உயிருள்ள உணவுகள் என்றால் உயிருடன் உண்ணப்படும் உணவுகளல்ல! சமைத்த பக்குவப்பட்ட உணவுகளன்றி, புத்தம் புதிய, சமைக்கப்படாத உணவுகளே உயிருள்ள உணவுகள் எனப்படுகின்றன.
இந்த பச்சை உணவுகளில் அவை பிறந்த மண்ணின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். என்ஸைம்கள், தாதுப்பொருட்கள், விட்டமின்கள், இதர சத்துக்கள், பின்னப்படாமல், கெடாமல் இருக்கும். அவற்றை மறுபடியும் நிலத்தில் பதித்தால் மறுபடியும் முளைத்து வளரும். எனவே அவை “உயிருள்ள உணவு” எனப்படுகின்றன.
சமைப்பதால் உணவின் பல சத்துக்கள் அழிந்து விடுகின்றன. பல நச்சுப்பொருட்கள் சேர்ந்து புற்றுநோய் உண்டாக வழிவகுக்கின்றன. அதுவும் சமைத்த புலால் உணவுகளால் பல நச்சுப்பொருட்கள் உடலில் சேரும் வாய்ப்புகள் அதிகம்.
சில உயிருள்ள உணவுகள்
சலாட், பச்சை கீரைகள், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், வித்துக்கள்
சூப் வகைகள்
சாக்லேட் பால் முதலியன.
சமைக்கப்படாத பச்சை உணவுகளை நார்மல் உணவுடன் சேர்த்து உண்பதால் உடலுக்கு சக்தி கூடும்.
