பராமரித்து வரும் பழக்கத்தை, குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களான பின்னர், குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டீர்களோ அத்தனையையும், கூறி விடுங்கள். உடல் பெருத்தாலும் பிரச்னை. அதேபோல, உடல் மெலிந்தாலும் பிரச்னை. குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பார்க்கின்ற நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவரும் முதலில் விசாரிப்பது உடல்நலத்தை தான். அதிலும், நீங்கள் உடல் மெலிந்திருந்தால் போதும். ‘என்னங்க… இப்படி இளைச்சுட்டீங்க’னு அனைவரும் பரிதாபமாக விசாரிப்பார்கள்.உடல் மெலிந்திருப்பது ஏதோ ஒரு குற்றம் போலவே உங்களுக்கு தோன்றுமளவுக்கு விசாரிப்பு இருக்கும். இது ஒரு புறமென்றால், மற்றொரு புறம், ஒல்லியாக இருக்கும் தேகத்தை கொண்டவர்கள் தண்ணீர் துாக்கி சென்றாலும் சரி, வேலைக்கு விண்ணப்பித்திருந்தாலும் சரி, நோஞ்சானாக இருக்கிறானே இவன் எப்படி சரிப்பட்டு வருவான் என்கிற அவமானங்களும் நீங்கள் உடல் மெலிந்து காணப்படுவதால் ஏற்படக்கூடும்.சிலருக்கு தேகம் மெலிந்திருப்பதால், சரியாக வரன் அமையாமல் திருமணம் கூட தள்ளிப்போகலாம். இத்தகைய பல காரணங்களாலேயே,உடல் மெலிந்திருப்போர் தங்கள் உடல் எடையை கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும் என்று, ஆர்வத்துடன் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என்னென்ன சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும் என்பதை இனி காண்போம்…
உடல் எடையை கூட்ட…
உடல் எடை விஷயத்தில் மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது ‘ஒவ்வொருவருடைய உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை கண்டிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு பார்த்துக் கொண்டால், ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியும். உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இல்லாமல் இருந்தால், அவர்களின் உடலில் ஏதோ ஒருவிதமான சத்து பற்றாக்குறையாக இருக்கலாம்.’என்பதை தான்.
வயதுக்கேற்ற வகையில் உடல் எடையை அதிகரிப்பதில் மிகுந்த கவனமும் அக்கறையும் வேண்டும். அவ்வாறில்லாமல், ஏனோ தானோவென்று செயல்பட்டால், உடல் நலனை இழப்பதுடன், சில நேரங்களில் அதுவே உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடலாம்.இப்போது எதை சொல்கிறேன் என்பது புரியவில்லையா. பேஷனுக்காக ஜீரோ சைஸ் என்று உடலை வருத்திக் கொண்டிருப்பவர்களையும், சிக்ஸ் பேக்குக்காக கடுமையாக உழைக்கிறவர்களையும் தான்.
ஒரு குழந்தை பிறக்கின்ற போது, மூன்று கிலோ இருக்க வேண்டும். உடல் எடை குறைவாக இருந்தாலும் பிரச்னை. அதிகமாக இருந்தாலும் பிரச்னை. இவ்வாறு, பிறக்கின்ற பெரும்பாலான குழந்தைகள் சரியான உடல் எடை இல்லாமலேயே பிறக்கின்றன. உடல் எடை குறைவாக பிறக்கின்ற குழந்தைகளை தேற்றுவதுதான் பெற்றோர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், உடல் எடையை தேற்றி, சரியான உடல் எடையை
அவ்வாறு நீங்கள் குழந்தைகளிடம் சொல்லும் போது, உடல் எடையை பராமரிப்பது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்வார்கள்.
குழந்தைகளின் உடல் எடையை பராமரிப்பதில், அக்கறை காட்டாத பெற்றோர்களால், பெரும்பாலான குழந்தைகள் போஷாக்கு அற்றவர்களாகவும், நோஞ்சான்களாகவும் மாறும் அபாயமிருக்கின்றது. இதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிராமப்புற உணவுகளில் அனைவராலும், விருப்பமான உணவாக கூறப்படுவது கஞ்சி. இந்த கஞ்சி என்றால் என்ன விளக்கம் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேறொன்றுமில்லை, கஞ்சி என்றால், காய்ச்சி அருந்துவது. உடல்மெலிந்திருப்பது சிறு குழந்தைகளாக இருப்பின், சத்துமாவுக் கஞ்சி கொடுத்து வரலாம். இளைஞர்களாக இருப்பின் அவர்களுக்கு அரிசியுடன் சேர்த்த தேங்காய்ப்பாலை சாப்பிடுமாறு அறிவுறுத்துங்கள்,அவ்வாறு உட்கொண்டு வந்தால், மெலிந்த தேகம், உடல் எடையை பெற்று காணப்படும்.
நம்மூரில் பலராலும் சொல்லப்பட்ட வரும் பழமொழி தான் ‘இளைத்தவனுக்கு எள்ளு’. என்கிற பழமொழி. இதை வெறும் பழமொழியாக எடுத்துக் கொள்ளாமல், மருத்துவ அறிவுரையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைந்து, ஒல்லியாக இருப்பவர்கள்,சாப்பிடும் அன்றான உணவுகளாக இட்லி, மற்றும் தோசை இருக்கின்றது. இட்லி, தோசை சாப்பிடும் போது, எள்ளுச்சட்னி, எள்ளு துவையல் என, எள்ளால் செய்யப்பட்ட சட்னி வகைகளை பயன்படுத்தி வரலாம். முறுக்கு, இனிப்பு பொருட்கள் உண்பதற்கு பதிலாக, எள்ளுருண்டை செய்து, அதையே அன்றாடமும் உண்டு வரலாம். எள்ளை உங்கள் உணவில் ஏதாவது ஒரு வகையில், நீங்கள் சேர்த்து வந்தால், உங்கள் உடல் எடையை அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.
பெண் குழந்தைகள் உடல் மெலிந்து காணப்பட்டால், கிராமப்புறங்களில் உள்ள வைத்தியர் பாட்டிகள், முதலில் உளுந்தை உணவில் சேர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். உண்மையில், பெண் குழந்தைகள் மெலிந்திருந்தால், உளுந்து சேர்த்த உணவுகள் மூலமாக எளிதாக தேற்றி விடலாம். மிகவும் ஒல்லியாக, உடல் எடை குறைவான பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு உளுந்து அதிகளவில் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், உளுந்து மட்டுமே கொண்டு செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கொடுத்துவரலாம். பெண் குழந்தைகளுக்கு உணவில் உளுந்து சேர்த்து வந்தால்,சரியான உடல் எடை கிடைக்கும்.
உடல் எடை குறைந்திருப்பதற்கு வயிற்றில் உள்ள அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் போன்றவையும் காரணம். இதுபோன்ற, நோய்களுக்கு ஆளாகி, உடல் மெலிந்திருப்பவர்கள், அன்றாடமும், காலை வேளையில் உடைந்த புழுங்கல் அரிசியில் வெந்தயம், சீரகம் சேர்த்து வடித்து இறக்கப்பட்ட கஞ்சியை அருந்தி வரலாம். நண்பகல் வேளையில், மோர் உட் கொண்டு வரலாம். மாலை வேளையில், வாழைப்பழம் சாப்பிட்டு வருவதை முக்கியமான வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுபோன்ற உணவுப் பழக்கமானது, குடல்புண்ணை ஆற்றி விடும். உடல் எடையில் மாற்றத்தை ஏற்படுத்திட உதவும்.
தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது என்கிற வழக்கமே தற்போது,
இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம், தேங்காய் விலை அதிகரிப்பு என்றாலும், கடைகளில் எல்லாமே ரெடிமேட் பொருட்கள் கிடைத்து விடுகின்றன என்கிற மற்றொரு காரணமும் உண்டு. உடல் மெலிந்து நோஞ்சானாக காணப்படுபவர்கள், ஒரு வாரத்தில்,குறைந்த பட்சம், இரண்டு முறைகளாவது தேங்காய்ப்பாலினை, உணவில் சேர்க்க வேண்டும்.உணவில் தேங்காய்ப்பாலை சேர்த்து வழக்கப்படுத்திக் கொண்டால், உடல் எடையில் மாற்றமும் ஏற்றமும் கிடைக்கும்.
கழிச்சல் நோயால் அவதிப்பட்டு வருபவர்கள், எவ்வளவு சாப்பிட்டாலும், வயிற்றில் தங்காமல் வெளியேறி விடும். இதனால், கழிச்சல் நோயால் அவதிப்படுபவர்கள் உடல் எடை குறைவாக இருப்பதையே உணர்வார்கள். கழிச்சல் நோய் உள்ளவர்களுக்கு, உணவு உண்டவுடனேயே மலம் கழிக்கத் தூண்டும். திடீரென வெளியில் கிளம்பி செல்லும்போதும், சூடான உணவுப் பொருட்கள் அல்லது காரமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, கழிச்சல் நோயின் பிடியில் உள்ளவர்களுக்கு மலம் கழிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். இவ்வாறு, கழிச்சல் நோயால் அவதிப்படுபவர்கள், கறிவேப்பிலை, மாதுளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைவான குழந்தைகளுக்கு வாழைப்பழங்கள் கொடுத்து வரலாம். வாழைப்பழத்தை உண்டு வரும் குழந்தைகள், உடல் எடை அதிகரித்து காணப்படுவர். வாழைப்பழ சிப்ஸ். வாழைப்பழ ஜூஸ் என வாழைப்பழம் கலந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர, உடல் மெலிந்த குழந்தைகள் அதிகளவில் உடல் எடையை பெறுவார்கள்.
சால்மன் மீன்:
உடல் மெலிந்து காணப்படுவோர் கவலைப்பட வேண்டாம்.உங்களுக்கான சுவையான மீன் டிப்ஸ் தான். அதுவேறொன்றுமில்லை. அன்றாடமும், ஒன்றோ அல்லது இரண்டோ என சால்மன் மீன்களை, உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், மெலிந்த உடல் வாளிப்பாக மாறி. உடல் தேறி விடும்.
சூரை மீன்:
மீன் வகையில் அதிகளவில் கொழுப்பமிலங்கள் கொண்டது சூரை மீன் தான். இந்த சூரை மீன்களில் உள்ள கொழுப்பமிலங்கள், உடல் மெலிந்திருப்போரின் எடையை கூட்டி, ஆரோக்கியத்துடன் வாழ உதவுகின்றது.
இறால்:
நீங்கள் கடல் உணவு சாப்பிடுபவராக இருக்கலாம்.அப்படி இருந்தும், உடல் எடை கூடவில்லையென்றால்,அன்றாடமும் இரண்டு முறைகளாவது, இறால் சாப்பிட்டு வரலாம். அவ்வாறு இறால் சாப்பிட்டு வரும்போது, மெலிந்திருந்த உங்கள் உடலில் எடை கூறி விடும்.
நெஞ்சுக்கறி:
நா சுவைக்க உண்ணும் கோழியின் நெஞ்சுக்கறியில் உடல் எடையை அதிகரிக்க உதவும் பொருட்கள் உள்ளன. கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, உணவோடு சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் போது, உடல் எடை அதிகரிப்பதை நீங்களே கண்கூடாக பார்க்க முடியும்.
மாட்டிறைச்சி:
நீங்கள் மாட்டிறைச்சியை உட்கொள்பவராக இருந்தால், உடல் எடையை அதிகரிப்பதில் பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியமிருக்காது.ஏனெனில், மாட்டிறைச்சியை தனியாகவோ அல்லது சாண்ட்விச் உடன் சேர்த்தோ உணவாக உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.உடல் மெலிந்து, எடை கூட மாட்டேன் என்கிறதே என்று கவலைப்பட்ட உங்களுக்கு, மாட்டிறைச்சி நல்ல பலன் தரும்.
முட்டை:
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதற்கான செயல்களில் இறங்க வேண்டும். அன்றாடமும் இரண்டு முட்டைகளை உணவில் சேர்த்து வரலாம். முட்டையில் உள்ள புரதச்சத்தும், அமினோ அமிலமும், கலந்துள்ளது. உடல் எடை விரைவில் அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள், அன்றாடமும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை உணவாக உட்கொண்டு வாருங்கள். அவ்வாறு, உணவாக உட்கொண்டு வரும்போது, உடல் எடையில் மாற்றம் வரும்.
சீஸ் மற்றும் பாலாடைக் கட்டி:
சைவ உணவு மட்டுமே உண்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால், பால்பொருட்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை உண்டு வரலாம். குறிப்பாக, நுரைமிக்க பாலில் இருந்து, செய்யப்படும் பாலாடை கட்டியில், சைவ உணவு உண்பவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. பால் பொருட்களில் புரதச்சத்தானது அதிகளவில் இருப்பதால், உடலில் போதுமான, கலோரிகளை வாரிக் கொடுக்கும். அதன்காரணமாக, விரைவாக உடலின் எடை அதிகரிக்கும்.
ஓட்ஸ்:
தொலைக்காட்சி விளம்பரங்களிலோ அல்லது பத்திரிக்கைகளின் விளம்பரங்களிலோ அதிகளவில், காணப்படுவது ஓட்ஸ். இந்த ஓட்ஸ் கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மெலிந்த உடல் வாளிப்பாக மாறி, உடல் எடை அதிகரித்து காணப்படும்.
கைக்குத்தல் அரிசி:
நாம் மறந்து போன கைகுத்தல் அரிசியில் அதிகளவிலான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த கைகுத்தல் அரிசியை இப்போதெல்லாம் நாம் சாதாரணமாக பார்க்க முடியவில்லை. கைகுத்தல் அரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், நார்ச்சத்தும் அதிகளவில் நிறைந்துள்ளன. கைகுத்தல் அரிசியை, உணவாக உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.
பாஸ்தா:
பாஸ்தா உடல் நலனுக்கு தோஸ்தா என்று சிறுவர்கள் விளையாட்டா சொல்வதுண்டு. இந்த பாஸ்தாவை உணவில் சேர்த்து, அல்லது தனியாக சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரித்து விடும். மெலிந்து நோஞ்சானாக காணப்படும் உடல், மிகவும் வாளிப்பாக இருக்க இந்த பாஸ்தா உதவுகின்றது.
கோதுமை சப்பாத்தி:
கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தி அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருக்கின்றது. கோதுமை உணவுகள் பெரும்பாலும், உடலுக்கு வலிசேர்ப்பவையே. கோதுமையை சப்பாத்தியாக செய்தோ அல்லது வேறு ஏதும் உணவுப் பொருளாக செய்தோ பயன்படுத்தினால்,மெலிந்த உடல், கம்பீர உடலாக மாறி விடும்.
பீன்ஸ்:
காய்கறி மார்கெட்டில் எப்போது போனாலும், முதலில் தென்படுவது இந்த பீன்ஸ்தான். இந்த பீன்ஸை உணவாக உட்கொண்டு வருவதால், உடல் எடை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு:
வீட்டில் நாம் உணவில் பயன்படுத்தும் சாம்பார் முதல் அனைத்து,சைட்டிஸ் வரையில், சமையலறையில் அனைத்து இடங்களிலும், வியாபித்து இருப்பது உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை உணவாக நாளும் பயன்படுத்தி வந்தால்,உடல் எடை அதிகரிக்கும்.
சேனைக்கிழங்கு:
சேனைக்கிழங்கு காய்கறிகளில் அதிகளவு ஸ்டார்ச் சத்துக்களை கொண்டது. இந்த சேனைக்கிழங்கினை உணவில் சேர்த்து உண்டால், நம் உடலில், 150 கலோரிகள் அதிகரிக்கும். சேனைக்கிழங்கினை அடிக்கடி உணவில் சேர்த்து பழகிக் கொள்ளுங்கள். அவ்வாறு சேர்த்து பயன்படுத்தும் போது, உடல் எடை அதிகரிக்கும்.