விட்டமின் ‘இ’

Spread the love

சர்ம ஆரோக்கியத்துக்க நண்பன்; நோய்களுக்கு எதிரி

அழகு சாதன பொருட்களை விரும்பாதவர்களே இல்லை. முகத்துக்கு பவுடர் கூட போடாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். விட்டமின்கள் உடல் வளத்திற்கு இன்றியமையாதவை. சர்ம ஆரோக்கியத்தை பொறுத்தவரை விட்டமின் ‘இ’ (ணி) யின் பயன்கள் அதிகம். அதனால் தான் விட்டமின் ‘இ’ உள்ள மேனி அழகு சாதனங்கள் சர்ம பாதுகாப்புக்கு பெரிதும் விரும்பப்படுகின்றன.

விட்டமின் ‘இ’ கொழுப்பில் கரையும் விட்டமின்களில் ஒன்று. காய்கறிகளிலும் மாமிச உணவுகளிலும் பரவியிருக்கும். இதன் முதன்மையான, முக்கிய குணம் – இது ஒரு சக்தி வாய்ந்த Anti – Oxidant. இரைப்பையில், விட்டமின் ‘ஏ’ மற்றும் பீடா கரோடின் (Beta Carotene) ஆக்ஸிகரணம் (Oxidation) ஆவதை தடுக்கிறது. சர்ம செல்களை, புற ஊதா (Ultra – violet) கதிர்வீச்சுகளிலிருந்தும், சுற்றுபுற மாசு, புழுதி, மருந்துகள் மற்றும் சர்மத்தை பாதிக்கும் Free Radicals பொருட்களிலிருந்து காப்பாற்றுகிறது. தவிர சர்மத்தின் இன்னொரு நண்பனான விட்டமின் ‘ஏ’ வை ஊக்குவித்து வழி நடத்துகிறது.

உடலில் தடவிக் கொண்டாலும் சரி, உள்ளுக்கு சாப்பிட்டாலும் சரி, விட்டமின் ‘இ’ சரீரம் இளமையாக இருக்க உதவுகிறது. முகச்சுருக்கங்கள், கோடுகள் முதலியவற்றை குறைக்கிறது. தவிர திக்ஷீமீமீ ஸிணீபீவீநீணீறீs வயதாவதை துரிதமாக்கும். இவற்றை ஒழிப்பதால், விட்டமின் ‘இ’ வயதாவதின் வேகத்தை குறைக்கிறது.

சர்மத்திற்கு எதிரி உஷ்ணம். அதுவும் வெய்யில் சூரியனின் வெப்பக் கதிர்கள் சருமத்தை தீய்த்து விடாமல் விட்டமின் ‘இ’ பாதுகாக்கிறது. வெப்பம் சரீரத்தை பாதிக்க விடாமல் தடுக்கும் லோஷன்களில் (Sun – Screen lotions) விட்டமின் ‘இ’ ஒரு முக்கிய பொருள். முழுமையான பாதுகாப்பை பெற, வெளியே வெயிலில் செல்வதற்கு 15 (அ) 20 நிமிடங்கள் முன்பே இந்த லோஷன்களை / கீரிம்களை முகத்தில், சூரியனின் உஷ்ணம் படும் இதர பாகங்களிலும் தடவிக் கொள்ள வேண்டும்.

சர்ம நோய்களுக்கு

சோரியாசிஸ், தோல் அழற்சியால் உண்டாகும் சிவந்த கட்டிகள், சினைப்புகளுக்கு விட்டமின் ‘இ’ மருந்தாகும். பருக்களாலும், அறுவை சிகிச்சையாலும், தோலில் உண்டாகும் தழும்புகளை விட்டமின் ‘இ’ போக்கும் என்ற கருத்து இப்போது காலாவதியாகி விட்டது.

சர்ம புற்றுநோயை தடுப்பதில் விட்டமின் ‘இ’ யின் பங்கு முக்கயமானது. இதன் Anti – Oxidant குணம் தான் இந்த பயனை தருகிறது.

விட்டமின் ‘இ’ யின் முழு பயனை அடைய, அதை உள்ளுக்கு சாப்பிடுவதை விட, சர்மத்தின் மேல் தடவிக் கொள்வது தான் சிறந்தது. சர்மம் மிகவேகமாக விட்டமின் ‘இ’ தைலத்தை உறிஞ்சிக் கொள்ளும். விட்டமின் எண்ணெயை உடலின் வேறு பாகங்களில் (முகம், கழுத்து) தவிர தடவ நேர்ந்தால், உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது.

விட்டமின் ‘இ’ இரண்டு உருவகங்களில் கிடைக்கும். ஒன்று ஆல்கஹால் ரூபத்தில் (Alpha – tocopheral) -இந்த டைப் தான் சர்மத்திற்கு உகந்தது. சர்மத்தின் உள்ளே ஊடுருவி செல்லும். இதுதான் அழகு, சர்ம சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு வடிவம் – ‘அசிடேட்’ (Alpha – tocopherol). இது சர்மத்தில் சரியாக ஊடுருவி செல்லாது. விட்டமின் ‘இ’ யின் பயன்கள் குறைந்திருக்கும்.

விட்டமின் உள்ள உணவுகள்

தாவர எண்ணெய்கள், தானியங்கள், முளைகட்டிய கோதுமை, கீரைகள், கொட்டைகள் வெண்ணை, பால், முட்டை, இறைச்சி. சர்ம ஆரோக்கியத்திற்கு தேவையான இன்னொரு விட்டமின் ‘ஏ’. கண் பார்வைக்கு இன்றியமையாத இந்த விட்டமின் குறைந்தால் சர்மத்தில் பருக்கள், சுருக்கங்கள், சீரற்ற ‘சீபம்’ சுரப்பு, சர்ம உலர்ந்து, மீள் சக்தி (Elasticity) இழப்பு ஏற்படலாம். விட்டமின் ‘ஏ’ உள்ள உணவுகள் – வெண்ணை, நெய், பால், தயிர், முட்டை, லிவர், மீன் எண்ணெய்கள், கீரைகள், கேரட், பரங்கிக்காய், பப்பாளி, மாம்பழம், தக்காளி, முட்டைகோஸ்.

விட்டமின் ‘இ’ மற்றும் ‘ஏ’ உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். சர்மத்திற்கும் நல்லது. கண்ணுக்கும் நல்லது.


Spread the love