தினசரி என்ன வைட்டமின் எவ்வளவு தேவை

Spread the love

வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது இப்பொழுதெல்லாம் ஃபேஷனாக மாறிவிட்டது.. வைட்டமின் மாத்திரைகள் மிகவும் விலையுயர்ந்தவை வைட்டமின் மாத்திரைகள், தேவையா இல்லையா என அறியாமலேயே பலரும் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு தான் இது. தினசரி என்ன வைட்டமின் எவ்வளவு தேவை என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுவது சரிதானா என்று பரிசோதித்து கொள்ளுங்கள்.

வைட்டமின்கள் இரசாயன பெயர் தினசரி தேவை அதிக பட்ச அளவு பரிந்துரைக்கப்படும் வியாதிகள்

ஏ ரெடினால் (Retinol) 700 (அ) 900 மைக்ரோகிராம் 3000 மைக்ரோகிராம் பார்வை குறைபாடுகள் குழந்தைகளின் உடல் வலிமையடைய சிறுநீரக கற்கள் உடலின் நோய் தடுப்பு சக்தி குறைபாடுகளாகும்.

பி 1 தியாமின் (Thiamine) 0.5 லிருந்து 2 மி.கி. பசி எடுக்க, பெரி – பெரி, மலச்சிக்கல், களைப்பு, முடிவளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, சருமம், தைராயிடு சுரப்பி

பி 2 ரிபோஃப்ளேவின் (Riboflavin) 0.7 லிருந்து 2.2 மி.கி. (Riboflavin) கண் கோளாறுகள் சருமம்

பி 3 நியாசின் (Niacin) (அ) நிகோடினிக் அமிலம் (Nicotinic acid) (ஆ) நிகோடினமைட் (Nicotinamide) 8 லிருந்து 26 மி.கி. 35 மி.கி பெல்லக்ரா (Pellagra) (சர்ம அழற்சிகள், கருநிறமடைதல் பேதி, நாக்கு புண்கள்)

பி 5 பென்டோதெனிக் அமிலம்) (Pantothenic acid) (அ) பென்டோதெனேட் (Pantothenate) 5 லிருந்து 10 மி.கி. (சரியாக நிர்ணயிக்க படவில்லை) வளர்சிதை மாற்ற கோளாறுகள். சருமம் உலர்ந்து போதல், உடல் வலிகள்

பி 6 பைரி டாக்சின் (Pyridoxin) 0.6 லிருந்து 2.5 மி.கி. 100 மி.கி. ரத்த தமனிகள் கடினமாதல், பேதி, அதிக உணர்ச்சி வசப்படுதல், பித்த பை கற்கள், நோய் தடுப்பு சக்தி குறைபாடுகள், தூக்கமின்மை.

பி 7 பையோடின் (Biotin) 0.6 லிருந்து 0.3 மி.கி. குறைபாடுகள் தூக்கமின்மை ரத்த தமனிகள் கடினமாதல் பேதி, அதிக உணர்ச்சி வசப்படுதல் பித்தப்பை கற்கள் நோய் தடுப்பு சக்தி

பி 12 கோபால்மின் (Cobalmin) 2 லிருந்து 3 மைக்ரோ கிராம் ரத்த சோகை களைப்பு

சி அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic Acid) ஆண்கள் 90 மி.கி., பெண்கள் 75 மி.கி. புகைபிடிப்பவர்களுக்கு 35 மி.கி. எக்ஸ்ட்ரா 2000 மி.கி. ஸ்கர்வி, பல், ஈறு பிரச்சனைகள், உடலின் நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்த, ஆஸ்டியோபொரோசிஸ்.

டி கால்சிபெரால் (Calciferol) 5 லிருந்து 10 மி.கிராம் 2000 மி.ஹி. ஆஸ்டியோபொரோசிஸ் முதலிய மூட்டு பிரச்சனைகள் ரிக்கெட்ஸ், எலும்பு பலவீனம் முதலியன.

இ டோகோபெரால் (Tocopherol) ஆண்கள் 10 மி.கி., பெண்கள் 8 மி.கி. 1500 மி.ஹி. மலட்டுத்தன்மை, பெண்களின் கர்பப்பை குறைபாடுகள், பார்வை கோளாறுகள், இதய கோளாறுகள், சோகை முதலியன.

கே ஃபிலோகிக்யுனோன் (Phylloquinone) 1 லிருந்து 2 மி.கி. இது குறைந்தால் ரத்தம் உறைவது நின்று விடும். சிறு காயம்பட்டால் கூட அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.


Spread the love