சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மிகவும் பயனுள்ளவைகளாக உள்ளது. குறிப்பாக வைட்டமின்”இ” சருமத்திற்கு ஆரோக்கியத்தையும், அழகையும் தருகின்றது. இந்த வைட்டமின் இ சருமத்திற்குஎன்னென்ன பலன்களை தருகின்றது என பார்க்கலாம்.
ஆன்டி – ஆக்சிடண்டாக இருக்கின்ற விட்டமின் இ, சூரியனில் இருந்து வர கூடிய புற ஊதா கதிர்வீச்சு, மாசுக்கள், மெடிசின்ஸ் இதனால் ஏற்படும் செல்களை அழிக்கும்.இந்த வைட்டமின் இ பாதாம், பப்பாளி, நட்ஸ், வோக்கோசு , ப்ரோக்கோலி, வெண்ணெய், காலே, கடுகு கீரை, பாதம் எண்ணெய், வாத்து இறைச்சி இவையெல்லாம் பரவலாக இருக்கும்.
இ வைட்டமின் தோல் புற்று நோயை தடுக்கும். பல சரும நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுகின்ற வைட்டமின் இ, சொரியாசிஸ் மருந்தின் முக்கிய மூலக்கூறாக இருக்கு. சருமத்தில் வடியும் எண்ணெய் பசையை சீரான நிலையில் வைக்க உதவுகின்றது. வைட்டமின் இ இருக்கும் தைலத்தையும், டேப்லெட்டையும் பயன்படுத்துவதைவிட, அது சம்மந்தமான உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால்,அதன் முழு பலனை பெறலாம். அதற்கு நட்ஸ், விதை, காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் hazelnut oils,முளைத்த தானியங்கள் இவையெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
சருமம் வாடி, நல்ல செல்களை அழிப்பதனால், சூரியன் சருமத்தின் எதிரியாக இருக்கின்றது. அதன் raysஆல மரபணுக்கள் தாக்கப்பட்டு சருமம் பொலிவை மட்டுமல்ல, மீளும் தன்மையையும் இழந்து, முக சுருக்கம் ஏற்பட்டு, வயதான முக தோற்றம் வந்துவிடும். நாம் பயன்படுத்துகின்ற காஸ்மெட்டிக்ஸ்லயும் வைட்டமின் இ சேர்க்கப்படாத பொருட்களையே பார்க்க முடியாது. இப்படி செயற்கையாக வர வைட்டமினை விட, நமக்கு இயற்கையாக கிடைக்கின்ற வைட்டமினில் தான் உண்மையான பலன் இருக்கின்றது.