நவீன இன்சுலின் சிகிச்சையின் பயன்களை அனுபவியுங்கள்

Spread the love

நீரிழிவைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் உங்கள் உடல்நிலைக்கேற்றவாறு பல்வேறு மருந்துகள் எவ்விதம் வேலை செய்கின்றன என்பதை அறிந்து கொள்வதே நீரிழிவை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கு நீங்கள் எடுத்துவைக்கும் முதல் அடியாகும். தொடர்ந்து மருத்துவரை சந்தித்தல், சரியான மருத்துவம் மற்றும் மிதமான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் இணைந்த போதுமான உடற்பயிற்சி உங்களை நல்ல உடல்நலத்திற்கான பாதையில் செல்வதற்கான சரியான அடிகளை எடுத்துவைக்க உடதவும்.

நீரிழிவு என்றால் என்ன?

நீரிழிவு என்பது, இன்சுலின் சுரப்பின் பற்றாக்குறை, இன்சுலின் செயல்பாடு அல்லது அவை இரண்டின் காரணமாகவும் தொடர்ந்து இரத்தத்தில் அதிக இனிமச்சத்தை உருவாக்கும் (சர்க்கரை சத்தை) ஒரு குறைபாடாகும்.

நீரிழிவை வகை – 1 மற்றும் வகை – 2 என்று இருவிதமாகப் பிரிக்கலாம்.

வகை 1ல் உடல் இன்சுலினை மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலுமாக சுரக்காமலோ இருக்கும் நிலை காணப்படும். வகை 2 ல், உடல் சிறிதளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அது உடலுக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் உடலில் சரியாக வேலைசெய்யாமல் தடுக்கப்படலாம்.

நீரிழிவு காலப்போக்கில் உங்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்?

நீரிழிவு என்பது மோசமடையக்கூடிய ஒரு குறைபாடாகும், ஏனெனில், இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள், காலப்போக்கில் குறைந்து கொண்டே போவதால், நோயறிகுறிகள் மோசமடையக்கூடும். இரத்த இனிமச்சத்தின் அளவுகள் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே இருக்குமானால், அது உடலின் திசுக்களை தாக்க, தீங்கு விளைவிக்கக்கூடிய உபரி பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவை செல்களின் செயல்பாடுகளை மாற்றியமைப்பதால், செல்கள் சேதமடைவதற்கும் செல்களின் அழிவிற்கும் காரணமாகின்றன. நாளாவட்டத்தில், முக்கிய உறுப்புகளான இதயம், கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள் மற்றும் இரத்தநாளங்கள் போன்றவற்றின் சேதம் மற்றும் செயலிழப்புடன் தொடர்புடையதாக நீரிழிவு மாறுகிறது.

உங்களுடைய நடப்பு சிகிச்சையானது, நீண்டகால சிக்கல்களிலிருந்து உங்களைக் காக்கக்கூடிதாக உள்ளதா?

நீரிழிவுக்கான மாத்திரைகள் இரு வழிகளில் செயல்படுகின்றன. இவை உடலின் தேவைக்கேற்ப இரத்த இனிமச்சத்தை சரியான அளவில் வைப்பதற்கு இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டுகின்றன அல்லது இன்சுலினை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான உடலின் ஆற்றலை இவை மேம்படுத்துகின்றன.

இருப்பினும், உங்கள் உடலுக்கு இன்சுலினை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவரைதான் மாத்திரைகள் வேலை செய்யும். அது குறைந்தாலோ அல்லது முற்றிலுமாக இழக்கப்பட்டாலோ, இரத்த இனிம அளவுகளை குறைப்பதற்கான மாத்திரைகளின் ஆற்றலும் குறைந்துவிடும்.

உண்மையில், சில மாத்திரைகள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும் போது, உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் மதிப்புமிக்க செல்களின் இழப்பு ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது நிகழுமானால், இன்சுலினால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்.

இன்சுலின் என்றால் என்ன?

இன்சுலின் என்பது, இரத்தத்திலிருந்து உங்கள் உடலின் செல்களுக்குள் சர்க்கரைசத்து செல்வதற்கு உதவும் பொருட்டு உங்கள் உடலினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் இதன் உற்பத்தி குறைந்து போனாலோ அல்லது முற்றிலுமாக இல்லாமல் போனாலோ, அது பேனா, சிரஞ்ச் அல்லது இன்சுலின் பம்ப் மூலம் வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இன்சுலினை வாய்வழியாக எடுத்துக் கொள்ள முடியாது. (தற்போது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் இன்சுலின் வகைகள், ஹியூமன் மற்றும் அனலாகுகள் ஆகும்.

அனாலாகுகள் நவீன இன்சுலின்கள் என்று அழைக்கப்படுகினறன. இவைதான் தற்போது மருந்துகடைகளில் கிடைக்கக்கூடிய சமீபத்திய இன்சுலின் வகையாகும்.)

உங்களது தற்போதைய சிகிச்சையைக் காட்டிலும் இன்சுலின் உங்களுக்கு எவ்வாறு பயன் தருகிறது?

நீங்கள் நலமாக இருப்பதற்காக உங்கள் உடலின் செல்களுக்குத் தேவைப்படும் ஆற்றலை பெறத்தக்க வகையில் இரத்த இனிம அளவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு இன்சுலின் எடுத்துக் கொள்வது உதவுகிறது. மாத்திரைகளை பயன்படுத்திவரும் நோயாளிகளின் இரத்த இனிம அளவினை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் இன்சுலின் சிறப்பாக செயலாற்றுவதால், இதயம், கண்கள், சிறுநீரகம், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் நாளடைவில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறைவது போன்ற பல்வேறு வகையான பிற ஆதாயங்கள் கிடைக்கின்றன. ஆரம்பக்கட்டத்திலேயே துவங்கப்பட்டால், இன்சுலினால் நம் உடலில் உள்ள இன்சுலினை சுரக்கும் செல்களின் செயல்பாடுகளை காத்து, குறைந்த அளவு மருந்தே தேவைப்படுமாறு செய்ய இயலும்.

நவீன இன்சுலின் ஹியூமன் இன்சுலினைக் காட்டிலும் எவ்விதத்தில் உங்களுக்கு பயன் தருவதாக உள்ளது?

ஹியூமன் இன்சுலினில் உள்ள சில குறைபாடுகள் இல்லாதிருக்கும் வகையில் நவீன இன்சுலின் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன இன்சுலின், ஹியூமன் இன்சுலினைக் காட்டிலும் சிறந்த முறையில் நம்முடைய உடலில் சாதாரணமாக சுரக்கக்கூடிய இன்சுலினுடன் பொருத்துவதாக அமைந்துள்ளது. இது தேவைப்படும் போதெல்லாம் (குறிப்பாக உணவுக்குப்பின்) இரத்த இனிம அளவுகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த உதவுவதுடன், இரத்த இனிம அளவு வெகுவாகக் குறைந்துவிடும் வாய்ப்புகளையும் குறைத்து, நீரிழிவை நல்ல முறையில் நிர்வகிப்பதற்கும் உதவுகிறது.

நவீன இன்சுலின் உணவுநேர தேர்வுகளையும் உங்களுக்கு அளிக்கிறது. ஹியூமன் இன்சுலின் உணவுக்கு 30 நிமிடங்களுக்குமுன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் நவீன இன்சுலின்கள் உணவுக்கு சற்று முன்னர், உணவுடன் அல்லது உணவுக்குப்பின் உடனடியாக எடுத்துக் கொள்ளக்கூடிவையாக இருப்பதால், மிகவும் வசதியானவையாக உள்ளன.

ஆரம்பத்திலேயே இன்சுலின் எடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் அது வேலை செய்யாமல் போகக்கூடுமா?

உடலினுள் செலுத்தப்படும் இன்சுலின், உடலுக்குள் உருவாக்கப்படும் இன்சுலினைப் போன்றே ஆற்றல்மிக்கதாகும். எனவே பிற்காலத்தில் இன்சுலின் ஆற்றல் இழந்துவிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. உணவுமுறை பழக்கங்கள் மற்றும் உடலின் தேவைக்கேற்ப இன்சுலின் எடுத்துக் கொள்ளப்படும் அளவு மாறலாம் என்பது மட்டுமே மாறக்கூடிய ஒன்றாகும்.

தினசரி சிரஞ்சி மூலம் இன்சுலினை போட்டுக்கொள்வது பிரச்சனைகள் நிறைந்த மற்றும் வலி ஏற்படுத்தக்கூடிய நடைமுறையாக உள்ளதா?

இனிமேலும் இன்சுலினை ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நவீன தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் காரணமாக, இன்சுலினை செலுத்திக் கொள்வது இதுவரை இல்லாத அளவிற்கு சுலபமாகியுள்ளது. முன்கூட்டியே இன்சுலின் நரப்பப்பட்டு, ஒரு பேனா வடிவில் அது இப்போது கிடைக்கிறது.

மருந்திள் அளவை டயல் செய்து, பின்னர் அதனை உடலுக்குள் செலுத்திக் கொள்வது போன்ற ஒரு மிகச் சுலபமான 2 வழி செயல்பாடாக அது உள்ளது. பேனாவில் பொருத்தப்பட்டுள்ள மிக மெலிதான ஊசியானது வலியற்ற ஓர் அனுபவத்தை அளிக்கிறது. இப்பேனா, எங்கும் சுலபமாக எடுத்துக் செல்லக்கூடிய வசதி கொண்டதாகவும், ஒவ்வொரு முறை மருந்து செலுத்தப்பட்ட பின்பும் சுத்திகரிக்கப்பட வேண்டிய தேவை இல்லாத முறையிலும் இருப்பதால், நீங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்தற்கு செல்வதற்கான வசதியையும் அளிக்கிறது. உங்கள் சட்டைப்பையில் ஒரு பேனாவைக் கொண்டு செல்வதைப் போன்றே இதையும் எடுத்துச் செல்லலாம்.

எனவே இப்பேனா, சிரஞ்சு மற்றும் ஊசியினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குகின்ற அதே சமயத்தில், உங்களுக்கு இன்சுலின் சிகிச்சைக்கான எறக்குறைய ஒரு வலியற்ற விருப்பத்தேர்வையும் அளிக்கிறது.

குறிப்பு:

இந்த உள்ளடக்கம் விவரமளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. தயவுசெய்து இதனை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love