதனை 8 மணி நேரம் (அ) அதற்கு மேலிருக்கும். இரண்டாவது பிரசவத்தின் போது இந்த பிரசவ வேதனை நேரம் குறையலாம். பிரசவ வேதனை ஆரம்பமான ஒவ்வொரு மணியிலும் கர்பப்பை 1.2 செ.மீ. விரிவடைந்து 2 மணி நேரம் அவ்வாறே இருக்கும்.

இரண்டாவது நிலையில் கர்பப்பை முழுவதும் விரிவடைந்து குழந்தை வெளிவரும். சுகப்பிரசவத்தில் குழந்தையின் தலை இடுப்பு எலும்புக் கூட்டின் வழியே, அதன் விளிம்பின் வழியே வெளியே வரும். பிறகு உள் பிறப்பு உறுப்புகளின் வளைவு வழியே வருகையில் வெளியிலிருந்து தலை தெரியும். குழந்தை வெளியே எந்த பாதிப்பமில்லாமல் வரும். இது நார்மல் பிரசவம்.

மூன்றவாது நிலை – குழந்தை பிறந்த 10 (அ) 15 நிமிடத்தில் தொப்புள் கொடி கர்பப்பையிலிருந்து வெளியே தள்ளப்படும்.

சுகப்பிரசவத்திற்கு ஆயுர்வேத அறிவுரைகள்

பிரசவத்திற்கு முன் கர்ப்பிணியை நன்கு கவனிக்க வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் கருத்து. மாதா மாதம் பிரத்யேக கவனம் தேவை என்கிறது ஆயுர்வேதம். இது மாதாந்திர சிகிச்சை எனப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஆயுர்வேதத்தில் ஒன்பது வகை மருந்துகளும் மூலிகைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. தவிர கர்ப்பிணிக்கு தோஷங்கள் சீர்குலைந்திருந்தால், பஞ்சகர்மா சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.

ஆயுர்வேதத்தின் படி ஒவ்வொரு மாதமும் குழந்தை (கரு) யின் உடலில் விதவிதமான உடல் கட்டுமானப் பொருள் உருவாகிறது. இது ‘தாது’ எனப்படும். இந்த தாதுவை வளர்க்க ஆயுர்வேத மருந்துகள் மாதா மாதம் தேவைப்படும். மருந்துகள் மாதா மாதம் தேவைப்படும். உணவு மட்டுமன்றி வேறு பல பிரச்சனைகள் ஆயுர்வேதத்தால் சரி செய்யப்படும். உயர் ரத்த அழுத்தம், மதுமேகம் (நீரிழிவு) வாந்தி, அதிக அமில சுரப்பு, குறை பிரசவம் முதலியவற்றுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வுகள் உள்ளன.

சில பொதுவான டிப்ஸ்

நடப்பது நார்மல் டெலிவரிக்கு உதவும். பிரசவ வேதனை தென்பட்ட முதல் அறிகுறியிலிருந்தே நடக்க வேண்டும். பிரசவ வேதனையின் போதே நடப்பது நல்லது என்கின்றனர் சில டாக்டர்கள்.

7 வது மாதத்திலிருந்து பூண்டை விழுதாக அரைத்து பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

9 வது மாதத்தில் வறுத்த பெருஞ்சீரகத்தை தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். சுகப்பிரசவத்திற்கு உதவும்.

தினமும் மாதுளம்பழ ஜுஸை குடித்து வந்தால் தாய் மற்றும் குழந்தையின் செல்கள் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.

படுக்கு முன்பு வெந்நீரில் குளிக்கவும். இதனால் Stress, மன உளைச்சல் அலுப்புகள் குறையும்.

பிரசவ வேதனை ஆரம்பமானதும் ஒரு தேக்கரண்டி தேனை குடிக்கவும். தவிர கருஞ்சீரகப் பொடியை தேனில் குழைத்து வயிற்றில் தடவிக் கொள்ளவும். இது சுகப்பிரசவத்திற்கு ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்.

குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் நன்கு சுரக்க – வெந்தயம் 1/4 மேசைக்கரண்டி, பச்சரிசி – 1/2 கப், பூண்டு – 5 பல், இவற்றை ஆவியில் வேக வைத்து நசுக்கவும். இதை தண்ணீருடன் குடிக்கவும். 7 வது மாதத்திலிருந்து குடித்து வரவும்.

எல்லா ஆயுர்வேத அறிவுரைகளையும் உங்கள் டாக்டரின் அனுமதியுடனும் இல்லை ஆயுர்வேத நிபுணரின் கண்காணிப்பின் மேற்கொள்ளவும்.

இதர டிப்ஸ்

பிரசவத்தை தூண்டுபவை ஆக்சிடாசின் (Oxytocin) மற்றும் ப்ரோஸ்டாக்ளான்டின் (Prostaglandins)  ஹார்மோன்கள்.

பெண்களுக்கான 5 பாலுறவு யோசனைகள்

நம் நாட்டில் பண்டைய காலம் தொட்டே பாலுறவைப் பற்றி பேசுவதே தவறு தீய செயல் என்று கருதப்பட்டு வந்ததால் பாலுறவு பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விட்டது. வெளிச்சத்துக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை. தவறான பல விஷயங்களை நடை முறையிலேயே இருந்து வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் பெண்களே தான். இதற்கு நமது சமூக அமைப்பும் பாலுறவு பற்றிய தவறான சிந்தனைகளுமே காரணம்.

பாலுறவு என்றதுமே அது ஏதோ ஆண்களின் செயல் என்றே கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதனால், ஆண்கள் தமக்கு என ஒரு வித சிந்தனையையும், செயல்பாடுகளையும் கொண்டுள்ளனர். எனவே, பல பெண்களுக்கு, ஆண்களின் சிந்தனையும் எதிர்பார்ப்பும் என்ன என்றே தெரியாமல் போய்விடுகின்றது. இல்லறம் நல்லறமாக அமைந்திட இவ் விஷயத்தில் பெண்கள் அக்கறை எடுத்துத் தெரிந்து கொள்வது அவசியம்.

இதோ சில யோசனைகள்

கவர்ச்சி

பெண்களுக்கு கவர்ச்சி என்பது மூளை சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் அதுவே ஆண்களுக்கு கவர்ச்சி என்பது கண்கள் மூலமாக வந்தடைகின்றது. பெண்கள் கிளர்ச்சியூட்டும் புத்தகங்களை படிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், ஆண்களோ கவர்ச்சியான படங்களையும், செயல்களையும் காண்பதில் கவனம் செலுத்துகின்றனர். எனவே, உங்கள் கணவனை மனதில் கவர்ச்சியை உண்டாக்க உங்களது உருவம் தான் முக்கியம். எனவே, அவரது மனதில் இடம் பிடிக்க நன்கு உடலையும் உடைகளையும் கவர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். இது தான் உங்கள் கணவன் பிற பெண்களை பார்ப்பதற்கு ஒரே காரணம். இதனைச் சரியாகச் செய்ய இதோ சில வழிகள் உங்கள் கணவனை கவரும் விதமாக நல்ல கவர்ச்சியான உடைகளை அணியலாம். உள்ளாடைகள் நைட்டிகள் போன்றவற்றை கவர்ச்சியாக அணிந்து அதன குறைந்த வெளிச்சத்தில் உங்கள் கணவன் முன்பு உலாவலாம். உங்கள் கணவனின் வயிற்றுக்கு உணவளிக்கும் நீங்கள் தானே அவரது கண்களுக்கும் உணவளிக்க வேண்டும்.

மன இறுக்கம்

வெற்றி எனும் இலக்கை நோக்கி போட்டு போட்டு உழைத்திடும் எந்த மனிதனுக்கும் தோல்வி சரிவு. வெறுப்பு என்பது இயல்பே. அதன் தொடர்ச்சியாக மன இறுக்கம், மனச்சோர்வும் ஏற்படுவதும் இயல்பே இதனை சரி செய்து மனதைத் தளர்த்தி உற்சாகம் பிறக்கச் செய்வதும். மனைவியாகிய உங்களது கடமையே. சிரிப்பாகவும், கூத்தாகவும், குழந்தைகளுடன் சேர்ந்து கணவரை குதூகலப்படுத்தலாம். இது அவருக்கு கொண்டாட்டத்தை தரும். மன இறுக்கத்தை போக்கிட உதவும். வேடிக்கை செய்யலாம். ஒரு நகைச்சுவை துணுக்கு சொல்லலாம். பாட்டுப் பாடலாம். இதமாக பேசலாம். இவை அனைத்தும் அவரது மன இறுக்கத்தை குறைத்திட உதவும்.

புத்துணர்ச்சி

ஆண்கள் எந்த நிலையிலும் எக்காரணத்திலும் உடல் உறவையே விரும்புகின்றனர். அதில் தான் முடிப்பார்கள் என பல பெண்களும் தவறான ஒரு எண்ணம் கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவறு. ஆண்களுக்கு உறவை விட உணர்வே முக்கியம். தொடுதல் என்பது இதில் பெறும் பங்கு வகிக்கின்றது. அதாவது தொடுவது, வருடுவது முடியைக் கோதுவது, ஆறத் தழுவிக் கொள்வது இணைந்து இருவரும் நடை பழகுவது போன்ற பல விஷயங்கள் நேரடியான உறவு ஏற்படுத்தும். உற்சாகத்தை விட அதிக அளவு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்திடும். ஆண்களின் உடல் உறுப்புகளில் ஏற்படுகின்ற அதிக இரத்த ஒட்டம் அவர்களுள் ஒரு வேகத்தையும் ஒரு வெறியையும் ஏற்படுத்தும். இதை காதலின் ஒரு அங்கமாகவே கொள்ள வேண்டுமே ஒழிய அதனை காமத்தின் வேகம் என்று தவறாக எடுத்து விடாதீர்கள்.

பேசாதீர்

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பாதி மட்டுமே வேலை செய்ய இயலும். உறவில் ஈடுபட்டால் அவர்களால் உறவில் மட்டுமே ஈடுபட முடியும். பேசுவதை கேட்க வேண்டுமானால் அதற்கு மூளையின் மறுபாதி மட்டுமே வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் தான் பல ஆண்களால் உறவின் போது தங்கள் மனைவி எது பேசினாலும் அவர்கள் காதுகளில் அது ஏறுவதில்லை. எனவே, உறவின் போது மாமியார், நாத்தனார், கதைகளைப் பேசி அவரது தேவையான மூளையின் பாதி வேலை செய்வதை விட்டு விட்டு மறுபாதியை வேலை செய்ய வைத்து விடாதீர்கள்.

விலகுவது

பெண்கள் தங்கள் உடலையும் மனதையும் தங்களிடம் கொடுப்பதையே உச்ச கட்டமாக ஆண்கள் எண்ணுகின்றனர். எனவே, நீங்கள் விலகுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் அவர்களுக்கு புரிவதில்லை. பல சமயங்களில் தவறாகவே புரிந்து கொள்வர் ஆண்கள். எனவே, நீங்கள் விலகுகிறீர்களா, விலக்குகின்றீர்களா என்பதை தெளிவுப்படுத்துங்கள். தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பளிக்காதீர்கள். இது போன்ற ஆண்களின் பாலுறவு பற்றிய மனநிலையை பெண்கள் அறிந்து கொள்வது மிக, மிக அவசியம். அவர்கள் இவற்றை அறிந்து தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தபவர்களேயானால் அவர்களது மணவாழ்க்கை மன நிறைவானதாக அமைந்திடும்.

பெண்கள் உறவில் மகிழ்ச்சி பெற

உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைவது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதின் மூலம் நன்கு புலப்படுகிறது. பெண்கள் உச்சக்கட்டம் அடைவது பற்றி ஆண்களுக்கு தெரியாமலே போகலாம். கணவனை மகிழ்விப்பதற்காக பெண்மணி தனக்கு உச்சக்கட்டம் (Oragasm) வந்துவிட்டதாக நடிக்கலாம். உண்மையில் 10% பெண்கள் வாழ்நாள் முழுவதும் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடையாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த சதவிகிதம் தற்போது அதிகமாகியிருக்கும்.

உடலுறவின் போது ‘ரிலாக்ஸாக’ (Relax) இருக்க வேண்டும் என்பது பாலியல் நிபுணர்களின் அறிவுரை. இதனால் பல பெண்கள் உடலுறவின் போது அதிகமாக படுத்தி நிலையிலேயே இருக்கின்றனர். உண்மையில் உடலுறவின் போது “டென்ஷனும்” தேவை. எப்படி ஒரே சமயத்தில் டென்ஷனாகவும், தளர்வாகவும் இருப்பது?  உடலுறவின் போது, டென்ஷனாக இருக்க வேண்டியது தசைகள் (Muscle tension – Myotonia) அடிவயிறு, பிட்டங்கள், கால் தசைகள் இறுக்கமடைய வேண்டும். இடுப்பின் கீழ்இருக்கும் தசைகளில் சுருங்கி விரிய வேண்டும். அப்போது தான் அதிக ரத்தம் இந்த அவயங்களுக்கும் பாயும். இதனால் தான் தசை அசைவுகள் உச்சக்கட்டத்தை அடைய வைக்கும்.

இதற்கு ‘கெகல்’ பயிற்சிகள் (Kegal exercises) உதவும். இதைப் பற்றி டாக்டரிடம் அறிந்து கொண்டு தவறாமல் செய்யவும். இந்த பயிற்சி உடலுறவுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு தொல்லை தரும் அடிக்கடி சிறுநீர் கசிவையும் கட்டுப்படுத்தும்.

சரி, உடலை தளர்வாக வைத்துக் கொள்வது எப்படி? உடல் தசைகள் இறுக்கமடையட்டும். மனது அதாவது மூளை ‘ரிலாக்ஸ்’ ஆக இருக்க வேண்டும். உடலுறவின் போது சில மந்திரங்களை ஜபிக்கலாம். கணவரின் தொடுதலை ரசித்து “அப்படித்தான்” என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்! இதனால் மூளையில் வேறு சிந்தனைகள் ஒடாது. உடலுறவின் அகத்திலேயே ஆழ்ந்து விடும். மனதை அமைதியாகவும் தசைகளை தளர்வாகவும் வைக்க சில நாட்கள் முயற்சி செய்தால் சுலபமாகி விடும்.

சில மருந்துகள் கூட பெண்களின் பாலுணர்வை பாதிக்கும். உதாரணமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள். இதைப்பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பிறப்புறுப்புகளுக்கு ரத்தம் பாய்வதை அதிகரிக்க சில கருவிகள் உள்ளன.

ஆயுர்வேதத்தில் பெண்களின் உணர்வுகளை அதிகரிக்க பக்க விளைவுகள் இல்லாத அற்புத மருந்துகளும், வாஜீகர்ணா, ரசாயனம் போன்ற பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நிரந்தர பலன் தரும்.


Spread the love
error: Content is protected !!