தர்பூசணி
வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த தர்பூசணி ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என்று கூறப்படும். இது, கால்பந்து அளவு வெள்ளையும், பச்சையுமான கோடுகளை கொண்டது. ஒரு காலத்தில் வெயில் காலங்களில், தயிர், மோர், பான ஆகாரம், நீராகாரம் இவற்றை மட்டும் குடித்து உடல் சூட்டினை குறைத்த கிராம மக்கள் கூட தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். கிராமம், நகரம், பெருநகரம் என்று சாலை ஓரங்களிலும், பழக்கடைகளிலும், தர்பூசணி பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
என்ன தான் தர்பூசணி விலை மலிவாக இருக்குது, டேஸ்ட் அதிகமாக இருக்குதுன்னு நினைச்சு அதிகமாக சாப்பிட்டாலும் பிரச்சனை தான் வரும். தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால் தாகம், நாவறட்சி நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதுடன், மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு வராமல் தடுக்கிறது.
உடல் ஆரோக்கியம், குணமாகும் பிரச்சனைகள்:
முதியவயது பெண்களுக்கு இதயம் சீராக இயங்க உதவுகிறது மாதவிடாய் (மெனோபாஸ்) நின்று விட்ட பெண்களுக்கு, தர்பூசணியில் உள்ள எல்.ஆர்ஜினின் என்ற அமினோ அமிலம் இதய செயல்பாடுகளில் ஏதேனும் சிக்கல் இருப்பின் சரிசெய்து சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.
தர்பூசணியில் உள்ள எல்-சிட்ருவின் என்ற அவசியமான அமிலமானது உடலில் தசைகளை தளர்த்தி, இரத்த நாளங்களில் இறுக்கத்தை நீக்குகிறது. தர்பூசணி பழச்சாறுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து அருந்திவர, நீர்கடுப்பு குணமாகும். நீர்த்தாரை எரிச்சல், விந்து நீர்த்துபோதல் போன்ற குறைபாடுகள் நீங்கும். உடல் எடையை குறைக்க, இப்பழத்தில் சர்க்கரை அளவு மிகக்குறைவாக இருப்பதால், நீரழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம்.
உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், தாது உப்புகளும் தர்ப்பூசணியில் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, C மற்றும் பொட்டாசியம் மிக அதிக அளவிலும் இருந்து எரிசக்தி மிக மிக குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க இயலுகிறது. தர்பூசணியில் உள்ள லைகோபின் என்ற சிவப்பு நிறம் புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
என்ன தான் உயிர்சத்துகள், தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் எந்த உணவையுமே அளவுக்கு மீறியோ, ருசியாக உள்ளதே என்று அதிகமாகவோ சாப்பிட கூடாது. தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆண்மைக் குறைவு ஏற்படலாம்
அளவோடு சாப்பிடும் பொழுது தர்பூசணி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆண்களுக்கு விசேஷ சக்தியைத் தரும், இதுவே அதிகமாகும் பொழுது தசைகளைத் தளர்த்தி விடுவதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.
உப்புச்சத்து அதிகமாகி விடலாம்
இதய நோயினால் பாதிப்புள்ளவர்களின் உடலில் சோடியம் உப்பு குறைவாகவும், பொட்டாசியம் உப்பு அதிகமாகவும் இறுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. தர்ப்பூசணியில் இயல்பாகவே பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், அதுவே உப்புச்சத்து கூடுவதற்கு காரணமாகி விடுகிறது.
வயிற்று உபாதைகளைத் தரலாம்
அதிகளவு தர்பூசணியை சாப்பிடுவதால் சில நேரங்களில் வயிற்று பிரச்சனைகள் தோன்றலாம். லைகோபின் என்ற வேதிப்பொருள் காரணமாக இது ஏற்படுகிறது. அளவுடன் சாப்பிட புற்றுநோய் தோன்றுவதை தடுக்கிறது. காலை, மாலை என பிரிந்து, சிறிது சிறிதாக சாப்பிடுவது நல்லது.