ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை குறிப்பாக சருமத்திற்கு விட்டமின் ‘இ‘ ஆரேக்கியத்தையும், அழகையும் தருகிறது. விட்டமின் ‘இ’ ஒரு ஆன்டி – ஆக்சிடன்ட். புற ஊதா கதிர்வீச்சு, சுற்றுப்புற மாசுகள், மருந்துகள் இவற்றால் உண்டாகும் செல்களை அழிக்கும் ப்ரீ- ரேடிகல்களின் (Free Radicals) தாக்குதலிலிருந்து சருமத்தை காக்கும். வைட்டமின் ‘இ’ தரும்.
வைட்டமின் ‘இ’ தரும் பயன்கள்
பலவகை சரும அழகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களில் விட்டமின் ‘இ’ சேர்க்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதால் சருமம் இளமையாக இருக்கும். தோல் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படாது. ப்ரீ ரேடிகல்கள் சருமத்தை விரைவாக முதுமையடச் செய்யும். இவற்றை அழிப்பதாலும் விட்டமின் ‘இ’ சருமத்தின் இளமையை காக்கிறது.
விட்டமின் ‘ஏ’ வும் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஒரு விட்டமின் இதை உடலில் வழிப்படுத்துவதும் விட்டமின் ‘இ’ தான்.
சருமத்தின் எதிரி சூரியன். வெய்யிலின் வெப்பத்தால் சருமம் கருத்து வாடி விடும். சூரிய வெப்பத்தில் இருக்கும் புறஊதாகதிர்கள் (Ultra violet rays) தோலில் ஊடுருவி, ஆக்சிஜன் அணுமூலக்கூறுகளை சிதைத்து ப்ரீரேடிகல்களாக ஆக்கி விடும். இந்த ரேடிகல்கள் நல்ல செல்களை அழிக்கத் தொடங்கி விடும். லிபிடுகள் (கொழுப்பு), புரதங்கள், மரபணுக்கள் (DNA) இவைகளெல்லாம் தாக்கப்படுவதால் சருமம் பொலிவை மட்டுமல்ல, மீளும் தன்மை (Elasticity) யையும் இழந்து விடும். சுருக்கங்கள், வயது முதிர்ந்து வரும் தோலில் களங்ககள் உண்டாகும். ஏன், சரும புற்றுநோய் கூட வரலாம். விட்டமின் ‘இ’ யை உபயோகிப்பதால் சூரிய வெப்பத்திலிருந்து சருமம் பாதுகாக்கப்படும். ஃப்ரீரேடிகல்கள் அழிக்கப்படுகின்றன. சருமத்தின் இளமை காக்கப்படுகிறது.
பல சரும நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு விட்டமின் ‘இ’ உதவுகிறது. ‘சோரியாசிஸ்’ சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளில் விட்டமின் ‘இ’ சேர்க்கப்படுகிறது. ‘எரித்துமா’ (Erythema) என்ற தோல் அழற்சிக்கு நல்லது.
சருமத்திற்கு விட்டமின் ‘இ’ யின் முக்கிய பங்கு தோல் புற்று நோயை தடுப்பது. சூரிய வெப்ப பாதிப்பிலிருந்தும், ஃப்ரீரேடிகல் பாதிப்பிலிருந்தும் காப்பதால் புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது.
சருமத்தின் எண்ணைப் பசையை சரி சமமான நிலையில் வைத்திருக்கிறது.
தோலின் நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தோலிலிருந்து நீர் இழப்பை குறைக்கிறது.
விட்டமின் ‘இ’ தைலமாக, களிம்புகளாக தோல் பூச்சாக பயன்படுத்துவது,
அதை உள்ளுக்கு சாப்பிடுவதை விட சிறந்தது. தோல் சுலபமாக விட்டமின் ‘இ’ எண்ணையை உட்கிரகித்துக் கொள்ளும். தோலில் சில பாகங்களில் விட்டமின் ‘இ’ தைலத்தை தடவ முடியாமல் போனால், அப்போது விட்டமின் ‘இ’ காப்சூல்களை உட்கொள்ளலாம்.
விட்டமின் ‘இ’ இரண்டு ரூபங்களில் கிடைக்கும். ஆல்கஹால் ரூபத்திலும் (Alpha – tocopherol) மற்றும் அசிடேட் ரூபத்திலும் (Alpha – tocopherol) கிடைக்கும். இதில் அசிடேட் ரூபம் முழுமையாக தோலில் ஊடுருவாது. எனவே ஆல்கஹால் டைப் விட்டமின் ‘இ’ சிறந்தது. விட்டமின் ‘இ’ உள்ள உணவுகள் கொட்டைகள், விதைகள், காய்கறிகள், பழங்கள், மீன், தாவிர எண்ணைகள் மற்றும் முளை கட்டிய தானியங்கள் குறிப்பாக கோதுமை மற்றும் அரிசி.