வயதாகும் போது செக்ஸ் குறைபாடுகுள் தென்பட்டால் குறைகளை போக்கிக் கொள்ள சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
புகைபிடித்தல், மதுபானம் வேண்டாம்.
ஞாபகம் இருக்கட்டும், செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் அவயங்கள் கெடாது. ஈடுபடாவிட்டால் தான் அவை பழுதடையும்.
வழக்கமாக தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டால் ‘டெஸ்டாஸ்டிரோன்’ உற்பத்தி அதிகரிக்கும்.
செக்ஸும் ஒரு உடற்பயிற்ச்சி தான். கூடவே நிஜ உடற்பயிற்சியும் செய்தால் இரட்டிப்பு நன்மை கிடைக்கும். எடை குறையும். ஆர்வம் நீடிக்கும். ரத்த ஒட்டம் ஒழுங்காக இருக்கும்.
வாலிப வயதில் இருப்பது போல் நடுவயது, வயோதிகத்தில் பாலுணர்வு இருக்காது. உங்கள் எதிர்பார்ப்புகளை குறையுங்கள். முன் விளையாடுவதை (Fore play) அதிகரியுங்கள். செயல்பாட்டை விட சந்தோஷத்தில் மனதை செலுத்துங்கள்.
புதுப்புது வழியில் கலவியில் ஈடுபடுங்கள். காலையில் உங்கள் சத்தி அதிகமாக இருக்கும். அப்போது கலவியில் ஈடுபடுங்கள்.
உங்கள் உறுப்பு விறைப்படையாவிட்டால் வேறு வழிகளில் துணைவியை திருப்திபடுத்துங்கள்.
சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.
டாக்டரிடம் செல்ல கூச்சப்படாதீர்கள்.
உடல் ரீதியான குறைபாடுகளின் அறிகுறிகள்
உங்கள் அவயம் விறைக்கும் போது “பலவீனமாக” இருந்தால், தூங்கும் போது விறைக்காவிட்டால் இல்லை சுய இன்ப பிரயத்தனங்களில் விறைக்காமல் போனால்
நீங்கள் முயற்சித்தாலும் விறைக்காமல் போனால்.
மனோ ரீதியான குறைபாடுகளின் அறிகுறிகள்
பல சமயங்களில் காலையில் எழுந்திருக்கும் போது ஆணுறுப்பு விறைத்திருத்தல்
சுய இன்ப பிரயத்தனங்கள் வெற்றி அடைந்தால்
தீடிரென்று உங்கள் குறைபாடுகள் தோன்றினால்.