அக்ரூட் என சொல்லக்கூடிய வால்நட் உணவு பொருட்களுக்கு அப்பார்பட்ட ஒரு அளவான பதிப்பு தான் என சொல்லலாம். எந்த பொருளில் அதிகபடியான நன்மைகள் இருக்கின்றதோ அது நமது பார்வைக்கு வெகு துரத்தில் தான் இருக்கும், அந்த வகையில் இந்த வால்நட் சொல்லலாம். ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரித்து வாழ்நாளை கூட்டுவதில் வால்நட் இன்றைக்கும் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஆயுர்வேதமும் இதைதான் கூருகின்றது.
இந்த நட்சில் இருக்கும் அமிலம் எலும்பை பலப்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வலுவான உடலமைப்பு பெறவும் வால்நட்ஸ் நல்ல தீர்வு நட்ஸில் அதிகபடியான கொழுப்பு சத்து, புரதம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் இ அடங்கியுள்ளது. இதில் இருக்கும் பி7 பயோடின், முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கும், வேர்கால்கள் உறுதிக்கும் உதவுகிறது.
அதோடு முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும் ஆற்றல் வால் நட்ஸ்க்கு இருக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3, மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இது நரம்பு மண்டல செயல்பாடுகளை எளிமைபடுத்தி, நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் போன்ற பிரட்சனையில் இருந்து காத்து இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்காமல் கட்டுபாட்டுக்குள் வைக்கிறது. வால்நட்ஸ் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்புகள் உருவாகும்.
இதனால் இதய கோளாறு ஏற்படாமல் கடைசியாக, வேலை அலைச்சல், மன அழுத்தம், உடல்வலி, கோவம், கவலை இவையெல்லாம் பெரிதாக பாதிப்பது தூக்கத்தை தான். தூக்கமின்மையால் துன்பப்படுகிறவர்கள் தினமும் அதற்கான மாத்திரை போடுவதை தவிர்த்து தூங்கபோவதற்கு முன்னால் ஒரு கப் பாலில் நெய் சேர்த்து கலக்கி குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதோடு விடியும் போதும் சுறுசுறுப்போடு எழுந்து கொள்ளலாம்.