இதயத் தசைகள் தமது இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தைக் கரோனரி ஆர்ட்டரி எனப்படும் இதயத் தமனிகளின் மூலமே பெறுகின்றன. இந்தத் தமனிகள் உள்விட்டம் குறுகியும் அடைபட்டும் போகின்ற போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்தின் இயக்கம் நின்று போகும் நிலை ஏற்படுகிறது.
உங்கள் வீட்டில் தண்ணீர் வருகின்ற குழாய் அடைபட்டு விட்டால் நீர் வருவது நின்று போய் விடுகிறதல்லவா? அதே போன்றதுதான் இதுவும். அடைபட்டு விட்ட குழாயை அப்படியே விட்டு விட்டு புதிய இரத்தக் குழாய் ஒன்றை இதயத்தில் பொருத்திக் கிளைவழி மூலம் இரத்தம்
இதயத் தமனி அறுவைச் சிகிச்சைகள் எத்தனை சதவிகிதம் வெற்றியடைகின்றன?
பொதுப் படையாகச் சொன்னால் வேறு எந்தப் பெரிய அறுவை சிகிச்சையிலும் ஏற்படக்கூடிய அளவு இடர் கூறு – Risk தான் இதிலும் இருக்கிறது. நவீன அறுவை சிகிச்சைகளில் 0.5 சதவிகிதமே உயிரிழப்பு ஏற்படுகிறது. பல நேரங்களில் பிற உறுப்பு அறுவைச் சிகிச்சைகளில் இதைவிட அதிக அளவில் உயிரிழப்பு நேர்வதுண்டு.
சாதாரணமாக எத்தனை இதயத் தமனிகளைப் பைபாஸ் செய்யலாம்?
தொடக்க நிலைகளில் பல அடைபட்ட தமனிகளை பை பாஸ் செய்யலாம். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இடர் கூறும் அதிகரிக்கக் கூடும்.
இதய அறுவை சிகிச்சைக்கு ஆகின்ற செலவு மிக அதிகமாக உள்ளதே?
ஆம், உண்டைதான். இன்றைய அளவில் இதைத் தவிர்க்க முடியாது. அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்ற கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் ஆகியவற்றின் விலையும் சிகிச்சைக்குப் பின் தேவைப்படுகின்ற சேவை வசதிகளும் மிகுந்த செலவை உண்டாக்குகின்றன.
ஒரு முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் மறுபடியும் இதயத்தாக்கு வர வாய்ப்பிருக்கிறதா?
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு தமனியில் அடைபட்டுப் போன இரத்த ஓட்டத்தை வேறொரு கிளை வழியை (Bypass)ஏற்படுத்தி அதன் மூலம் நடைபெறச் செய்கிறோமே தவிர நோய்க்கான காரணத்தையோ அல்லது நோயின் போக்கையோ நாம் மாற்றுவதில்லை. எனவே இரண்டாவது தாக்கு நேர்வது என்பது பிற இதயத் தமனிகள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பதையே பொறுத்திருக்கிறது. பாதிப்பு கடுமையாக இருக்குமானால் மறுதாக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனினும் நல்ல முறையில் சர்ஜரி செய்யப்படுவதுடன் அஞ்ஜியோகிராபி மூலம் வேறு பெரிய அடைப்புகள் இல்லையென்று உறுதி செய்யப்பட்டால் துயரருக்கு உடனடியாக அபாயம் எதுவும் நேர வாய்ப்பில்லை.
மறுபடியும் இங்கு நான் கூற விரும்புவது அறுவை சிகிச்சை, நோயின் மூலகாரணத்தைக் குணப்படுத்துவதில்லை. எனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் நோய் கூறுகளை மேலும் தீவிரமடையச் செய்யக்கூடிய எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை எப்படி?
இந்த சிகிச்சை உங்களை முற்றிலும் புதிய மனிதராக்கிவிடும். அச்சம், பிரமையும் மறைந்து புது வாழ்வு பெற்ற உணர்வு தோன்றும். உங்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியும். அதே நேரத்தில் மது அருந்துதல், புகைப்பழக்கம் ஆகியவற்றை முற்றிலும் நிறுத்துவதுடன், உயர் இரத்த அழுத்தம், மிகு எடை போன்றவைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மேலும் கொழுப்புக் குறைவான உணவினை உண்பதுடன் தேவையான அளவு உடற்பயிற்சிகளும் செய்து வர வேண்டும்.
எந்த அளவு உடற்பயிற்சி செய்யலாம்? சைக்கிள் ஓட்டலாமா? டென்னிஸ் ஆடலாமா?
அறுவை சிகிச்சைக்கு முன் எவ்வகை உடற்பயிற்சிகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறீர்களோ அதைப் பொறுத்தும், வயதுக்கு ஏற்றவாறும் பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். 50 வயதிலும் 60 வயதிலும் கால் பந்தாட்டமும், ஹாக்கியும் விளையாட முடியாது. மிதமான எந்தப் பயிற்சியையும் செய்யலாம்.
அறுவை சிகிச்சை இன்றிச் சிறு பலூன் ஒன்றினை இதயத் தமனியுட் செலுத்தி அங்கு அதை உப்புமாறு செய்து தமனிகளை விரிவடையும் படி செய்யப்படுகின்ற பலூன்.
அஞ்ஜியோபிளாஸ்டி என்றால் என்ன?
செலவு அதிகமில்லாத, ஒரு சிறப்பான முறை இது. இதில் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும் அஞ்ஜியோபிளாஸ்டி மருத்துவ முறை இதய அறுவை சிகிச்சை முறைக்கு மாற்றாக முடியாது. ஒன்று அல்லது இரண்டு தமனிகள் மட்டுமே அடைபட்டிருக்கும் போதும், அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலையிலும் அஞ்ஜியோபிளாஸ்டி மிகுந்த பயனுள்ளதாக அமையக்கூடும். ஆனால் அதிலுள்ள ஒரு பெரிய பிரச்சனை மறு வரவு ஆகும். அஞ்ஜியோபிளாஸ்டி செய்து கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு 6 மாதத்திற்குள் தமனிக் குறுக்கமும் அடைப்பும் திரும்பவும் ஏற்பட்டு விடுகிறது.
அதில் இன்னுமொரு அபாயமும் இருக்கிறது. இதயத் தமனியுள்ள இடம் பார்த்துப் பலூனைச் செலுத்தி அதை உப்ப வைக்கின்ற போது அதுவே ஒரு இதயத் தாக்கினைத் தோற்றுவித்து விடக்கூடும். எனவே இதில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. மேலும் உயிரிழப்பு என்பது இரண்டு முறைகளிலும் ஒரே அளவில்தான் ஏற்படுகிறது. எனவே துயரர்களின் நிலைக்கேற்ப இவ்விரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.