உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ச்ச….,எவ்வளவுதான் சாப்பிட்டாலும் இந்த உடலின் எடை அதிகரிக்கவே இல்லை என்று கவலை கொள்பவர்கள் நாட்டில் அதிகமாக உள்ளனர். அதிலும் சில நபரின் உடல் வளர்ச்சி அவரவர் வம்சாவழி, பெற்றோர்களின் உடலமைப்பு இதை சார்ந்து இருப்பதினால் இயற்கையாகவே உடல் ஒல்லியாக இருக்க வாய்ப்புகள் இருக்கும். அப்படி ஒல்லியாக இருப்பவர்கள் கவலைபடவே வேண்டாம்.
அவர்களின் ஆரோக்கியத்தில் எந்த குறைவும் இருக்காது. ஆனால் பிரச்சனையே சரியான ஊட்டச்சத்து இல்லாமல் உடல் ஒல்லியாகவும், இளைத்துக்கொண்டே போவதுதான். இதற்கு முக்கிய காரணம் சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்க்காததும், சரியான நேரத்தில் உணவை சாப்பிடாததும் தான்.
சாப்பிடும் நேரத்தில் சில பேர் சாக்லெட், ஜீஸ், டீ, காபி என நொறுக்கு தீனியை சாப்பிடுவதனால் பசி அடங்கி சாப்பாடு சாப்பிடுவதையே விட்டுவிடுவோம். சிறிது நேரம் கழித்து பசி எடுத்தாலும் அந்த உணவில் காய்கறி கீரை பழம் இவையெல்லாம் அதிகமாக சாப்பிட முடியாமல் விட்டுவிடுவார்கள்.இந்த மாதிரி தவறான உணவு பழக்கத்தாலும் உடல் ஒல்லியாகலாம்.
நல்ல உடல் கட்டோடு இருக்கும் ஒருவருக்கு திடீர் என எடை குறைந்துவிட்டால் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
முக்கியமாக அதற்கு சில நோய்களும் காரணமாக இருக்கலாம். குறிப்பாக காசநோய், நீரழிவு நோய்,கல்லீரல் நோய், சவாலை நோய், சிறுநீரக நோய் , மன நோய், குடல் புழுக்கள் மற்றும் அஜீரண கோளாறு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த மாதிரியான திடீர் உடல் மாற்றம் ஏற்பட்டால்? மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.
அடுத்ததாக உடல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காக இருக்கும் புரத சத்து உள்ள உணவு வகையை சாப்பிடாமல் இருப்பதால் உடல் எடை கூடாமல் இருக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவரின் உடலில் 50 ல் இருந்து 75 கிராம் வரை புரதம் தேவைப்படுகின்றது. இது நம்முடைய வயது ,உடற்பயிற்சி, வேலையின் தன்மைக்கேற்ப மாறும்.
நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு வகையான பால் தயிர் பாலாடைக்கட்டி வெண்ணெய் நெய் இவையெல்லாம் அதிகபட்சமான புரதசத்து அடங்கியிருப்பதனால் அதிகமாகவே சாப்பிட்டு வரலாம்.
அதை தொடர்ந்து நிலக்கடலை, சோயா, முந்திரி, பச்சைபட்டாணி, பீன்ஸ் அவரை துவரை உளுந்து மொச்சை, சுண்டல், முளை கட்டிய பயிறு, முட்டை, மீன், இறைச்சி இவையெல்லாமே புரத சத்துள்ள உணவுவகைகள் தான்….. சுண்டல், முளை கட்டிய பயிறு, முட்டை, மீன், இறைச்சி இவையெல்லாமே புரத சத்துள்ள உணவுவகைகள் தான்…..சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.