எடை குறைய என்ன செய்யலாம்?

Spread the love

அனைவருக்குமே, எடை குறைய வேண்டும், அழகாகஇருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அதிலும்,குறிப்பாக இந்த ஆசை பெண்களுக்குகொஞ்சம் அதிகம் தான்.அவர்கள் எவ்வளவு தான் ஒல்லியாக இருந்தாலும இன்னும், இன்னும் என்று முயன்று கொண்டேயிருப்பார்கள், தானே?எடை குறைய எண்ண செய்யலாம்? என யோசப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள், முயன்று பாருங்கள்!

உடல் இளைக்க பட்டினியிருக்கக் கூடாது. உண்ணும் உணவின் அளவு குறையாமல், கலோரிகளை குறைக்க வேண்டும்! தீவிர உடற்பயிற்சிகள் தவிர, சிறிய அசைவுகள்,குனிந்து நிமிர்ந்து வேலைசெய்தல் போன்றவைகளும் உண்ட கலோரிகளை செலவழிக்க (எரிக்க) உதவும். உதாரணமாக 300 கலோரிகளை குறைத்து, இன்னொரு200 கலோரிகளை ‘எரித்தால்’ ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1/2 கிலோ எடை குறையும்.

நார் சத்துநிறைந்த உணவுகள் உண்ட நிறைவை குறைந்த கலோரிகள் தரும்.

ஒரு சாதாரண மனிதனுக்கு, தினம் அவருடைய ஒரு கிலோ உடல் எடைக்கு33 கலோரிகள் தேவை. இந்த கணக்கில் நீங்கள் சாப்பிட வேண்டியகலோரிகளை தெரிந்து கொள்ளலாம்.

காலை உணவு அவசியம்.

ஒரே தடவை அதிக உணவை உண்பதை விட,சிறு உணவாக (2 மணி நேரத்திற்கு ஒரு முறை) உண்ணவும்.

எடை இழப்பு நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் 1/2 (அ)3/4 கிலோ இளைத்தால் போதுமானது.

முழுதானியங்கள் நிறைந்த உணவு நல்லது. காலை உணவில் தானியங்களுடன், புரதம் நிறைந்த முட்டை அல்லது ஆடையில்லாத பாலில் செய்த ‘சீஸை’ சேர்த்துக் கொள்ளலாம்.

பாலை உபயோகிக்கையில் ஆடை அகற்றிய கொழுப்பு குறைப்பான பாலையே பயன்படுத்தவும்.

இனிப்புகள், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டுவது அவசியம்.

வீட்டில், அலுவலகத்தில் சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். சுறுசுறுப்பாக நடக்கவும். லிப்டை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறி இறங்கவும். உட்கார்நத நிலையில், நிற்கும் நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

மென் பானங்களை (Soft drinks) குடிக்க வேண்டாம். அதற்கு பதில் வெறும் தண்ணீர் குடிப்பது நல்லது.

பசித்தால் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. எடை குறைய உதவும். ‘சூப்’ சாப்பிடுவதும் நல்லது. காய்கறி ஜுஸ், பழங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். பச்சைகாய்கறிகள், பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.

அடிக்கடி உடலுறவு கொள்ளுதலும் உடற்பயிற்சி தான். ஸ்ட்ரெஸை (Stress) தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.யோகா, தியானம் தவிர சில உணவுகள் மனச்சோர்வைகுறைக்க உதவும். ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைத்து மூளையை ஊக்குவிக்கும். மீன்,பாதாம், வாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளில் ஒமேகா – 3 அதிகம் உள்ளது.

க்ரீன் – டீ தினம் 3 வேளை குடித்தால் 3 மாதங்களில் 5% எடை குறையும். உணவு வேட்கை ஏற்படும் காரணம் மூளை தான்! வயிறோ, ருசி அறியும் நாக்கோ அல்ல! எனவே மன அழுத்தத்தை குறைத்து மூளை அமைதியானால் உணவு ஆசையை கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் சரியாக தூங்குவது அவசியம். 7 லிருந்து 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்காவிட்டால் நல்லுணர்வைதரும் செரோடோனின், டோபாமைன் இவை சுரக்காது. பின் மூளைஎன்ன செய்யும்? இவற்றுக்கு பதில் இனிப்பு உணவுகளைநாடும். இந்த பிரச்சினை வயதாக வயதாக அதிகரிக்கும். முதியோர்களின் பீனியல் சுரப்பி (Pineal gland), தூக்கஹார்மோன் மெலாடோனினை குறைவாக சுரக்கும். இதனால் அதிக கார்போ-ஹைடிரேட் உண்ணும் ‘வெறி’  ஏற்படும்.தூக்கமில்லாதவர்கள் இரவில் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று அலைவதற்கு இது தான் காரணம்.எனவே தூக்கமின்மையை குணப்படுத்திக் கொள்ளுங்கள். இரவுத் தூக்கம் உடல் எடையை சரிவர வைக்கும்.

வீட்டு வைத்திய முறைகள்

சிறிது கருமிளகுப்பொடி கலந்த மோர் குடித்தால் ஜீரணசக்தி சீராகும், எடை குறையும்.

குடூச்சி சத்வா (சீந்தில் கொடி – Tinospora Cordifolia) 1/4 தேக்கரண்டி எடுத்து சில துளி தேனுடன் கலந்து, காலை,மதியம் இரு வேளை எடுத்துக்கொள்ளவும்.

உணவு உண்டபின் உலர்ந்த நெல்லிக்காயை இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிடுவது மிகவும்நல்லது.


Spread the love