நீரில் கரையும் வைட்டமின்கள் ‘H’ குடும்பத்தை சேர்ந்த வைட்டமின் ‘H2, வைட்டமின் ‘H1 வுடன் இணைந்து பணியாற்றும். பெரி – பெரி நோயை கட்டுப்படுத்த வைட்டமின் ‘H 1 ஆல் மற்றும் முடியாது. கூடவே ‘H 2 வைட்டமினும் தேவை. இதன் விஞ்ஞான பெயர் ரிபோஃப்ளேவின். லத்தீன் மொழியில் ‘ஃப்ளேவஸ்‘ என்றால் ‘மஞ்சள்‘ என்று பொருள். மஞ்சள் நிற உணவுகளில் அதிகம் உள்ளதால் வைட்டமின் ‘H2, ரிபோப்ப்ளேவின் எனப்படுகிறது.
பயன்கள்
· உடலின் பொதுவான ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. பாலியல் உறவுகளுக்கு உதவுகிறது.
· உணவிலிருந்து சக்தியை பெற ஆக்சிஜனை உபயோகிக்க, செல்களுக்கு உதவுகிறது. புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேட்களின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இவற்றை உடல் சக்தியாக மாற்ற உதவுகிறது. இரும்புச்சத்து, வைட்டமின் H 6 இவற்றை உடல் ஜீரணிக்க உதவுகிறது. உடலின் ஈரப்பசையுள்ள ஜவ்வுகளின் ஆரோக்கியத்தை காக்கிறது. உதாரணமாக வாயின் “லைனிங்” (lining). ஈறு, உதடு, நாக்கில் ஏற்படும் புண்கள், காயங்களுக்கு வைட்டமின் H 2 அருமருந்து.
· சர்மத்திற்கும், கண்களுக்கு வைட்டமின் H 2 அருமருந்து சர்மம் உலர்வது, வெடிப்புகள் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும். கண்பார்வையை கூர்மையாக்கும். கண்புரை (Cataract) ளை தவிர்க்கிறது. வந்துவிட்டால் அதை குணப்படுத்த உதவுகிறது.
தினசரி தேவை
ஆண்கள் – 1.3 மி.கி. பெண்கள் 1.1 மி.கி.
கர்ப்பிணிகள் 1.4 மி.கி. பாலூட்டும் தாய்மார்கள் – 1.6 மி.கி.
சிறப்பம்சம்
வைட்டமின் H 2 நம் உடலால் நேரடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது நீரில் கரையும் வைட்டமின். நம் உடலில் அதிவேகமாக செலவாகும் வைட்டமின் இது தான். குறிப்பாக உடலுழைப்பு அதிகம் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள் முதலியவர்கெல்லாம் சீக்கிரம் செலவழிந்து விடும். எனவே தினசரி H 2 வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் H 2 உள்ள உணவுகள்
பால், சீஸ், இதர பால் சார்ந்த உணவுகள்
தானியங்கள், பருப்பு வகைகள், கைக்குத்தல் அரிசி, பாஸ்டா, கோதுமை ரொட்டி, சோயா
காய்கறிகள் – பீன்ஸ், பட்டாணி, பச்சைநிற காய்கறிகள்
பாதாம், முந்திரி
பழங்கள்
மாட்டிறைச்சி, மீன், முட்டையின் வெண்கரு
உடலில் வைட்டமின் H 2 குறைந்தால்
பெரும்பாலான மக்களிடம் வைட்டமின் H 2 குறைபாடு அதிகம் காணப்படுகிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும். பால் குடிப்பதை தவிர்க்க வேண்டாம். நாட்பட்ட நீரிழிவு, இதய நோய்கள் H 2 குறைபாட்டை உண்டாக்கலாம்.
வைட்டமின் H2 குறைந்தால், வாய், உதடு, நாக்கில் புண்கள் உண்டாகும். சாப்பிடுவது கஷ்டமாகும்.
கண்கள் பாதிக்கப்படும். வெளிச்சத்தை பார்க்கமுடியாமல் கண்கள் கூசும். கண்அரிப்பு, எரிச்சல் ஏற்படும். கண்களிலும் புண்கள் ஏற்படலாம். கண்புரை விரைவாக ஏற்படும்.
தோல் நோய்கள் ஏற்படும்.
பெரி – பெரி இது வைட்டமின் H 1 குறைபாட்டால் மட்டுமல்ல, H 2 குறைபாடாலும் ஏற்படும்.
வளர்சிதை மாற்ற (Metabolic) கோளாறுகள் ஏற்படும். வளர்ச்சி குறைபாடுகள் உண்டாகும்.
மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படலாம்.
கால் எரிவது போன்ற உணர்ச்சி, மறதி, உடல் நடுக்கம் ஏற்படலாம். நரம்பு மண்டல செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
H 2 அதிகமானால்
H 2 நீரில் கரையும் வைட்டமின் ஆனதால், அளவு அதிகரிப்பது அபூர்வம். அப்படி அதிகரித்தல் பார்வை கோளாறு, நரம்பு மண்டல கோளாறு, தோல் பாதிப்புகள் ஏற்படலாம்.
H 2 இழப்பு
வெளிச்சம் H 2 வைட்டமினின் பரம எதிரி. சூரிய ஒளி, விளக்கு ஒளி, அல்ட்ரா – வையலெட் கதிர்கள் H 2 வை அழித்து விடும். எனவே H 2 அதிகம் உள்ள உணவுகளை (முக்கியமாக பால்) வெளிச்சம் படாதவாறு மூடி வைக்க வேண்டும்.