இந்த வகை விட்டமின்கள் நீரில் கரைவதால், அதிகமாக எடுத்துக் கொண்டால் கூட, அதிகப்படி அளவு, சிறுநீர் மூலம் வெளிவந்து விடும் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் இந்த பிரிவைச் சேர்ந்த விட்டமின் H6, அதிகமாக எடுத்துக் கொண்டால் எல்லைப்புற நரம்புகள் (Peripheral neuropathy) பாதிக்கப்படும். விட்டமின் H1 (தியாமின்) அதிகமாக ஊசி மூலம் செலுத்தப்பட்டால் செலுத்தப்பட்டவருக்கு ‘அதிர்ச்சி‘ ஏற்படலாம். விட்டமின் H3 (நியாசின்) அதிகமானால் தமனிகள் (ரத்தக் குழாய்கள்) விரிவடையும். அரிப்பு ஏற்படலாம். அதிக நாட்கள் கொடுக்கப்பட்டால் கல்லீரல் சேதமடையும்.
விட்டமின் H2 (ரிபோஃப்ளாவின்) சிறுநீரை மஞ்சள் நிறமாக்கும் தவிர Methotrexate எனும் செல் மற்றும் புற்றுநோய் மருந்தின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.
விட்டமின் ‘சி‘ – ஒரு காலத்தில் தீங்கற்ற விட்டமின் என்று கருதப்பட்ட விட்டமின் ‘சி‘ யை தினமும் 1 கிராமுக்கு மேல் உட்கொண்டால் – Hyperoxaluria (சிறுநீரில் கால்சியம் ஆக்ஸலேட் இருப்பது) சிறுநீரகப்பாதைகளில் கற்கள் முதலியன உண்டாகலாம். ஜலதோஷம், கபம், சளி, ஜுரம் இவற்றுக்காக தினம் 4 கிராம் அளவில் விட்டமின் ‘சி‘ கொடுக்கப்பட்டு வந்தவருக்கு சிறுநீரகப்பாதைகளில் ‘கற்கள்‘ உண்டாகின.