உடல் எடை குறைக்கும் சூப்பர் உணவுகள்

Spread the love


உண்பது உழைப்பிற்கு உதவும் சக்தியைப் பெறுவதற்கு வாழ்க்கையில் பிழைப்பதற்கு! உடல் சக்தி தேவைக்கு மீறி உண்டால் நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் மலமாய் எல்லாம் கழியாது. கொழுப்புப் பொருளாக குவியும். எல்லாம் எரிவதில்லை.

மிகுதியானது உடலில் தொந்தி, தொடைகள், மார்பு, மோவாய்க் கட்டை என்று பல பகுதிகளில் சதையாக சேர்ந்து விடும். உடல் கனம் அளவிற்கு மீறி அதிகரிக்க சோம்பல் உண்டாகும். நாம் பணிபுரியும் இடங்களில் வேலையில் உற்சாகம் இராது.


உடல் பருமன் தரும் உணவு பல வகைகளாகும்
பசி ஆற்றலுக்கு மீறிய அதி உணவு
பசிக்கு உசிதமில்லாத உணவு
ஆரோக்கிய உணவு
என்னென்ன தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் சாப்பிடலாம் என்று 26 வகையான உணவுப் பொருட்களை பட்டியலிட்டுக் கூறியுள்ளோம். உணவுகளை உட்கொள்ளுவதுடன் உடற்பயிற்சிகளை மற்றும் நடைப்பயிற்சி, யோகசனங்கள் மேலும் உடல்பருமனைக் குறைக்க உதவும்.


கைக்குத்தல் அரிசி &பிரவுன் ரைஸ் என்று கூறப்படும் கைக்குத்தல் அரிசியானது. மிஷினில் உமிநீக்கி ஒரிருமுறை தீட்டப்பட்ட வெள்ளை நிறமாக்கப்பட்ட அரிசியினை விட மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது. உடல் எடையைக் குறைக்கும் கைக்குத்தல் அரிசி குறைந்த ஆற்றல் அடர்த்தியான உணவு ஆகும். அதாவது குறைந்த கலோரி அளவு கொண்டதுடன், நீண்டநேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வதைத் தரக்கூடியது. அதிக ஆற்றல் அடர்த்தி உணவு உண்பவர்கள் குறைந்த ஆற்றல் அடர்த்தி உணவு உண்பவர்களை விட உடல் எடை கூடுதலாக காணப்படுகின்றனர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. புளுபெர்ரீஸ் (blueberrier) புளுபெர்ரீஸ பழமானது மிகவும் சிறியதாக இருப்பினும் உடல் எடையைக்குறைப்பதில் சக்தியுள்ள உணவாகவும் இளவயது முதுமைத் தோற்றம் இடைவதையும் தடுக்கிறது. ஒரு கோப்பை அளவு உள்ள புளுபெர்ரிஸில் புதிராக நார்ச்சத்தும், குறைவான அளவு 80 கலோரிகள் உள்ளன.

ஓட்ஸ்& ஆரோகியம் தரும் நார்ச்சத்து மிக அதிக அளவில் உள்ளன. ஒரு வேளை சாப்பிடும் ஓட்ஸ் உணவு நேரம் வயிறு நிரம்பிக் காணப்படும் உணர்வினை அளிக்கிறது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள காரணத்தினால் கொழுப்பை எரிப்பதில் அதகம் ஊக்குவிக்கிறது.
கொயினா& கொயினா ஒரு முழு தானிய உணவு என்பதுடன் அதிக அளவு புரதம் உள்ளது. இதன் காரணமாக விரைவில் பசி ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. இதனால் வயிறு முழுவதும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வைத் தருவதுடன் நினைத்த நேரம் சாப்பிடுவதும் அளவுக்கு மீறி சாப்பிடுவதையும் நிறுத்துகிறது.
கருப்பு மொச்சை & இதில் தாவர வகை புரதம் அதிகம் உள்ள பயறு வகையாகும். ஒரு கோப்பை அளவுள்ள கருப்பு மொச்சையில் 15கி புரதம் உள்ளது என்பதுடன் சிகப்பு மாமிசத்தில் காணப்படும் சாட்டுரேட்டம் கொழுப்பு இன்றிமேற்கூறிய கருப்பு மொச்சையில் உள்ளது.
சால்மோன் மீன்&கொழுப்புச்சத்து இல்லாத குறைந்த அளவு புரதம் உள்ள சால்மோன் மீன் உங்கள் உடல் பருமனைக் குறைக்கும். இருப்பினும் இவ்வகை மீனில் இருந்து தேவைப்படும் சத்துக்களைப்பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. உடலுக்கு நன்மை தரும் மோனோ சாட்டுரேட்டம் கொழுப்பு அதிகம் உள்ள சால்மோன் மீன் சிகப்பு மாமிசம் உண்பதைவிட ஆரோக்கியம் தரும் சிறப்பான உணவுகளில் ஒன்றாகும்.

பிராகோலி& புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவக் குணங்கள் கொண்ட பிராகோலி சிறந்த உணவாகும். பிராகோலியை சமைத்தோ, பச்சையாகவோ சாப்பிடலாம் 30 கலோரிச் சக்தியும் ஓரளவுக்கு திருப்தி தரும் அளவு புரதமும் உள்ளது. உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

பேரிக்காய்


ஒரு நாளுக்குரிய நார்ச்சத்து தேவையில் 15% வரை பேரிக்காயில் புரதம் காணப்படுகிறது. தினசரி3 பேரிக்காய்கள் நீங்கள் சாப்பிட்டு வந்தீர்கள் எனில் சிறிதளவு கலோரிகளை நீங்கள் நுகர்வதால் உறுதியாக உங்கள் உடல் ஸ்லிம்மாக மாறிவிடும். பேரிக்காய் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்காத ஆனால் தேவைப்படும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

திராட்சைப்பழம்& நீங்கள் உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் ஒன்றினைக்கூட மாற்ற வில்லை எனினும் சாப்பாட்டிற்கு முன்பு சிறிதளவு திராட்சைப்பழம் உண்டு வந்தால் கூட போதும். உங்கள் உடல் பருமனில் உறுதியாக குறைந்து காணப்படுவீர்கள் என்று ஆராய்ச்சி அறிக்கை ஒன்று கூறுகிறது. திராட்சைப்பழத்தில் உள்ள ஒரு கலவைப் பொருளானது இன்சுலின் உற்பத்தியை குறைக்க இயலுகின்றபடியால் உடல்பருமன் குறைகின்றது. மேலும் திராட்சைப்பழத்தில் 90% நீரும், புரதச்சத்தும் தேவையான அளவு காணப்படுகிறது.

கருப்பு சாக்லேட்& இதயம் சார்ந்த சிக்கல்கலை தீர்ப்பதில் கருப்பு சாக்லேட்டின் பங்கு அதிகம் என்பது தெரிந்திருக்கலாம். தெரியாத ஒன்று என்ன தெரியுமா-? கருப்பு சாக்லேட் சிறுதுண்டு சாப்பிட்டாலே போதும். நீங்கள் அடிக்கடி (அ) அதிகமாக உணவு உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்யும் இதில் நன்மை தரும் மோனோ சாட்டுரேட்டட் கொழுப்பு உள்ளது வளர்ச்சிதை மாற்றத்தினை ஒழுங்குபடுத்துவதுடன் விரைவுபடுத்துகிறது.
அவகேடா& உடலுக்குத் தேவையான நன்மைதரும் கொழுப்புகளை அதிகம் உள்ளடக்கியுள்ளது. அவகேடா பழத்தில் காணப்படும். ஒலிக் அமிலம் ஒரு நன்மை தரும். மோனோ சாட்டுரேட்டட் கொழுப்பு ஆகும். விரைவாக பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. பழத்தில் பாதி அளவு சாப்பிட்டால் கூட போதும் உணர்வை வயிறு முழுவதும் நிரம்பிய உணர்வு காணப்படும். அவகேடாவில் நார்ச்சத்தும் புரதசச்சத்தும் உள்ளன.
ஒயின்& திராட்சை ஒயினில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி தரும் ஆன்டிஆக்சிடன்ட் ரெஸ்வெரட்லால் இருப்பதனால் உடலில் கொழுப்பு தங்கி விடுவதை தடை செய்கிறது. மற்ற மது வகைகள் அருந்துபவர்களைவிட திராட்சை ஒயின் மிதமாக அருந்ழபவர்களின் இடுப்புச்சதை குறைந்து ஸ்லிம்மாக உள்ளனர் என்று மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளிப்படுத்துகிறது. ஒரு கோப்பை திராச்சை ஒயின் அருந்துவதால் உங்கள் உடலானது90 நிமிடங்களில் கலோரிகளை எரித்துவிட இயலும் ஆற்றலை கொண்டதாகும்.
வாழைப்பழம்& நடுத்தரமான அளவுள்ள ஓரளவுக்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைப்பழத்தில் மாவுச் சத்துக்கு எதிரான ஒன்று என்பதுடன் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

கிட்னி பின்ஸ்

சிவப்பு நிறமான இந்த பருப்பில் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கு எதிரான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேற்கூறிய சத்துக்கள் அதிகம் அமைந்திருப்பதன் காரணமாக நீண்ட நேரம் உங்கள் வயிறு முழுவதும் நிரம்பிய உணர்வு காணப்படும் என்பதுடன் மெலிதான இடுப்பை பெறவும் இயலுகிறது.

பாதாம்பருப்பு& பெரும்பாலான பருப்பு வகைககள் மிகச்சிறந்த உணவு

வகைப்பிரிவுகளில் தான் சேர்க்கப்பட்டுள்ளது. அதிக அளவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மை தரும் கொழுப்புகள் அதிகம் காணப்படுவது தான் இதற்கு காரணம். உடல் எடையைக் குறைக்க உதவும் பாதாம் பருப்பானது அதிக கொழுப்பு அடங்கியுள்ள உணவுகளுக்குப் பதிலாக ஆரோக்கியம் தரும் நொறுக்குத்தீனி உணவுகளாக உட்கொள்ளலாம்.

லென்டில்ஸ்&மிக அதிக அளவு நார்ச்சத்தும் திகட்டும் அளவு புரதமும் உள்ள லென்டில்ஸ், மாவுச்சத்துக்கு எதிரான ஒன்று. இதன்மூலம் அதிக அளவு கலோரிகளை எரிக்க இயலுகின்றது.

முட்டை& புரதமும், நன்மை தரும் கொழுப்பு அடங்கியுள்ள முட்டையை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் நினைத்த நேரமெல்லாம் எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பதை தவிர்த்து விட உதவுகிறது. வயிறு நிரம்பி உணர்வையும், வேறு ஊதாவது சாப்பிடலாமா? என்ற எண்ணத்தை வரவிடாமல் புரதம் உதவுகிறது.

வாழை& அரை கோப்பை அளவு சமைத்த வாழைக்காயை சாப்பிட்டால் கூட போதும், உங்கள் உடலில், மாவுப் பொருளுக்கு எதிராக அமைவதுடன் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். அதிக கலோரிகளை எரித்துத் தள்ளும்.

ஆரஞ்சு & சிட்ரிக் அமிலம் உள்ள ஆரஞ்சுப்பழத்தில் 59 கலோரிகள் உள்ளன. என்பதுடன் அதிக அளவு நீரும் புரதமும் சிறந்த தேர்வாக பரிந்துரைக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு& உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. எனினும் வெண்மை நிற பிரட்டில் (ரொட்டி) இருப்பதை விட மூன்றுமடங்கு உள்ளது. அதிக அளவு கலோரிகளை உருளை கிழங்கு எரிக்கும் அளவுக்கு மாவுச்சத்து எதிர்ப்புப் பொருட்கள் உள்ளன.

(pine nuts)பருப்பு வகைகளை நீங்கள் விரும்பிச் சாப்பிடுபவர் எனில் பாதாம் பருப்பில் மட்டும் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பைன் பருப்பில் அதிக அளவு நன்மைதரும் கொழுப்புச்சத்து காணப்படுவதால் கொழுப்பு எரிக்கப்படுவதுடன் பசி உணர்வையும் குறைக்கிறது. 80 பருப்புகளில் 95 கலோரிகள் தான் உள்ளன என்பதால் நீங்கள் கவலைப்படாமல், பயப்படாமல் ஒரு வெட்டு வெட்டலாம்.

வெள்ளை மொச்சை (white beans) கொழுப்பினை எரித்து விட உதவி வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பசி உணர்வைக் கட்டுப்படுத்தும்.
குறைந்த அளவு கொழுப்புள்ள பால்& இதில் உள்ள கொழுப்பு அமிலமானது பொதுவாக பாலில் காணப்படும் புரதத்தல் உங்கள் வயிறு முழுவதும் நிரம்பிய உணர்வைத்தரும். பாலில் அதிகபட்ச அளவு கால்சியம் சத்து உள்ளதால் தினசரி கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பொருள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிள்றனர்.
Garbanzo beans- என்றும் அழைக்கிறார்கள் இதில் நார்ச்சத்து, புரதம், நலம் தரும் கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

Pearl darley- குறைந்த அளவு கலோரி உள்ள மதிய உணவாக உள்ள இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளன. தவையில்லாத அதிக கலோரிகளை எரித்து பசி உணர்வை நீண்ட நேரம் கட்டுப்படுத்துகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love