உடல் பருமன் ஆக வேண்டும் என்று ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் நொறுக்குத் தீனியை வாயில் போட்டு அரைத்துக் கொண்டே இருப்பார்கள். பாஸ்ட்புட், பீட்சா, பர்கர், இனிப்புகள் என்று கண்டதையும் அவர்கள் சாப்பிடுவதால் உடல் சற்று பருமன் ஆகி இருப்பதாக உணர்வார்கள் அல்லது மற்றவர்கள் கூறுவார்கள். இது ஊளைச் சதையினால் வந்த பருமன். ஆரோக்கியமற்ற, சத்து இல்லாத உணவுகளை ஒருவன் எடுத்துக் கொள்வதால் உடல் பலம் இழந்து போகிறது.
ஒரு மனிதன் ஆரோக்கியமான உணவுகளை, நேரத்துடன் உட்கொள்வதுடன் எளிய வகை உடற்பயிற்சிகளை செய்வதாலும், மனதை ஈர்க்கும் இசைகளை கேட்டு ரசிப்பதாலும் உடல் பருமனும், ஆரோக்கியமான உடலும் பெறுகின்றனர்.
உடல் பருமனாக..
1. வெந்தயக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடலுக்குப் பலம் கிடைக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொறி, சிரங்கை குணப்படுத்தும். அஜீரணத்தை போக்கும்.
2.வேப்பம் பூ, நிலவேம்பு இரண்டையும் நன்றக நசுக்கி, அதில் 1 தம்ளர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைத்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வடிகட்டி வேளைக்கு 2 ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர, காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் பலக்குறைவு குணமாகும்.
3. உடல் மெலிந்தவர்கள் குண்டாக வேண்டுமானால், வேப்பம் பூவை ஊற வைத்து குடிநீர் தயாரித்து தினமும் காலையில் பருகி வர வேண்டும். நீண்ட நாள்களாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆரஞ்சு பழ ரசம், ஆரஞ்சு பழத் தோல் சேர்த்த நீர், தக்காளிப் பழ இரசம், இவை மூன்றையும் சமமாகக் கலந்து அருந்தி வர இரத்தம் அதிகரிக்கும். நல்ல பலமும், உடல் சுறுசுறுப்பும் கிடைக்கும்.
4. முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து, உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வரவும். இதனால் கை, கால் வலி, உடல் அசதி நீங்கும். உடல் வலுவு பெற்று ஆரோக்கியமான உடல் பருமன் கிடைக்கும்.
5. கல்யாண பூசணி சாறு ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு பனை வெல்லம் சிறிது கலந்து ஒன்றாக கலக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் அருந்தி வர மூளைச் சோர்வு, உடல் அசதி, உடல் தளர்ச்சி குணமாகும்.
6. அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து உட்கொண்டு வர வேண்டும். காலை, மாலை இரண்டு வேளை என ஓரிரு மண்டலங்கள் சாப்பிட்டு வர உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
7. உடலில் இரும்புச் சத்துக் குறைவின் காரணமாக இரத்தச் சோகை காணப்படும். பேரிச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. உடல் இளைத்துக் காணும் இளம் வயதினர் பேரிச்சம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் தேறிவிடும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும். போகத்தினால் ஏற்படும் களைப்பு நீங்கும்.
8. அரிசி தவிட்டினை பனை வெல்லம் கலந்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வாயில் போட்டுச் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
9. வில்வப்பழம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் சதைப்பாகத்தை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, அதனுடன் சீனி, கற்கண்டு கலந்து சிறு நெல்லிக்காய் உருண்டை அளவு எடுத்துக் கொண்டு தினசரி காலையில் மட்டும் இரண்டு வாரங்கள் உட்கொண்டு வர உடல் பலம் பெறும். உடல் பருமன் கிட்டும். புளி, காரம் தவிர்க்கவும்.
10. 100 எருக்கம் பூக்களை எடுத்து நன்றாக உலர்த்தி ஜாதிக்காய், இலவங்கம், ஜாதிப்பத்திரி சேர்த்து, பன்னீர் விட்டு அரைத்து ஒரு எலுமிச்சை அளவு உருண்டை செய்து ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். உடலும் பலம் பெறும்.