ஃபோலிக் அமிலத்துடன் இணைந்து ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகிறது.
நரம்பு மண்டலம் சரிவர இயங்க உதவுகிறது.
ஃபோலிக் அமிலத்தைப் போலவே மரபணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
கார்போஹைடிரேட், புரதம், கொழுப்புகளை உடல் உட்கிரகிக்க உதவுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பெரியவர்களுக்கு ஆரோக்கியம் தரும் டானிக்காக உதவுகிறது.
புத்தி கூர்மையையும், ஞாபக சக்தியையும் தூண்டுகிறது.
பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தினசரி தேவைகள்
ஆண்கள், பெண்கள் – 1 லிருந்து 3 மைக்ரோகிராம், சாதாரணமாக தினம் (1 மைக்ரோ கிராம்)
பாலூட்டும் தாய்மார்கள் – 2 மைக்ரோ கிராம்
குழந்தைகள்
ஆறு மாதங்கள் வரை – 0.3 மைக்ரோ கிராம்
7-12 மாதங்கள் வரை – 0.4 மைக்ரோ கிராம்
1 முதல் 3 வயது வரை – 0.5 மைக்ரோ கிராம்
4 முதல் 6 வயது வரை – 0.8 மைக்ரோ கிராம்
7 முதல் 10 வயது வரை – 1.0 மைக்ரோ கிராம்
11 முதல் 14 வயது வரை – 1.2 மைக்ரோ கிராம்
15 வயதுக்கு மேல் – 1.5 மைக்ரோ கிராம் (குறைந்த பட்சம்
கிடைக்கும் உணவுகள்
கோபால்மின் (வைட்டமின் பி 12) குறைந்தால்
உடலின் எல்லா திசுக்களும் பாதிப்படையும்
முக்கிய பாதிப்பு – கெடுதலான ரத்த சோகை (Pernicious Anaemia) உண்டாகும். தவிர நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும். ஞாபக சக்தி குறையும்.
உடல் பலவீனம், களைப்பு, ஆயாசம் உண்டாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் உண்டாகலாம்.
மன அழுத்தம், சோர்வு, மனநிலை மாறுபாடுகள் ஏற்படலாம்.
சில நுண்ணுயிர்களால் (பேக்டீரியா) மட்டுமே கோபால்மின் வைட்டமினை தயாரிக்க இயலும். இவை தாவரங்களில் இல்லை. எனவே சைவ உணவுகளிலிருந்து பெற முடியாது. அசைவ உணவுகளில் முட்டை, மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, லிவர் மற்றும் பால், பால் பொருட்களில் உள்ளது.
இந்த வைட்டமின் எவற்றால் அழிகிறது
மற்ற வைட்டமின்களை போலவே சூரிய வெப்பதினாலும், உணவுகளை நெடுநேரம் ஊற வைத்து சமைத்தாலும் அழிந்து விடும்.
கோபால்மின் (வைட்டமின் பி 2 ) உள்ள உணவுகள்
எருமைப்பால் – 0.14
பசும்பால் – 0.14
வெள்ளாட்டுப் பால் – 0.05
எருமைத் தயிர் – 0.10
பசும் பால் தயிர் – 0.13
வெண்ணெய் நீக்கிய பால் பவுடர் – 0.83
மீன் (Shrimp) – 9.0
எருமை மாட்டிறைச்சி – 1.7
வெள்ளாட்டு மாமிசம் – 2.8
வெள்ளாட்டு லிவர் – 90.4
செம்மறியாட்டு லிவர் – 91.9
மட்டன் – 2.6