தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது திடீர் என தொண்டையில் ஏதோ ஏப்பம் போலவும் வாந்தி போலவும் வந்து பின் உள்ளுக்கு செல்லும் பொழுது ஏற்படக்கூடிய ஒரு விதமான எரிச்சல், தண்ணீர் குடித்துக் கொண்டேயிருந்தால் நன்றாக இருக்கிறது போன்ற ஓர் உணர்வே தமிழில் நெஞ்செரிச்சல் எனவும் ஆங்கிலத்தில் நிமீக்ஷீபீ – நிணீstக்ஷீஷீ மீsஷீஜீலீணீரீuறீ க்ஷீமீயீறீuஜ் பீவீsமீணீsமீ என அழைக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் ஏற்படுவது சகஜம். பலருக்கு இது மாதம் ஒரு முறை ஏற்படும். சிலருக்கு தினசரி இரவில் ஏற்படும் வேறு சிலருக்கு பகலில் ஏற்படும்.
காரணம்
வயிற்றில் அதிகமான அமிலமும் ஜீரண சுரப்புகளும் சுரந்து அது வயிற்றின் உள்ளே செல்லாமல் மேல் நோக்கி உணவுக்குழாயில் எதிர்த்து வருவதே இதற்கு காரணம். இது சில சமயம் தொண்டை அல்லது வாய் வரை கூட ஓர் புளிப்பான திரவம் போல எதிர்த்து வந்து எட்டிப்பார்த்து விட்டு பின் உள்ளே சென்று விடும். இதனால் நெஞ்செரிச்சல் எதுக்களிப்பு, இருமல் போன்றவை பல சமயமும் சில சமயம் வாந்தியும் கூட வரும்.
அதிக விசேஷமான உணவு, இறைச்சி, முட்டை, கோழி, மசாலா, காரம், எண்ணெய், புகை, மது, காபி, டீ, பாக்கு, புகையிலை, வெற்றிலை, அதிக எண்ணெய் உணவுகளை உட்கொண்ட பின் நெஞ்செரிச்சல் ஏற்படுவது இயல்பு. ஆனால் அதுவே சிலருக்கு தினசரி ஏற்பட்டு தொல்லையைத் தர ஆரம்பித்து விடும்.
நெஞ்செரிச்சலை போக்க சில வழிகள்
உணவை மெதுவாக மென்று உண்பது. உணவு சாப்பிட்டு 20 நிமிடம் கழித்து தூங்குவது. கொஞ்சம் கொஞ்சமாக உணவை உண்பது.
டீ, காபி, புகை, மது, பாக்கு போன்றவற்றை உபயோகிக்கும் முன்பு 1 – 2 கிளாஸ் நீர் அருந்தி விட்டு பின் உபயோகிப்பது.
இவற்றை கையாளுவதால் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாது ஆனால் தொல்லை தரும் நெஞ்செரிச்சல் பெருமளவு குறையும். முழுமையாகக் குறையவில்லையெனில் ‘லிக்கோரிஸ்’ எசன்ஸ் கேப்சூல் 1 – 2 காலை இரவு உணவிற்கு முன்பாக உட்கொண்டு பின் 10 நிமிடம் கழித்து உணவு உட்கொண்டால் நெஞ்செரிச்சல் முழுமையாக மறையும்.
தொடர்ந்து நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அதனை சீர்படுத்தாமல் விட்டுவிட்டால் நெஞ்செரிச்சல் அடுத்த கட்டத்திற்கு சென்று வயிற்றில் வலி, வாய்வுத் தொல்லை, வயிற்றில் எரிச்சல், மலம் கழிவதில் சிரமம், வயிறு உப்புசம், அதிக பசி, இரவில் தூக்கமின்மை, அல்சர், வயிற்றில் புண், உணவு உட்கொள்ளும் பொழுது வலி போன்ற பல சிக்கல்களை ஏற்ப ‘லிக்கோரிஸ்’ – என்பது அதிமதுரத்தைக் குறிக்கும். இதனை உணவிற்கு முன்பாக உட்கொண்டவுடன் அது வயிற்றின் உட்சுவரில் பரவி ஒரு விதமான பூஞ்சை ஏற்படுத்தும். அப்பூச்சு அதிக அமிலம் / ஜீரண சுரப்புகள் சுரப்பதைக் கட்டுப்படுத்துகிறது. அதிகமாக சுரக்கும் அச்சுரப்புகளை அது சீர்ப்படுத்தி அதனால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். வாய்வுத் தொல்லை, உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பல வயிற்று உபாதைகளுக்கும் இது ஒர் சிறந்த மருந்தாகும். லிவீஹீuஷீக்ஷீவீநீமீ எசன்ஸ் உலர்ந்த வடிவில் கேப்சூல்களாக கிடைக்கின்றது. இதனை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே பெறலாம். விலை 100 கேப்சூல் ரூ. 400 தேவைக்கு 50 ஆம் பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை உபயோகிக்கலாம்.