உடல் எடை குறைக்க வழிகள்

Spread the love

உடல் எடை அதிகமானவர்கள், அதை குறைக்கும் வழிமுறைகளை கடைப்பிடிக்கும் போது, பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில

தினசரி ஒருவருக்கு தேவையான உணவு கலோரிகள் எவ்வளவு?

ஒருவரின் கலோரி தேவைகள் அவரது வயது, செய்யும் பணி, உடல் எடை மற்றும் அவர் ஆணா, பெண்ணா என்பதை பொருத்திருக்கும் கலோரி தேவைகளை கண்டறிய, கீழ்க்கண்ட பட்டியலை பயன்படுத்தலாம்.

அதிக நடமாட்டமின்றி, இலகுவான வேலை செய்பவர்கள்- ஆண் – 2200 கலோரிகள் பெண் – 1900 கலோரிகள்

நடுத்தரமாக வேலை செய்பவர்கள் – ஆண் 2800, பெண் – 2200 கலோரிகள்

கடின வேலை செய்பவர்கள் – ஆண் – 3400, பெண் – 2800 கலோரிகள்

எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?

வறுத்த, பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை, அரிசி, உருளைக்கிழங்கு இவற்றை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். மாற்று உணவுகளைப்பற்றி டயடீசியன் / டாக்டரிடம் தெரிந்து கொண்டு கட்டுப்பாட்டுடன் உணவு உட்கொண்டால் எடை குறையும்.

உடலின் சில குறிப்பிட்ட பாகங்களில் மாத்திரம் எடையை குறைப்பது சாத்தியமா?

குறிப்பிட்ட பாகங்களில் மாத்திரம் சதையை குறைப்பது கடினம். உடற்பயிற்சியால் உடலின் எல்லா பாகங்களும் ஒரே அளவில் இருக்கும்படி செய்யலாம்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?

காலை உடற்பயிற்சிக்கு 1/2 மணி முன்பு ஒரு கப் டீ (அ) காப்பி, இரு பிஸ்கட்டுகள் எடுத்துக் கொள்ளலாம். பழங்களை 30 (அ) 45 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிக்கு பிறகு முதல் 15 நிமிடங்களுக்குள் ஒரு கப் பால் (அ) பழம் சாப்பிடலாம்.

எடை குறைப்பு மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படுமா?

ஆம், எடைகுறைப்பு, அவரவர் உண்ணும் உணவு, செய்யும் உடற்பயிற்சி முதலியவற்றை பொருத்தது.


Spread the love