செக்ஸ் உணர்வை அதிகரிக்க

Spread the love

செக்ஸ் உணர்வை அதிகரிக்க நிறைய மருந்துகள் இருக்கின்றன. எள்ளுருண்டை, உளுந்து வடை, பால், நெய், கோதுமை, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ, வெங்காயம், முருங்கைக்காய், பனங்கற்கண்டு, போன்றவை மிகவும் சிறந்ததாகும். அமுக்கிராப் பொடி, ச்யவனப்பிராச லேகியம் போன்றவற்றையும் இதனுடன் சாப்பிடலாம். பேரீச்சம் பழமும் மிகவும் நல்லது. ஒரு அவுன்ஸ் தண்ணீரில் இரண்டு பேரீச்சம் பழத்தை நறுக்கிப் போட்டு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளவும். நான்கு பாதாம் பருப்பை பொடித்து 1 சிட்டிகை குங்குமப்பூ 1 ஸ்பூன் முருங்கைப் பூ கலக்கவும். இது மிகவும் சிறந்த பலனை அளிக்கிறது.

செக்ஸ் எண்ணத்தைக் குறைப்பதற்கு கடுக்காய் கலந்த கஷாயத்தைப் பயன்படுத்தலாம். தூக்கத்தில் விந்து வெளியாகும் ஆண்களுக்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மிகவும் சிறந்ததாகும். மனதை மகிழ்ச்சியாக வைப்பது ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்விற்கு வழிவகுக்கும்.

நாட்டு அமுக்கிரா, சீமை அமுக்கிரா என்ற கிழங்குகள் மருந்துக் கடையில் கிடைக்கும். அவைகளில் ஒன்றை வாங்கிப் பெருந்தூளாக இடித்து வைத்துக் கொள்ளவும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேளைக்கு 3 &- 4 கிராம் எடுத்து 50 மி.லி. தண்ணீரும் 100 மி.லி. பசுவின் பாலும் சேர்த்துக் கொதிக்க வைத்து தண்ணீர் சுண்டிவிட்ட நிலையில் இறக்கி வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். காலை 6 மணி, இரவு படுக்கும் முன் இந்த பாலைச் சாப்பிட ஏற்ற வேளை.

மற்றொரு முறை அரை கிலோ அமுக்கிராக் கிழங்கை இட்லி வேக வைக்கும் பானையின் மேல் தட்டில் வைத்து, கீழே ஜலம் விடும் பகுதியில் 100 மி.லி. ஜலமும் 200 மி.லி. பசுவின் பாலும் விட்டு மூடி, இட்லி வேக வைப்பது போல் வேக வைக்கவும். ஆவியில் கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி கிழங்கு களை மைய இடித்து வெயிலில் உலர்த்தவும். உலர்ந்ததை நன்கு தூளாக்கிச் சம அளவு ஜீனி சேர்த்து 5 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பிறகு பாலுடன் சேர்த்து உட்கொள்ள என்றென்றும் 16 வயதாகவே திகழலாம்.


Spread the love