உடல் பருமன் குறைக்கும் நார்ச்சத்து!

Spread the love

மனிதனின் உடலில் பல விதமான சத்துக்கள் சரிசம விகிதத்தில் இருப்பது அவசியம். உடல் வளர்ச்சியும் ஆரோக்கியமாக அமைய மாவுச் சத்து, நார்ச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை உதவுகின்றன.

இங்கு நார்ச்சத்துக் குறைவு அல்லது நார்ச் சத்து அறவே இல்லாத உணவுகளைப் பட்டியல் இடுவதற்கு முன்பு, நார்ச் சத்துக்கள் என்றால் என்ன? அவை மனிதனின் உடலுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை நாம் தெரிந்த் கொள்வோம்.

நார்ச் சத்து தாவர உணவுகளின் ஒரு பகுதியாகும். காய் மற்றும் பழங்களின் தோல் பகுதி நார் போன்ற பகுதியாகும். உணவுகளில் காணப்படும் மற்ற பெரும்பாலான ஊட்டச்சத்துக்களைப் போல் அல்லாமல், நார்ச் சத்து உடலால் ஜீரணித்துக் கொள்வதில்லை.

இருவகையான நார்ச் சத்துக்கள்

நார்ச் சத்துக்கள் கரையக் கூடிய நார்ச் சத்துக்கள் என்றும், கரைய முடியாத நார்ச் சத்துக்கள் என்றும் இருவகையாக உள்ளன.

கரையக் கூடிய நார்ச் சத்துக்கள்

இவை தண்ணீரில் கரையக் கூடிய ஒன்று. இவை ஆப்பிள், வாழைப்பழம், கேரட், உருளைக்கிழங்கு, ஓட்ஸ் பிரான், பார்லி, இஜப்கோல், பாசி வகை உணவுகளான ஸ்பைருலினா, கடல் உணவுகள், பீன்ஸ் போன்றவற்றில் அதிகம் உள்ளன.

கரைய முடியாத நார்ச்சத்துக்கள்

இவை செரிமான உறுப்புகளின் வழியாக எவ்வித மாற்றமும் நேராமல் (கரையாமல்) சென்று விடும். மெல்லுவதால் சிறு சிறு துண்டுகளாக்கப்படுவது போல செயல்கள் தவிர. நீங்கள் இரத்த சோகை காரணமாக அடிக்கடி நோயினால் பாதிப்பு அடைய நேரிடும். இதற்குரிய ஒரே பரிகாரம் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் பழங்கள், காய்கறிகள் பச்சையாக மட்டுமே சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால் வழக்கமாக சாப்பிடும் உணவுகளுடன் சாலட், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்தின் பயன்கள்

1. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறது.

2. நார்ச்சத்து காரணமாக குடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

3. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதால் இரத்த அழுத்தத்தின் அளவை மறைமுகமாக குறைக்க உதவுகிறது.

4. இரத்த சர்க்கரை அளவை நார்ச்சத்து குறைக்கிறது.

5. கட்-ல் இருந்து குளுக்கோஸ் ஏற்றுக் கொள்ளும் அளவை நார்ச்சத்து குறைப்பதால், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைகிறது.

6. குறைந்த இரத்த குளூக்கோஸின் காரணமாக நீரிழிவுச் சிகிச்சையில் உதவுகிறது.

7. நீரிழிவு நோயாளிகள் அனுமதிக்கும் இன்சுலின் அளவை குறைத்துக் கொள்ளவும் நார்ச்சத்து உதவுகிறது.

8. ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவையாகும்.

9. காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் நார்ச்சத்தைப் பெற்று விடலாம்.

உடல் பருமனைக் குறைக்க

உதவும் நார்ச்சத்து

நார்ச் சத்தில் அதிக கலோரிகள் காணப்படுவதில்லை எனினும் வயிறு நிரம்பிய உணவை மனிதனுக்கு ஏற்படுத்தி விடும். அதிக அளவு மென்று, மெதுவாக சாப்பிடுவதால் அதிக அளவு உமிழ்நீர் சுரக்கப்பட்டு உணவுடன் செல்வதாலும், காரபோஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை ஏற்றுக் கொள்வதை நார்ச் சத்துக்கள் காலதாமதப்படுத்துவதாலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் நார்ச்சத்து உணவுகள் குறைந்த அளவு சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க மறைமுகமாக உதவுகிறது. அதிக அளவு நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதென்பது குறைந்த அளவு கொழுப்புச் சத்தை தான் உடல் பெறுகிறது என்று பொருள்.

அதிக அளவு நார்ச் சத்து உடனடியாக எடுத்துக் கொள்வது உடலுக்குக் கேடு விளைவிப்பதாகும். எனவே, நார்ச் சத்தில் அதிக அளவு நன்மைகள இருக்கின்றது என்பதற்காக அதை உடனடியாக அதிகமாக எடுத்து கொள்ளக் கூடாது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love