உடல் எடையை குறைக்க பலவித உடற்பயிற்சிகள் மற்றும் பத்தியம் இருந்து வந்தாலும்,மிகவும் விரைவில் பலனை அடைய முடியாது. ஏனென்றால்? என்னதான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும், கலோரிகளை வாரி வழங்குகிற உணவுகளை சாப்பிட்டு தான் வருகிறோம். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு உங்கள் அன்றாட உணவுகளில் இந்த சூப் நல்ல பலனைதரும்.பூண்டு காய்கறி சூப்-ல் கலோரிகள் கிடையாது. இதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: ப்ரோக்கோலி, கேரட், பச்சை பட்டாணி, சிகப்பு மிளகாய்,இவையனைத்தையும் அரைத்து ஒரு கப்பில் வைத்து கொள்ளவும். இந்த கலவையில் சேர்ப்பதற்கு 6 பூண்டு பற்கள், ஒரு வெங்காயம், ஓட்ஸ் இரண்டு டீஸ்பூன், உப்பு, மிளகு தேவையான அளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை லேசான சூட்டில் கொதிக்க விடவும். அதில் பூண்டு வெங்காயம் இவற்றை அரைத்து சேர்க்கவும். பூண்டு பழுப்பு நிறமாக மாறியதும் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் காய்கறிகளை சேர்க்கவும். ஒரு 4 நிமிடம் கழித்து, 2 ½ கப் தண்ணீரை ஊற்றி நன்கு கிளரவும். சிறிது நேரத்திற்கு கொதிக்க வைத்து, மிளகாய், உப்பு இவற்றை சேர்க்கவும். ஒரு மூன்று நிமிடம் கழித்து ஓட்ஸ் சேர்க்கவும். சிறிது நேரத்திலேயே கொத்தமல்லியை தூவி இறக்கவும். Garlic Veg சூப் தயார். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலிற்கு மிகவும் நல்லது. அதோடு உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சுவையான உணவாக பயனளிக்கும்.