விழிகளுக்கான வைட்டமின்

Spread the love

வைட்டமின் A

ஆரோக்கியமாக வாழ்வதற்கும், உடலின் அன்றாட இயல்பான செயல்பாட்டிற்கும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றது. வைட்டமின்கள் அத்தியாவசியமானவை ஆனால் அதே சமயம் அவற்றை உடலால் உற்பத்தி செய்திட இயலாது. அவற்றை உடல் வெளி உணவிலிருந்து தான் பெற வேண்டும்.

இந்த வைட்டமின்கள் உணவு வாயிலாக தேவையான அளவு உடலுக்குக் கிடைக்கவில்லையெனில் உடல் அதனை பற்றாக்குறையை ஏதாவது நோய் வடிவத்தில் வெளியில் காட்டும் இதனையே மருத்துவர்கள் வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்கள் என வகைப்படுத்தியுள்ளன.

வைட்டமின்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தண்ணீரில் கரைபவை மற்றொன்று கொழுப்பு திரவத்தில் கரைபவை. வைட்டமின் B, C  போன்றவை தண்ணீரில் கரைபவை, வைட்டமின் A,D, E  மற்றும் K போன்றவை கொழுப்பு திரவத்தில் கரைபவை.

தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் உடலில் அதிகமாக சேர்ந்திட வாய்ப்பில்லை ஏனெனில் அவை தண்ணீரில் கரைப்பவையாக இருப்பதால் கரைந்து கழிவுகளுடன் வெளியேறி விடுகின்றது. ஆனால் கொழுப்பு திரவத்தில் கரையும் வைட்டமின் எளிதில் கரைவதில்லை அவை கழிவுகளுடன் வெளியேறுவதும் இல்லை. எனவே அவற்றை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும் தவறாகும். தேவைக்கு அதிகமாக வைட்டமின் B, C   போன்றவற்றை மாத்திரை வடிவில் எடுத்தால் எந்த வித தீங்கும் இல்லை ஆனால் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளைத் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது தவறானதாகும். அவை குறைவாக இருப்பதால் பிரச்சனைகள் வருவது போல கூடுதலாக இருந்தாலும் பிரச்சனைகள் வரும், அளவாக எடுத்துக் கொள்வது நலம். பலரும் இக்காலத்தில் தேவையோ இல்லையோ வைட்மின் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வதை பழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர் இது தவறாகும்.

வைட்டமின் A போன்ற வைட்டமின்களை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வதை விட இயற்கை உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்வது சாலச்சிறந்தது. உதாரணமாக வைட்டமின் A எடுப்பதற்கு பதிலாக மீன், முட்டைக்கோசு, லெட்டூஸ் மற்றும் காரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது எந்த தீங்கையும் விளைவிக்காது நன்மைகள் மட்டுமே தரும்.

கொழுப்பு திரவத்தில் கரையும் வைட்டமின்கள் உடலினுள் புகுந்ததும் அதனை உடல் முழுமையாக கிரஹித்துக் கொள்ள எல்லோராலும் முடியாது. 51% பேர்களால் தான் அதனை கிரஹிக்க முடியும். ஏனெனில் அதற்கு உடலில் போதுமான அளவு கொழுப்பு தேவைப்படுகின்றது. கொலெஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கு மருத்துவம் செய்து கொள்பவர்களும் குறைவான கொழுப்பு உட்கொள்பவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையாக அமைந்து விடும். இவ்வகையில் முக்கியமான வைட்டமின், வைட்டமின் A ஆகும்.

வைட்டமின் A

வைட்டமின் A ஒரு கொழுப்பு திரவத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையாகும். இவ்வகை வைட்டமின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது கண்களின் பார்வைக்கு மிகவும் அத்தியாவசியமானது. அது தவிர வைட்டமின் A – சரும நலத்திற்கு, சிறுநீரகங்களின் சீரான இயக்கத்திற்கு, ஜீரண மண்டல செயல்பாடுகளுக்கு, சிறுநீர் கழிவிற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். வைட்டமின் A மற்றும் E   உடலை நச்சுப் பொருட்களிலிருந்து காப்பதற்கும் மிக மிக அவசியமானவையாகும்.

அதிக வெளிச்சத்தில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் TV  பார்ப்பவர்கள், குறைவான வெளிச்சத்தில் வேலை செய்பவர்கள், வெல்டிங் வேலை செய்பவர்கள், சினிமா ஷீட்டிங்கில் வெளிச்சத்தில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இல்லாத வைட்டமின் A இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு குறைவான வைட்டமின் A  உடையவர்களுக்கு குறைவான வளர்ச்சி, தலைசுற்றல், பித்த தலைவலி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் A சிறுநீரகக் கற்களையும், பித்தப்பைக் கற்களையும் கரைக்கக் கூடியது. வைட்டமின் A குறைபாடினால் கூட இவ்வகைக் கற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வைட்டமின் A இயற்கையாக ஆரஞ்சு வண்ண பழங்கள் காய்கறிகள் போன்றவற்றிலும், மீன், மீன் எண்ணெய், பால், கல்லீரல் (இறைச்சி) போன்ற காய்கறிகளிலும் ஆரஞ்சு, பப்பாளி, பீச்சு, ஆப்ரிகாட், போன்ற பழ வகையிலும் அதிகம் காணப்படுகின்றது.

பச்சைக் காரெட்களாக சாப்பிட்டால் போதுமானதல்ல ஏனெனில் அவற்றில் உள்ள காரோடீன் வகைச் சத்து சமையல் செய்த பின் தான் எளிதாக வெளியேறுகிறது. அவற்றைத் தான் உடலும் எளிதாக கிரஹித்துக் கொள்ள முடியும். இது தவிர வைட்டமின் A ஐ உடல் எடுத்துக் கொள்ள அதற்கு போதுமான அளவு கொழுப்பும் தேவை எனவே பச்சைக் காரெட்டை உண்பதை விட சமைத்த காரெட் உண்பதே நல்லது.

வைட்டமின் A உற்சாக மூட்டக் கூடியது எனவே மாத்திரைகளாக உண்பவர்கள் இரவில் உண்பதை விட பகலில் உண்பது மேல். வைட்டமின் A ரெட்டினால் எனப்படுகின்றது. இது சராசரியாக பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு  750 IA தேவை. அதிக வைட்டமின் A உண்பதால் தசை பலஹீனம், சோர்வு, தூக்கமின்மை, செயல்பாடுக்குறைவு, மூக்கில் இரத்தம் வருவது சத்துக் குறைவு போன்றவை ஏற்படலாம்.

‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப அளவாக வைட்டமின் A எடுத்துக் கொண்டால் சிறப்பான உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.     

வைட்டமின் A பற்றாக்குறை பெரும்பாலும் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் போதிய அளவு போஷாக்கான உணவுகளை உண்ணாததால் தான் ஏற்படுகின்றது.

மூன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளிலும் இது ஏற்படுகின்றது. இதற்கும் காரணம் போஷாக்கான உணவு பற்றாக்குறையே போதிய அளவு பால் / முட்டை, மீன், காய்கறிகள், ஈரல், போன்ற போஷாக்கு நிறைந்த உணவுகளை உண்ணாததே காரணம். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது இக் குழந்தைகளில் கண்பார்வையே ஆகும்.

சிறுவர்களுக்கு, சைவமாக  இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் போதிய அளவு போஷாக்கு நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் இப்பிரச்சனை வருவதை தவிர்க்கலாம்.

குறைவதன் அறிகுறி

மாலைக்கண் நோய், மாலை நேரங்களில் கண்பார்வை மங்குவது, மற்றும் குறைந்த வெளிச்சத்தில் பார்வை குறைவது போன்றவை வைட்டமின் A குறைவாக இருப்பதன் அறிகுறி.

வைட்டமின் A உள்ள உணவுகள்

மீன்

மீன் எண்ணெய்

முட்டைக்கரு

ஈரல்

இறைச்சி

வெண்ணெய்

பாலாடை

கேரட்

கீரைகள்

தக்காளி

மஞ்சள் பூசணி

ஆரஞ்சு

கொய்யா

பப்பாளி

மஞ்சள் நிற காய்கள்

மஞ்சள் நிற பழங்கள்


Spread the love