நமது உடல் பகுதியில் மேல் வயிற்றுப் பகுதியில் இடது புறம் கணையம் என்ற உறுப்பு அமைந்துள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் சுரப்பிக்கு இன்சுலின் என்று பெயர். சர்க்கரையை உடலில் செரிக்க இன்சுலின் உதவி செய்கிறது. இன்சுலின் குறைந்தால் என்னவாகும்? சர்க்கரை சீரணமாகாமலிருந்து விடும். இன்சுலின் கணையத்தில் சுரந்து நேரிடையாக இரத்தத்தில் கலந்து விடும். இரத்தத் சுழற்சியில் இருந்த படி சர்க்கரையை இது ஜீரணிக்கிறது. அப்படி கணையம் இன்சுலினை சுரந்து, இரத்தத்தில் சேர்க்காவிடில் சர்க்கரை ஜீரணமாகாமல் தங்கி விடுகிறது. அதனால், இதனை அப்புறபடுத்த வேண்டி, அதிகப்படியான சிறுநீர் கழிவதால் அதிக தாகம் ஏற்படுகிறது. எவ்வளவு சர்க்கரை சாப்பிடப்பட்டாலும் அதனை நீரிழிவு நோயாளி பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை என்பதால் அதிகப் பசியும் ஏற்படுகிறது. அதிகப்படி சர்க்கரை உடலில் இருப்பதால், தோலில் அரிப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக தோன்றும் விளைவுகள் என்ன?
உடல் பலகீனம், சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உடலுறவில் விருப்பம் குறைந்து விடும். உடலில் புண், காயம் ஏற்பட்டால் விரைவில் குணமாவது இல்லை. உடல் எடை குறையும். மயக்கம் ஏற்படும். நீரிழிவு நாட்பட்டு போகும் போது, இரத்தக் குழாய்கள் ( ஆரிட்டரிஸ்) தடிப்பு ஏற்படும். இரத்த அழுத்தம் கண் நோய்கள், சிறு நீரக நோய்களும் ஏற்படும்.