நொச்சி வேர் சகல ரோக நிவாரணி

Spread the love

நொச்சி இலை மற்றும் வேர்ப்பட்டையின் சாரத்தை புண்ணிற்கு மருந்தாகத் தடவலாம். இதன் வேர்ப்பொடி மூலத்திற்கும், சீதபேதிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் வேர் நாள்பட்ட புண், குடற்புண், வயிற்றுப்புழு முதலிய பிரச்சனைகளுக்கு சிறந்த கிருமிநாசினியாகும். இதன் வேர்ப்பட்டையை உலரவைத்து இடித்து பொடியாக்கி ஒரு சிட்டிகையை தேனில் குழைத்து வாரம் இரு முறை காலையில் சாப்பிட்டு வர நரம்பு வலி, வாதப்பிடிப்பு முதலியவை குணமாகும்.

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷம், தலைவலிக்கு இது கைகண்ட மருந்தாகும்.நொச்சித் தைலம் பல நோய்களுக்கான சிறந்த நிவாரணியாகும்.

மருத்துவப் பயன்கள்

இதன் இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரை அவுன்ஸ் சாறில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து நான்கு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து மூட்டுவலி, இடுப்பு வலி உள்ள இடங்களில் பூச வலி காணாமல் ஓடிவிடும்.

மூட்டுவலி மற்றும் வீக்கம்

இதன் இலைகளை அரைத்து மூட்டுவலி உள்ள இடத்தின் மேல் கட்டி வர மூட்டுவலி மற்றும் வீக்கம் மறையும்.

வயிற்றுப் புழுக்கள் மறைய

இதன் வேர்களை நீரிலிட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருக வயிற்றுப்புழுக்கள் ஓடிவிடும்.

தலைவலி குணமாக

ஓரு கைப்பிடி இலைகளைப் போட்டு ஆவி பிடிக்க காய்ச்சல் தலைபாரம், சளிக்கட்டு போகும். இலைகளை நீரிலிட்டு கொதிக்கவைத்து குளித்துவர கீல்வாதம் மறையும்.இதன் இலைகளில் ஒற்றடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு நீங்கும்.இதன் இலையை சட்டியில் போட்டு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்குமளவிற்கு சூட்டில் ஒற்றடம் கொடுத்தால் வலி நீங்கும். இதை துவையல் போல் அரைத்து வலியுள்ள இடத்தில் பூச குணம் தெரியும்.

ஜலதோஷம் காய்ச்சல் குணமாக

அழுகி சீழ்பிடித்துள்ள நிலையிலுள்ள புண்களியக் கூட நொச்சித் தைலத்தால் குணப்படுத்தலாம்.இவ்விலையுடன் திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷக் காய்ச்சலுக்கு மிகவும் நல்லது. கேளா செவியையும் கேட்கவைக்கும்.

இலைகள், பூக்களின் மருத்துவ குணங்கள்

வேர்ப்பட்டையை உலர வைத்து பொடியாக்கி அதில் ஒரு சிட்டிகைப் பொடியை தேனில் குழைத்து வாரம் இருமுறை காலையில் சாப்பிட நரம்புவலி குணமாகும்.இலைகளை நெருப்பில் வதக்கி வீக்கமுள்ள இடத்தில் கட்ட வலி தீரும். வீக்கம் வடியும். இதன் இலைகளை ஒரு துணிப்பையில் போட்டு தலையணையாகப் பயன்படுத்த ஜலதோஷம் மறைந்துவிடும்.

பிரசவ குளியல்

பிரசவத்திற்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி குறைய இதன் இலைகளைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை சூடு படுத்திக் குளிக்கவேண்டும்.

வயிற்றுப்புண் குணமாக

இதனுடைய சாறு வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.  இதன் இலைச் சாறை தலைப்பகுதியில் தேய்த்து சில மணி நேரம் உடலில் ஊறவைத்து வெந்நீரில் இளஞ்சூட்டுடன் குளித்தால் கழுத்துவலி நீங்கி காதில் தங்கிய நீரும் வெளியேறும்.

வீக்கம், வாதப்பிடிப்பு குணமாக

இதன் இலைகள், பூக்களுடன் மணல் சேர்த்து வறுத்து இலேசான சூட்டில் கழுத்துப்பிடரி வலி ஏற்படுமிடத்தில் ஒற்றடம் கொடுக்க வலி போகும். மேலும், இதன் இலைகளை ஒரு துணியில் அடைத்து தலையணை போல் உபயோகிக்க தலைவலி, நரம்பு வலி, கழுத்துவலி, தலை நீரேற்றம், தலைபாரம் ஆகியவை குணமாகும்.  

                                                      திருமலா தேவி


Spread the love