சைவ உணவு – வைட்டமின் ‘பி’ – 12 போன்றவை மாமிச உணவில் தான் இருக்கும். சைவ உணவுகளில் கிடைக்காது. எனவே சைவ உணவு உண்பவர்களுக்கு பி 12 வைட்டமின் குறைபாடு உண்டாகும். இவர்கள் உணவில் பாலை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது மாத்திரைகளை, உட்கொள்ள வேண்டி வரும்.
சமச்சீர் உணவின்மை
பாலை ஏற்றுக் கொள்ள முடியாத (Lactose Intolerence) நிலைமை.
புகை பிடித்தல். ஒரே ஒரு சிகரெட் புகைப்பதால் ஒரு ஆரஞ்சுப் பழத்திலுள்ள வைட்டமின் ‘சி’ அளவு இழப்பு ஏற்படும்.
அதிகமாக ஆன்டி – பயாடிக் (Anti – Biotic) மருந்துகளை பயன்படுத்தினால் விட்டமின் ‘கே’ குறையும்.
காமாலை நோய்களும், பித்தப்பை கற்களும், வைட்டமின் ‘கே’ குறைபாட்டை உண்டாக்கும். காரணம் கல்லீரல் சுரக்கும் பித்த நீரின் உதவியால் தான் வைட்டமின் ‘கே’ உடலில் ஜீரணமாகிறது.
வைட்டமின்களின் வகைகள்
ஏகப்பட்ட வைட்டமிகள் இருந்தாலும் 13 வைட்டமின்களே முக்கியமானவை இவை
வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் – (எட்டு வைட்டமின்கள்)
வைட்டமின் ‘இ’
வைட்டமின் ‘கே’
வைட்டமின்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
- கொழுப்பில் ஏ, டி, இ மற்றும் கே இந்த பிரிவில் அடங்கும். கொழுப்பில் கரைவதால் இவை நாம் உண்ணும் கொழுப்பு செறிந்த உணவுகளிலிருந்து கிடைக்கும் கொழுப்புடன் கலந்து உடலின் பல பாகங்களை சென்றடைகின்றன. கொழுப்புகளில் சேமித்தும் வைக்கப்பட்டு தேவைப்படும் போது உபயோகப்படுத்தப்படுகின்றன. கொழுப்புத்திசுக்கள், கல்லீரல் இவற்றில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஒன்றிரண்டு நாட்களிலிருந்து ஆறு மாதங்கள் வரை இந்த வைட்டமின்கள் உடலில் தங்கியிருக்கும். எனவே கொழுப்பில் கரையும் வைட்டமின்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வாரத்தில் சில நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது. கொழுப்புகளில் கரையும் வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் ஆபத்தானது. இவற்றை சிறுநீர், வியர்வை, இதர கழிவுகள் மூலம் வெளியேற்ற முடியாது. ஏனென்றால் இவை நீரில் கரையாதவை. எனவே கொழுப்பில் கரையும் வைட்டமின்களை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளவும் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு குறைவாகவும் இருக்கக் கூடாது.
- நீரில் கரையும் வைட்டமின்கள் – உப்பு (அ) சர்க்கரை நீரில் கரைவது போல், இந்த வகை வைட்டமின்கள் ரத்தத்தில் சுலபமாக கரைந்து விடுகின்றன. ரத்தம் போகுமிடங்களில் சென்று, செய்ய வேண்டிய பணிகளை செய்கின்றன. மிச்சம் மீதி இருக்கும் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் சிறுநீருடன் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் தினசரி இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டில் ஆரோக்கிய நலிவு, வைட்டமின்கள் பற்றாக்குறையால் வரும் நோய்கள் தாக்கும் இந்த பிரிவில் அடங்குபவை – வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் ‘சி’
சமையலில் வைட்டமின்களின் இழப்பு
உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களைப்பற்றி பேசும் போது நாம் சமைக்காத மூலப்பொருட்களின் சத்தை குறிப்பிடுகிறோமோ தவிர சமைத்த பின் அந்த உணவுப் பொருட்களின் ஏற்படும் சத்திழப்பைப் பற்றி நினைப்பதில்லை. சாப்பிடும் மேஜையில் வந்து சேரும் உணவுகளில் உள்ள சத்தையே நாம் கணக்கிலல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தானியங்கள், மாமிசம், பருப்புகள் இவற்றை சமைப்பதால், கொழுப்பு, கார்போஹைடிரேட், புரதம் – இவற்றில் சத்து இழப்பு பெரிதாக ஏற்படாது. காய்கறிகளை உப்பு கலந்த நீரில் கொதிக்க வைப்பதால் சிறிதளவு புரத இழப்பு ஏற்படலாம். காய்கறிகளை வேக வைத்த நீரை வெளியே கொட்டிவிடாமல் இதர சமையலுக்கு பயன்படுத்தினால், இந்த இழப்பும் தவிர்க்கப்படும்.
காய்கறிகளை சிறிதாக நறுக்கி திறந்து வைத்தால் வைட்டமின் சி இழப்பு ஏற்படும். எனவே காய்கறிகளை பெரியதாக நறுக்கி உடனே கொதிக்கும் நீரில் போட்டு குறுகிய நேரத்தில் வேக வைத்து விட வேண்டும்.
காய்கறிகளை குறைந்த நீரில் மூடி போட்டு, வேக வைக்க வேண்டும். நீராவியில் (ப்ரஷர் குக்கரில்) வேக வைப்பது நல்லது.
கிழங்குகளை அவற்றின் தோலுடன் வேக வைப்பது நல்லது.
அரிசியை சமைக்கும் முன் கழுவுவதால் வைட்டமின்கள் (குறிப்பாக நீரில் கரைபவை) இழப்பு ஏற்படும். எனவே கூடிய மட்டும் குறைந்த நீரில் அரிசியை கழுவவும். அரிசியை கழுவுவதால் 40% வைட்டமின் பி 1 ம், வைட்டமின் பி 3 யும் கரைந்து வீணாகின்றன. புழுங்கலரிசி உபயோகித்தால் இந்த இழப்புகள் குறைவு.
அமிலத்தன்மை உள்ள நீரில் (புளி சேர்த்த நீர்) சமைத்தால், வைட்டமின்களின் இழப்பு குறைகிறது.
வைட்டமின் ‘ஏ’ உள்ள காய்கறிகளை அதிக நேரம் நீரில் ஊற வைத்தால், இந்த வைட்டமின் அழிய நேரிடலாம்.
அதிக சூட்டில் சமைக்கப்பட்டால் அல்லது சோடா உப்பு சேர்த்து சமைத்தால் வைட்டமின் B பிரிவின் பல வைட்டமின்கள் அழிந்து விடும்.
வெண்ணையிலிருந்து நெய் காய்ச்சப்படும் போது 25% வைட்டமின் ‘ஏ’ இழக்கப்படுகிறது.
முளை கட்டிய தானியங்கள், பருப்புகளை உபயோகித்தால், வைட்டமின் இழப்புகளை ஈடு செய்து கொள்ளலாம். வைட்டமின் பல தனிப் பொருட்கள் சேர்ந்த கூட்டுக்கலவை.
வைட்டமின் என்ற சொல் Vital + amine என்ற இரு வார்த்தைகளால் உருவானது. ‘டல்’ என்றால் இன்றியமையாத, அமைன் என்றால் நைட்ரஜன் கலந்து கூட்டுப்பொருள். இந்த பெயரை உருவாக்கியவர் காசிமீர்ஃபங் (Kazimierz Funk) என்ற போலந்து தேசத்து விஞ்ஞானி. வைட்டமின்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் பலன்களை பட்டியலிட்ட விஞ்ஞானிகள் கிரிஸ்டியன் எய்க்மன் (Christiaan Eijkman) மற்றும் ஃப்ரெடரிக் ஹாப்கின்ஸ் (Frederick Hopkins) இதற்காக இவர்களுக்கு 1929 ல் நோபல் பரிசு கிடைத்தது.
வைட்டமின்களின் இரசாயன பொருட்களை முழுமையான கண்டுபிடிக்கும் முன் அவைகள் ஏ, பி, சி, டி என்று ஆங்கில மொழியின் எழுத்துக்களாக குறிப்பிடப்பட்டன. இப்போது அவற்றின் இராசாயன பெயர்கள் (ரெடினால், தியாமின் முதலிய) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையும், வைட்டமின்கள் தினசரி தேவை போன்றவற்றையும் கீழ்க்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.
வைட்டமின்கள் இரசாயன பெயர் தினசரி தேவை அதிக பட்ச அளவு பரிந்துரைக்கப்படும் வியாதிகள்
1. ஏ ரெடினால் (Retinol) 700 (அ) 900 மைக்ரோகிராம் 3000 மைக்ரோகிராம் பார்வை குறைபாடுகள் குழந்தைகளின் உடல் வலிமையடைய சிறுநீரக கற்கள் உடலின் நோய் தடுப்பு சக்தி குறைபாடுகளாகும்.
2. பி 1 தியாமின் (Thiamine) 0.5 லிருந்து 2 மி.கி. பசி எடுக்க, பெரி – பெரி, மலச்சிக்கல், களைப்பு, முடிவளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, சருமம், தைராயிடு சுரப்பி
3. பி 2 ரிபோஃப்ளேவின் (Riboflavin) 0.7 லிருந்து 2.2 மி.கி.கண் கோளாறுகள் சருமம்.
4. பி 3 நியாசின் (Niacin) (அ) நிகோடினிக் அமிலம் (Nicotinic acid) (ஆ) நிகோடினமைட் (Nicotinamide) 8 லிருந்து 26 மி.கி. 35 மி.கி பெல்லக்ரா (Pellagra) (சர்ம அழற்சிகள், கருநிறமடைதல் பேதி, நாக்கு புண்கள்)
5. பி 5 பென்டோதெனிக் அமிலம்) (Pantothenic acid) (அ)பென்டோதெனேட் (Pantothenate) 5 லிருந்து 10 மி.கி. (சரியாக நிர்ணயிக்க படவில்லை) வளர்சிதை மாற்ற கோளாறுகள். சருமம் உலர்ந்து போதல், உடல் வலிகள்
6. பி 6 பைரி டாக்சின் (Pyridoxin) 0.6 லிருந்து 2.5 மி.கி. 100 மி.கி. ரத்த தமனிகள் கடினமாதல், பேதி, அதிக உணர்ச்சி வசப்படுதல், பித்த பை கற்கள், நோய் தடுப்பு சக்தி குறைபாடுகள், தூக்கமின்மை.
7. பி 7 பையோடின் (Biotin) 0.6 லிருந்து 0.3 மி.கி.குறைபாடுகள் தூக்கமின்மை ரத்த தமனிகள் கடினமாதல் பேதி, அதிக உணர்ச்சி வசப்படுதல் பித்தப்பை கற்கள் நோய் தடுப்பு சக்தி
8. பி 12 கேபால்மின் (Cobalmin) 2 லிருந்து 3 மைக்ரோ கிராம் ரத்த சோகை களைப்பு